Advertisment

கந்தர்வ நாடி! 42

/idhalgal/balajothidam/gandharva-nadi-lalgudi-gopalakrishnan-21

இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

42

கலில் சூரியனும், இரவில் சந்திரனுமே பிற கிரகங்களின்மீது ஆதிக்கம் செலுத்துவதால், லக்னமும், பிற கிரகங்களும் எந்த அளவு சூரிய, சந்திர ஒளியின் தாக்கத்தைப் பெறுகின்றன என்பதைப் பொருத்தே ஒரு ஜாதகத்திலுள்ள லக்னமும், கிரகங்களும் வலிமையைப் பெறுகின்றன. திதி, யோக, கரணங்கள் சூரிய, சந்திர தொடர்பு நிலைகளை விளக்குவதுபோல, பகலில் பிறந்தவர் களுக்கு சூரியன் நிலையை வைத்தும், இரவில் பிறந்தவர்களுக்கு சந்திரனின் நிலையை வைத்தும் கிரணங்களின் அளவினைக் கணக்கிடுவதே சூரிய, சந்திர கிரணக் கணிதம். கிரணங்களைக் கணக்கிட்டு லக்னம், கிரகங்களின் வலிமையைக் கணக்கிடும் முறையையும், அதற் கான பலன்களையும் "கந்தர்வ நாடி' விளக்குகிறது.

Advertisment

sivan

""பசுபதிநாதரே!

இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

42

கலில் சூரியனும், இரவில் சந்திரனுமே பிற கிரகங்களின்மீது ஆதிக்கம் செலுத்துவதால், லக்னமும், பிற கிரகங்களும் எந்த அளவு சூரிய, சந்திர ஒளியின் தாக்கத்தைப் பெறுகின்றன என்பதைப் பொருத்தே ஒரு ஜாதகத்திலுள்ள லக்னமும், கிரகங்களும் வலிமையைப் பெறுகின்றன. திதி, யோக, கரணங்கள் சூரிய, சந்திர தொடர்பு நிலைகளை விளக்குவதுபோல, பகலில் பிறந்தவர் களுக்கு சூரியன் நிலையை வைத்தும், இரவில் பிறந்தவர்களுக்கு சந்திரனின் நிலையை வைத்தும் கிரணங்களின் அளவினைக் கணக்கிடுவதே சூரிய, சந்திர கிரணக் கணிதம். கிரணங்களைக் கணக்கிட்டு லக்னம், கிரகங்களின் வலிமையைக் கணக்கிடும் முறையையும், அதற் கான பலன்களையும் "கந்தர்வ நாடி' விளக்குகிறது.

Advertisment

sivan

""பசுபதிநாதரே! ஒவ்வொரு உயிரும் தங்களைத் தற்காத்துக் கொள்ள, தாங்கள் சிறப்பான பாதுகாப்பைத் தந்தருளி யுள்ளதுபோல, மனிதர்களுக்கு அமைந்துள்ள பாதுகாப்பையும், அதன் சூட்சுமத்தையும் விளக்கி யருள வேண்டுகிறேன்'' என அன்னை பார்வதிதேவி, கேரள தேசத்தில் "பெருவனம்' எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு மகாதேவரை வணங்கிக் கேட்டாள்.

மகாதேவன் உரைத்தது- ""மனித னைத் தவிர பிற உயிர்களுக்குத் தன்னை மட்டுமே பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றல் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் மனிதர் களுக்கோ, தன்னையும், தன் இனத் தையும், உலகையும் காப்பாற்றும் சக்தியுடைய பகுத்தறிவு தரப் பட்டுள்ளது. பிறக்கும்போதே பகுத்தறிவு எனும் பெரிய அரண்மனை அவனுக்குப் பரிசளிக் கப்படுகிறது.

Advertisment

அவன் வாழும் நாளில், அதன் நந்தவனங் களையும், தடாகங்களையும், கொட்டிக் கிடக்கும் பொக்கிஷங்களையும் காண மறுக் கிறான். கொடுத்த சந்தனக்கட்டைகளை விறகாய் எரித்து மகிழ்கிறான். விலங்குகள்போல் இரை தேடுதலையும், இனப்பெருக்கத்தையுமே பிறவிப்பயனாய்க் கருதுகிறான். பகுத்தறிவை உணர்ந்தவன் ஆளுகிறான். அறியாதவன் அடிமையாய் மாளுகிறான். அறிவைக் காட்டுதல் மட்டுமே சிருஷ்டியின் கடமை; ஊட்டுதல் அல்ல. இதை உணர்ந்தோர் உயர்வார்.''

""வேதகிரியே! "லலிதம்' எனும் தாண்ட வத்தின் லயமாகிய பூச நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், மகம் இரண்டாம் பாதத்தில் சந்திரனும், அனுஷம் முதல் பாதத்தில் செவ்வாயும், பூராடம் முதல் பாதத்தில் குருவும், அவிட்டம் முதல் பாதத்தில் சுக்கிரனும், சதயம் இரண்டாம் பாதத்தில் சூரியனும், சதயம் நான்காம் பாதத்தில் சனியும், பூரட்டாதி நான்காம் பாதத்தில் புதனும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனை, தாங்கள் அருள் கூர்ந்து விளக்கவேண்டும்'' என்று திருச் செங்கோடு திருத்தலத்தில் அருள்புரியும் அர்த்தநாரீஸ்வரரை அன்னை பாகம் பிரியாள் வினவினாள்.

பழமலைநாதர் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில் வீடூர் எனும் ஊரில், நிலச்சுவாந்தார் குடும்பத்தில் ஒரே மகனாகப் பிறந்து, செல்வச் செழிப்புடன் வளர்ந்தான். இளம்வயதில், கூடா நட்பு கேடாய் விளைந் தது. தீயோரின் சேர்க்கையால் பொறுப் பற்றவனாக மாறினான். அவனுடைய தீய பழக்கங்களுக்காக, பணம் கேட்டு தந்தையைத் துன்புறுத்தினான். மதிமயங்கி, சொத்துக்காக தன் தந்தையை நயவஞ்சகத்தால் கொன்று விட்டான். "நின்று தின்றால் குன்றும் குறையும்' என்பதாக, மூதாதையர் நிலங்களை சரியாகப் பராமரிக்காததால், நூறு வேலி நிலமும் பாழானது. கவலையுற்றான். மாண்டது மீள்வதில்லை என்றுணர்ந்தான். காலம் வளர்ந்ததால், ஆயுள் குறைந்தது. காலன் அவனுயிரைக் களவாடினான். நரகம் அவனுக்கு இடமளித்தது. சிலகாலம் கழித்து, பூவுலகில் பூதவுடல் பெற்றான். ஒரு வணிகரின் மகனாகப் பிறந்தான். தந்தையின் தொழில் நலிவுற்றது. கவலையால் அவன் தந்தை வாழ மறுத்தார். இளம்வயதில் தந்தையை இழந்தான். தந்தை பட்ட கடனை சுமக்கும் பொறுப்பில் சிக்கினான். எதிர்காலம் கேள்விக்குறியானது. முன்ஜென்ம வினைப் பயனால் துன்புறுகிறான். இதற்குப் பரிகாரமாக, திருவிடைமருதூரில் வேதியரைக்கொண்டு பாவநிவர்த்தி ஹோமம் செய்தபின், வெள்ளியாலான பசுவின் பிரதிமையை தானம் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்தால் துன்பம் குறைந்து சுகமுண்டாகும்.''

(வளரும்)

செல்: 63819 58636

bala010219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe