இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
40
ஒரு பாவத்தின் பாவகாரக பலனில் குறைபாடு ஏற்படுமேயானால், அந்த குறைபாட்டின் தன்மையையும், அதன் மூலத்தையும் அந்த பாவத்தின் எட்டாம் பாவத்தைக்கொண்டு அறியலாம். பொதுவாக எட்டாம் பாவமென்பது, நிலத்திற்குக் கீழே வேர் மறைந்திருப்பதுபோல, ஒரு ஜாதகரின் முன்வினைப் பயனைக் காட்டக்கூடியது. முக்கியமாக சஞ்சித கர்மாவைக் கண்டறிந்து, பரிகாரம் செய்யும் முறையை "கந்தர்வ நாடி' விளக்குகிறது.
""செந்நிற அழலே! அறிதல் வேறு; உணர்தல் வேறு என்பதால், புனிதர்களும், புண்ணிய சாத்திரங்களும் கர்மாவின் வலிமையைப் பறைசாற்றினாலும், அதை அறியமுடிந்த மனிதர்களால் உணரமுடிவதில்லை. உணர்ந்தவர் மட்டுமே உயர்வு பெறுவார். மனித சிருஷ்டியிலேயே பாவ- புண்ணியங்களை, வாழும்போதே உணரும் உபாயத்தை உருவாக்கினால் மனித வாழ்வு மேம்படுமன்றோ? ஐயனே, எனது ஐயம் தீர உபதேசித்தருளுக'' என அன்னை ஆலாலசுந்தரநாயகி, நீடூர் எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு கான நிர்தன சங்கரரை வணங்கிக்கேட்டாள்.
யோகீசர் உரைத்தது- ""இல்லாததிலிருந்து இருப்பத

யோகீசர் உரைத்தது- ""இல்லாததிலிருந்து இருப்பதைப் படைக்கும் வல்லமையென்பதே சிருஷ்டியின் சிறப்பு. உறக்க மென்பது சிறிய மரணம்; மரணமோ நீள் உறக்கம். ஓவியத்திற்குள் ஓவியம்போல், வாழ்க்கையில் மனிதருக்கு நித்தமும் கனவு; முடிவில் வாழ்க்கையே கனவென்பதும் புரியும்.
உடலாய், உயிராய், எல்லாமுமாய் இயங்கும் மனதின் சுய தரிசனமே கனவு. மனிதன் தன் கனவினாலேயே தான் செய்யும் பாவ- புண்ணியங்களை உணர்கிறான். முடிவில் மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஒன்றாய்க்கூடி உயிருள் ஒடுங்கும். அது, ஆழ் உறக்கத்தில் பிரம்மத்தின் சுகானுபவத்தில் ஆழ்ந்துவிடும். அதில் ஜீவன் அனைத்து பாக்கியங்களையும் அடைகிறது. ஜீவர்கள் அனுதினமும் கிடைக்கும் அருளாகிய நவநிதியை காமம், குரோதம், லோபம், மதம், மாத்சர்யம் எனும் திருடர்களிடம் பறிகொடுத்துவிடுகிறார்கள். ஏறிச்சென்றவர் ஏணியை சுமப்பதில்லை. கரையை அடைந்தபின் ஓடத்தில் அமர்வதில்லை. அதுபோல முன்ஜென்ம கர்மாவால் வரும் வினைப்பயனைத் தவிர்க்க இயலாது என்றாலும், அதனுடன் பந்தப்படாமல் அவற்றைக் கடந்து செல்லவேண்டும்.''
""ஐந்தொழில் தலைவனே! "ரேசித நிகுட்டம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய பூச நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும், மகம் முதல் பாதத்தில் சந்திரனும், அனுஷம் நான்காம் பாதத்தில் குருவும், பூராடம் இரண்டாம் பாதத்தில் புதனும் சூரியனும் சேர்ந்திருக்க, திருவோணம் நான்காம் பாதத்தில் சுக்கிரனும், சதயம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், ரேவதி மூன்றாம் பாதத்தில் சனியும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனை, தாங்கள் அருள்கூர்ந்து விளக்க வேண்டும்'' என்று காளையார் கோவில் திருத்தலத்தில் அருள்புரியும் சொர்ணகாளீஸ்வரரை அன்னை சொர்ணவல்லி வினவினாள்.
பிறைசூடன் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகி முற்பிறவியில் கோட்டைப் பட்டிணத்தில் பெண்ணாகப் பிறந்து, வறுமையில் வாடினாள்.
நேர்மையாக வாழ விரும்பாமல், தீய எண்ணம் கொண்டு, குழந்தைகளைத் திருடி மழலைச்செல்வம் இல்லாதோருக்கு விற்றுப் பலனடைந்தாள். பெற்றோரைப் பிரிந்த மழலையரின் கண்ணீரும், மழலையரைப் பிரிந்த பெற்றோரின் கம்பலையும் அவளைப் பாவத்தில் மூழ்கடித்தன. முதிர் கன்னியாகவே வாழ்க்கையைச் சுமந்தாள். முதுமையில் அவள் உயிர்ப்பறவை, உடல்கூட்டை விட்டது. நரகத்தின் இடிபாடுகளிடையே சிக்கித் தவித்தபின் பூவுலகிற்கு மீண்டாள். "போஜ்பூர்' என்ற ஊரில் ஒரு வணிகரின் மகளாகப் பிறந்தாள். இளமைக்கனவில் ஒரு கனவானைக் கணவனாய் பெற்று மணவாழ்க்கைக்குள் புகுந்தாள். காலம் காற்றின் வேகத்தில் கரைந்தது. அவள் பெற்ற பிள்ளைகள் இளம்வயதிலேயே இறந்ததால் கலக்கமுற்றாள். கன்றினைப் பசுவிடமிருந்து பிரிப்பதுபோல், மழலையரைப் பெற்றோரிடமிருந்து பிரித்த பாவத்தால் வந்த முன்ஜென்ம வினைப்பயனேயிது. சந்தான கோபால ஹோமம் செய்தபின் ஒரு பசுவையும் கன்றையும் தானமாகத் தந்தால் பாவம் நீங்கிப் பலன் பெறுவாள்.''
(வளரும்)
செல்: 63819 58636
____________
நாடி ரகசியம்
1. ஐந்தாம் பாவாதிபதி, இரண்டு மற்றும் பதினோராம் பாவாதிபதிகளுடன் தொடர்புகொள்ளும் தசா- புக்தி- அந்தரங்களில் புத்திர பாக்கியம் உண்டாகும்.
2. ஐந்தாம் பாவாதிபதி, நான்கு மற்றும் மூன்றாம் பாவாதிபதிகளுடன் தொடர்பிலிருக்க, செயற்கை முறையில் புத்திரபாக்கியம் அமையும்.
3. ஐந்தாம் பாவாதிபதி, எட்டு மற்றும் பன்னிரண்டாம் பாவாதிபதிகளுடன் சம்பந்தப்பட்டால், புத்திரரின் ஆயுளுக்கு தோஷம் ஏற்படும்.
கேள்வி: நோய்கள், கடன் தொல்லைகள் நீங்குவதற்கான எளிய பரிகாரங்கள் "கந்தர்வ நாடி'யில் குறிப்பிடப்பட்டுள்ளனவா?
பதில்: உடல் ஆரோக்கியம் கெடுதல், நிதி நெருக்கடியால் கடன் வாங்குதல் போன்ற துயரங்களை ஜாதகத்தின் ஆறாம் பாவத்தால் அறியலாம். ஒரு பாவத்தால் ஏற்படும் தீய பலன்களை, அதன் பன்னிரண்டாம் பாவம் வலுவிழக்கச் செய்யும். ஆறாம் பாவத்தின் பன்னிரண்டாம் பாவமாகிய ஐந்தாம் பாவம் வலுப்பெறும்போது, ஆறாம் பாவத்தினால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும்.
ஜாதகத்தின் ஐந்தாம் பாவம் என்பது குலதெய்வம், இயற்கை தரும் ஆற்றல், விருட்ச விருத்தி போன்றவற்றைக் குறிக்கும். குலதெய்வ வழிபாடும், கோவில் நந்தவனங்களில் மரம், செடிகளை நடுவதும் நல்ல பரிகாரங்களாக அமையும். செடிகளில் மலர்கள் பூத்துக்குலுங்குவதுபோல நம் வாழ்விலும் சந்தோஷம் மலரும். பாலிகை, முளைப்பாரி எடுப்பது போன்றவையும் இதன் அடிப்படையில் உருவானதே. லக்னம், ராசி, சூரியன் மற்றும் ஐந்தாம் பாவாதிபதி, ஐந்தாம் பாவத்திலுள்ள கிரகம் போன்றவற்றைக் கருத்தில்கொண்டே நடவேண்டிய தாவர வர்க்கத்தைத் தீர்மானிக்கவேண்டும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.