Advertisment

கந்தர்வ நாடி! 34

/idhalgal/balajothidam/gandharva-nadi-lalgudi-gopalakrishnan-14

இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

34

லால்குடி கோபாலகிருஷ்ணன்

ரு ஜாதகர் இப்பிறவியில் பெறும் வாழ்க்கை சுகங்களை சுட்டிக்காட்டுவது நான்காம் பாவமேயாகும். நான்காம் பாவா திபதி அமரும் இடத்தையே சுகஸ்தானத்தின் பாவ லக்னமாகக் கொண்டு கணக்கிடுதல் வேண்டும். கடக லக்னக்காரர்களுக்கு நான்காம் பாவாதிபதியாகிய சுக்கிரன், லக்னத்திற்கு பத்தாம் பாவமாகிய மேஷத்திலிருந்தால் புத்திர சுகம் கெடும். புத்திரரால் தொல்லைகள் உண்டாகும். விருச்சிகம், கடகத் திற்கு ஐந்தாம் பாவமாகவும், மேஷத்திற்கு எட்டாம் பாவ மாகவும் அமைவதால், மேற்கூறிய பலனே ஏற்படும். பாவ காரகத்தை முன்னிறுத்தி, அந்த பாவத்தின் அதிபதி நின்ற பாவத்தை பாவகாரக லக்னமாகக் கொண்டு, அந்த பாவமும், ஜனன லக்னமும் மற்ற பாவங்களுடன் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்பின் விளைவை "கந்தர்வ நாடி' விளக்குகிறது.

Advertisment

""மௌன குருவே! சூதும் வாதும் நிறைந்த கலியுகத்தில், ஆன்மவிசாரத்தால் மெய்யறிவை யடைய முடியுமா? அதற் கான வழிமுறை எது?'' என அன்னை தையல்நா

இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

34

லால்குடி கோபாலகிருஷ்ணன்

ரு ஜாதகர் இப்பிறவியில் பெறும் வாழ்க்கை சுகங்களை சுட்டிக்காட்டுவது நான்காம் பாவமேயாகும். நான்காம் பாவா திபதி அமரும் இடத்தையே சுகஸ்தானத்தின் பாவ லக்னமாகக் கொண்டு கணக்கிடுதல் வேண்டும். கடக லக்னக்காரர்களுக்கு நான்காம் பாவாதிபதியாகிய சுக்கிரன், லக்னத்திற்கு பத்தாம் பாவமாகிய மேஷத்திலிருந்தால் புத்திர சுகம் கெடும். புத்திரரால் தொல்லைகள் உண்டாகும். விருச்சிகம், கடகத் திற்கு ஐந்தாம் பாவமாகவும், மேஷத்திற்கு எட்டாம் பாவ மாகவும் அமைவதால், மேற்கூறிய பலனே ஏற்படும். பாவ காரகத்தை முன்னிறுத்தி, அந்த பாவத்தின் அதிபதி நின்ற பாவத்தை பாவகாரக லக்னமாகக் கொண்டு, அந்த பாவமும், ஜனன லக்னமும் மற்ற பாவங்களுடன் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்பின் விளைவை "கந்தர்வ நாடி' விளக்குகிறது.

Advertisment

""மௌன குருவே! சூதும் வாதும் நிறைந்த கலியுகத்தில், ஆன்மவிசாரத்தால் மெய்யறிவை யடைய முடியுமா? அதற் கான வழிமுறை எது?'' என அன்னை தையல்நாயகி, புள்ளிருக்குவேளூர் திருத் தலத்தில் அருள்மழை பொழியும் வைத்தியநாதரை கைதொழுது கேட்டாள்.

Advertisment

அதற்கு ஆவுடையார் உரைத் தது- "" "தான் யார்- உடலா? உயிரா? மனமா?' என்ற புரிதலே, ஆன்மவிசாரத்தின் முதல்நிலை. ஒரு கல்லில் வேண்டாதவற்றை அகற்றும்போது, வேண்டிய சிற்பம் கிடைக்கிறது. வேண்டிய வற்றை சேர்க்கும்போது, சித்திரம் கிடைக்கிறது. தன்னை அடையாளப்படுத்தும் குணங் களை அகற்றினாலும், "அனிமா'வை முதலாக உடைய எட்டு குணங்களை சேர்த்துக் கொண்டாலும், ஆன்ம சாதகன் . நிற்குண பிரம்மத்தை உணர்வான்.''

""நீதிக்கரசே! "அஞ்சிதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய திருவாதிரை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், பூசம் மூன்றாம் பாதத்தில் சூரியனும், மகம் இரண்டாம் பாதத்தில் புதனும் சுக்கிரனும் சேர்ந்திருக்க, உத்திரம் மூன்றாம் பாதத்தில் சனியும், ரோகிணி முதல் பாதத்தில் செவ்வாயும் ரோகிணி இரண்டாம் பாதத்தில் சந்திரனும் ரோகிணி மூன்றாம் பாதத்தில் குருவும் அமையப்பெற்ற இந்த ஜாத கரின் கர்மப்பலனைத் தாங்கள் தயைக்கூர்ந்து விளக்கவேண்டும்' என்று திருப்புறம்பியம் திருத்தலத்தில் அருளாட்சிபுரியும் சாட்சிநாதரிடம் அன்னை இட்சுவாணி வினவினாள்.

sivan

பொன்னரங்கமுடையான் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முன்ஜென்மத்தில் மோகனூர் எனும் ஊரில் உயர்குடியில் பிறந்தான். இளமையில் கல்வியில் சிறப்பையும், அவன் பிறந்த ஊர்மக்களின் நன்மதிப்பையும் பெற்று ஊர்த்தலைவனாய் உயர்ந் தான். அவன் வாழ்ந்த ஊரில் நீதி பரிபாலனம் செய்தான். நிலையில்லா செல்வத்திற்கு அடிமையாகி, தன்னிடம் நீதிகேட்டு வந்தவர்களிடம் நிதிபெற்று, நீதியை வளைத்து, நேர்மையைக் குழிதோண்டிப் புதைத் தான். முதுமையில், அவன் உயிரை நரகம் வரவேற்றது. உடலும் விடைகொடுத்தது. நரகத்தில் தாங்கமுடியாமல் துன்பப்பட்டு, பின் இளைப்பாற இப்பூவுலகம் வந்தான். அமராவதி பட்டிணத்தில் ஒரு இசை வல்லுநருக்கு மக னாய்ப் பிறந்தான். இளம்வயதிலேயே இசையில் தேர்ச்சியடைந்தான். அவன் நாவில் இசை நடனம் புரிய, இசைபட வாழ்ந்தான். ஒருநாள் அடிநா அழற்சியால் பேச்சிழந்தான். இசைப் பயணமும் முடிவுக்கு வந்தது. முற்பிறவியில் அவன் நாவால் நீதியை வளைத்தான். இப்பிறவியில், நீதிதேவதை யின் சாபத்தால் அவன், தன் நாவினையே வளைக்க முடியாமல் போனது. "வாதிலே சூது செய்தார் வளமாக வாழமாட்டார்.' இதுபோன்ற பாவங்களுக்குப் பரிகாரங்கள் கிடையாது என்பதை அனைவரும் உணர்வார்களாக.''

(வளரும்)

செல்: 63819 58636

_________________

நாடி ரகசியம்

1. சூரியனுடன் சுக்கிரன், சந்திரன் சேர்ந்து, ஆறு மற்றும் பத்தாம் பாவத் தொடர்பிலிருந்தால், ஜாதகர் பயணம் தொடர்பான தொழில் செய்வார்.

2. சூரியனுடன் சுக்கிரன், குரு கூடி, பத்தாம் பாவத் தொடர்பிலிருந்தால் தலைமைப்பொறுப்பு தேடிவரும்.

3. சுக்கிரன், குரு, சூரியன் ஆகிய மூன்றும் நான்காம் பாவத்துடன் சம்பந்தப்பட்டால், ஜாதகர் நிலம், வீடு, வாகனம் வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபடுவார்.

கேள்வி: கிரகங்களின் வலிமையை, பதினாறு வர்க்கக் கணிதத்தின் மூலம் அறிவதே சரியான முறையா? அல்லது வேறு ஏதேனும் முறைகள் உள்ளனவா? இதுபற்றி "கந்தர்வ நாடி'யில் விளக்கப்படுகிறதா?

பதில்: பதினாறு வர்க்கக் கணிதத்தின் (அம்சம்) மூலம் கிரக வலிமையை அறியமுடியும் என்றாலும், அதனால் மட்டுமே ஜோதிடக்கணிதம் முழுமை பெறாது. 1. ஸ்தான பலம், 2. பார்வை பலம், 3. திக்பலம், 4. நைசர்க்கிக பலம், 5. சேஷ்டா பலம், 6. காலபலம் ஆகிய ஷட்பலங்களையும் ஆராயும்போது மட்டுமே சரியான பலன்களை அறியமுடியும். ராசிக் கட்டத்தை மட்டுமே வைத்துப்பலன்களைச் சொல்லுவது, ஒரு குருடன் யானையைத் தடவிப் பார்த்து, அதன் காதை முறம் என்றும், கால்களை தூண்கள் என்றும் தவறாகச் சொல்வதைப்போலாகும். ஆறுவிதமான பலங்களில் காலபலமே முக்கியமானது. வாரம், திதி, சுரணம், நட்சத்திரம், யோகம் என்ற ஐந்து அங்கங்களிலும், ஓரை, முகூர்த்தம், ஜாமம், பொழுது (பகல்- இரவு), பட்சம் (சுக்ல பட்சம், கிருஷ்ண பட்சம்), ருது, அயனம் எனும் எல்லா கால வரையரைகளிலும், கிரகங்களின் வலிமையும் தன்மையும் மாறும் என்பதே உண்மை. நள்ளிரவில் சந்திரன், செவ்வாய், சனியுமே பலமானவர்கள். ஒரு ஜாதகரின் அடிப்படை குணாதிசயம், கிரகங்களின் காலபலத்தைக்கொண்டே அமையும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

bala071218
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe