இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
39
ஒரு நட்சத்திரம், தான் அமையும் ராசியிலேயே வர்க்கோத்தமமாவது சிறப்பானது.
அஸ்வினி, பூரம், உத்திராட நட்சத்திரங்களின் முதல் பாதமும், ரோகிணி, சித்திரை, உத்திராடம் இரண்டாம் பாதமும், சித்திரை, சதய நட்சத்திரங்களின் மூன்றாம் பாதமும், புனர் பூசம், அனுஷம், ரேவதி நட்சத்திரங்களின் நான்காம் பாதமும் அதிக வலிமையுடையவை. இந்த நட்சத்திர பாதங்களில் லக்னம் அல்லது லக்னாதிபதி அமையப்பெற்ற ஜாதகர்கள் புகழும் ஏற்றமும் பெறுவார்கள். ஒவ்வொரு நட்சத்திர பாதத்திலும் லக்னம், லக்னாதிபதி, மற்ற கிரகங்கள் அமையும் பலன்களை "கந்தர்வ நாடி' விளக்குகிறது.

""வேதநாயகரே! இவ்வுலகிலுள்ள எல்லா மனிதர்களும் பிறக்கும்போது ஒரே குணமுடைய வர்களாயிருந்தாலும், அவர்களின் உற்ற தோழனாகிய மனதுடன் தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரும்போது மாறிவிடு கிறார்கள். மனமே ஆசைகளை உருவாக்கி பாவமெனும் ஊதியத்தைப் பெற்றுத்தருகிறது. அனைத்தையும் அறிந்த தாங்கள், மனமெனும் மாயப் பெரும்பேயை படைத்ததன் காரணத்தை விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை வித்யுஜோதி நாயகி, திருக்கடம்பூர் திருத் தலத்தில் உறையும் அருள்மிகு அமிர்த கடேஸ்வரரை வணங்கிக்கேட்டாள்.
சோமாஸ்கந்தர் உரைத்தது- ""மனதை உடையதாலேயே மனிதன் என்ற பெயர் பெற்றான். மனமே உயிரையும் உடலையும் இணைக்கும் பாலம். மனம், பஞ்சபூதங்களின் கூறுகளாலான நிர்குண பிரும்மம். காற்றால் நெருப்பின் உருவம் மாறும். இடத்தால் மண்ணின் மணமும் மாறும். சீதம், உஷ்ணத்தால் காற்றின் திசையும் மாறும். ஓடையும் அருவியும் சுவையால் மாறும். ஒளியால் ஆகாயத்தின் நிறமும் மாறும். எண்ணங்களே வண்ணங்கள். எண்ணங்கள் இல்லாத மனமே வெட்டவெளி. மனம் செய்யும் பாவ, புண்ணியங்களின் பலன்கள் மனதை மட்டுமே சேரும் என்பதை உணர்வாயாக.''
""கற்பகத்தருவே! "அர்த்தமத்தல்லி' எனும் தாண்டவத்தின் லயமாகிய புனர்பூச நட்சத் திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், பூசம் நான்காம் பாதத்தில் சந்திரனும், விசாகம் இரண்டாம் பாதத்தில் குருவும், கேட்û ட மூன்றாம் பாதத்தில் புதனும், பூராடம் இரண்டாம் பாதத்தில் சனியும், திருவோணம் முதல் பாதத்தில் சூரியனும், திருவோணம் நான்காம் பாதத்தில் சுக்கிரனும், சதயம் முதல் பாதத்தில் செவ்வாயும் அமையப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் அருள்கூர்ந்து விளக்க வேண்டும்'' என்று திருஆப்பாடி எனும் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீபாலுகந்த ஈஸ்வரரை அன்னை பெரியநாயகி வினவினாள்.
ரிஷப தாண்டவர் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில், கச்சியம்பதியில் பெண்ணாகப் பிறந்து, பருவத்தே திருமண பாக்கியம் பெற்றாள். திருமணத்தின் பயனாய், ஒரு பெண்மகவைப் பெறும் பேறைப் பெற்றாள்.
நெடுநாளாகியும் தன் மகளின் திருமணம் நடவாமல் போனதால் மனம் நொந்தாள்.
உற்றார்- உறவினர்மேல் பொறாமை கொண்டு, அவர்கள் வீட்டுப் பெண்களைப் பற்றி அவதூறு பேசி, பல திருமணங்களைத் தடுத்து நிறுத் தினாள். மனவருத்தமே நோயாகி, மாண்டாள். நரகத்தில் நலிவுற்றாள். சிலகாலம் கழித்து சஞ்சித கர்மா தந்த உடலோடு இப்பூலகில் பூபாலன் என்ற ஆண் பெயரிடப்பட்டு வளர்ந்தான். முன்ஜென்மத்து தீவினையால் பருவம் அடையும் காலத்தில் வல்லினத்து உடலோடு (ஆண்), மெல்லினத்தின் மனதோடு (பெண்) இடையினம் (திருநங்கை) ஆனதால், சோகமே மொழியானது. இதற்கு மாற்று இல்லாவிடினும், இப்பிறவியில் நன்மைகள் செய்து மறுபிறவியில் நலம்பெறலாம்.''
(வளரும்)
செல்: 63819 58636