Advertisment

கந்தர்வ நாடி! 35

/idhalgal/balajothidam/gandharva-nadi-lalgudi-gopalakrishnan-15

இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

35

ரு ஜாதகர் பிறந்த நாளும் நேரமும் தெரியாத நிலையில் கணிக்கப்படுவதே "நஷ்ட ஜாதகம்.' பொதுவாக ஜாதகர் கேள்வி கேட்கும் நேரத்தை மட்டுமே கணக்கில் கொண்டு ஜாதகத்தை அமைக்கும் முறையே வழக்கத்திலுள்ளது. ஆனால், சமயம், Gandharva Nadi!திசை, ஸ்வராயு (சரம்), அவஸ்தை, ஸ்பரிசம், ஆருட ராசி, ஆருட ராசியின் திசை, பிரச்ன அக்ஷரம், ஸ்திதி, சேஷ்டா, மனோபாவம், விலோகனம் (ஜாதகர் பார்க்கும் திசை), வஸனம் (ஜாதகரின் ஆடை), நிமித்தம் எனும் பதினான்கு அம்சங்களைக் கருத்தில் கொண்டே நஷ்ட ஜாதகத்தைக் கணித்தல் வேண்டும். இந்த முறையையே, எல்லா ஜாதகத்திலும் ஜனன நேர சரிபார்த் தலுக்கும், திருத்தத்திற்கும் பயன்படுத்த வேண்டுமென்பதே "கந்தர்வ நாடி'

இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

35

ரு ஜாதகர் பிறந்த நாளும் நேரமும் தெரியாத நிலையில் கணிக்கப்படுவதே "நஷ்ட ஜாதகம்.' பொதுவாக ஜாதகர் கேள்வி கேட்கும் நேரத்தை மட்டுமே கணக்கில் கொண்டு ஜாதகத்தை அமைக்கும் முறையே வழக்கத்திலுள்ளது. ஆனால், சமயம், Gandharva Nadi!திசை, ஸ்வராயு (சரம்), அவஸ்தை, ஸ்பரிசம், ஆருட ராசி, ஆருட ராசியின் திசை, பிரச்ன அக்ஷரம், ஸ்திதி, சேஷ்டா, மனோபாவம், விலோகனம் (ஜாதகர் பார்க்கும் திசை), வஸனம் (ஜாதகரின் ஆடை), நிமித்தம் எனும் பதினான்கு அம்சங்களைக் கருத்தில் கொண்டே நஷ்ட ஜாதகத்தைக் கணித்தல் வேண்டும். இந்த முறையையே, எல்லா ஜாதகத்திலும் ஜனன நேர சரிபார்த் தலுக்கும், திருத்தத்திற்கும் பயன்படுத்த வேண்டுமென்பதே "கந்தர்வ நாடி' கற்றுத்தரும் உபாயம்.

Advertisment

""விமலனே! வாழ்க்கையில் சிறிய துன்பம் வந்தாலும், ஆதவன் ஒளியில் அகப்பட்ட புழுவாய்த் துவளும் மானிடருக்கு, கடினமான ஆன்மிகப்பாதையில் செல்லுதல் சாத்தியமா?'' என அன்னை அபிராமவல்லி, கீழையூர் திருத்தலத்தின் அருளாளர் கடைமுடிநாதரை கைதொழுது கேட்டாள்.

அதற்கு தென்னாடுடையான் உரைத் தது- ""தொலைதூரத்திலிருந்து காணும்போது மலை என்பது மலைப்பாகவே இருக்கும். மலையேறும் பயணத்தைத் தொடங்கினால் மலையே பாதையாக மாறும். ஆன்மிக மலையின் உச்சத்தைத் தொடும் போது, கடந்துவந்த பாதையும், பொருளும் சிறிதாவதைக் காண் பார்கள். ஏற்றத்தாழ்வுகள் அகலும். விவேக மில்லாத வீரம் கண்களற்றது. வீரமில்லாத விவேகம் கால்களற்றது. வீரத்தையும் விவேகத் தையும் ஒருசேரப் பெற்றவரே "தன்னையறிதல்' எனும் ஆன்மிகத்தை அறியவல்லார்.''

gandharva

""நேயத்தே நின்ற நிமலனே!

Advertisment

"புஜங்கத்ராசிதம்' எனும் தாண்ட வத்தின் லயமாகிய திருவாதிரை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், மகம் மூன்றாம் பாதத்தில் சூரியனும், மகம் நான்காம் பாதத்தில் சுக்கிரனும், பூரம் நான்காம் பாதத்தில் புதனும், சித்திரை முதல் பாதத்தில் குருவும், ஸ்வாதி முதல் பாதத்தில் சனியும், கேட்டை இரண்டாம் பாதத் தில் சந்திரனும், ரோகிணி மூன்றாம் பாதத்தில் செவ்வாயும் அமையப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பல னைத் தாங்கள் தயைகூர்ந்து விளக்க வேண்டும்'' என்று திருக்கோலக்கா எனும் திருத்தலத்தில் அருளாட்சி புரியும் சப்தபுரீஸ்வரரிடம் அன்னை ஓசை நாயகி வினவினாள்.

தோடுடைய செவியன் உரைத் தது- ""தேவி! இந்த ஜாதகன் முன்ஜென் மத்தில் தாளவாடி எனும் ஊரில் பிறந்து, ஜெயந்தன் எனும் பெயருடன் வாழ்ந்தான். திருமணமாகி, தன் குடும் பத்தை நல்லமுறையில் பராமரித்து வந்தான். ஜெயந்தனின் நண்ப ரொருவர் இறக்கும் தறுவாயில், பருவ மடைந்த தன் மகளைப் பாதுகாக்க வேண்டி ஜெயந்தனிடம் ஒப்ப டைத்துவிட்டு காலமானார். காமம் கண்ணை மறைக்க, அந்தப் பெண்ணின் கற்பைக் களவாடினான். அந்தப் பெண் அபலையானாள்.

அழுது அந்தப் பெண் இட்ட சாபத்தை, தர்மதேவதை தொழுது ஏற்றது. உடலெங்கும் புண்கள் உண்டாகி, மேனி அழுகி, அவன் உயிருக்கு, உடல் பயனற்றுப் போனது. தன்னை சரணாகதியடைந்த பெண்ணை ஏமாற்றியதாலும், நண்பனுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததாலும், "தாமிஸ்ரம்', "ரௌரவம்' எனும் இரண்டு நரகங் களிலும் வேதனையுற்று, எஞ்சிய சஞ்சித கர்மாவைக் கரைக்க பூவுலகம் சென்றான்.

இப்பிறவியில் புதுமடம் எனும் ஊரில், செல்வச் செழிப்புடைய வைசிய குடும்பத்தில் பிறந்தான். இளமையில் முதுமை நோயால் அவதியுறுகிறான். பல்லிழந்து, சொல்லிழந்து, நரை திரை மூப்பால் சூழப்பட்டு, இளமையான காலைப்பொழுதில் இருள்சூழ வாழுகின்றான்.

முற்பிறவியில், தன்னைக் கும்பிட்ட கைகளை முறிப் பதுபோல, நம்பிவந்த பெண்ணின் இளமைக்கன வினைக் கலைத்ததால், இப்பிறவியில் இவன் இளமை கரைந்துபோனது. இதற்குப் பரிகாரமாக, கைம்பெண்களுக்கும், பிற அபலைப்பெண்களுக்கும் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொடுத்தால், முதுமை நோயின் துன்பம் குறையும்.''

(வளரும்)

செல்: 63819 58636

bala141218
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe