Advertisment
/idhalgal/balajothidam/gandharva-nadi-lalgudi-gopalakrishnan-12

இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

ஜாதகப் பலனைத் துல்லியமாக அறிய ராசி, ஹோரா, திரேஷ்காணம், சதுர்ஸ்தம்சம், சப்தமாம்சம், நவாம்சம், தசாம்சம், துவாதசாம்சம், ஷோடசாம்சம், விம்சாம்சம், சதுர் விம்சாம்சம், நட்சத் திராம்சம், திரிம்சாம்சம், கவிதாம்சம், அக்க்ஷ வேதாம்சம், சஷ்டியம்சம் ஆகிய பதினாறு வர்க்கங்களையும் கணிக்க வேண்டியது அவசியமாகிறது. இதுதவிர, ஒரு ராசியை நூற்றைம்பது பகுதி களாகப் பிரித்துப் பலன்காணும் நாடியம்சத்தின் சிறப்பினை, "கந்தர்வ நாடி' விரிவாக விளக்குகிறது.

Advertisment

""தேனே, அமுதே, கரும்பின் தெளிவே! ஜீவர்கள் (மனிதர்கள்) இம்மண்ணுலகில் புகழும

இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

ஜாதகப் பலனைத் துல்லியமாக அறிய ராசி, ஹோரா, திரேஷ்காணம், சதுர்ஸ்தம்சம், சப்தமாம்சம், நவாம்சம், தசாம்சம், துவாதசாம்சம், ஷோடசாம்சம், விம்சாம்சம், சதுர் விம்சாம்சம், நட்சத் திராம்சம், திரிம்சாம்சம், கவிதாம்சம், அக்க்ஷ வேதாம்சம், சஷ்டியம்சம் ஆகிய பதினாறு வர்க்கங்களையும் கணிக்க வேண்டியது அவசியமாகிறது. இதுதவிர, ஒரு ராசியை நூற்றைம்பது பகுதி களாகப் பிரித்துப் பலன்காணும் நாடியம்சத்தின் சிறப்பினை, "கந்தர்வ நாடி' விரிவாக விளக்குகிறது.

Advertisment

""தேனே, அமுதே, கரும்பின் தெளிவே! ஜீவர்கள் (மனிதர்கள்) இம்மண்ணுலகில் புகழும் அமைதியும் சேர்ந்த வாழ்வினை அடைய, வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டிய முறையைத் தாங்கள் விளக்க வேண்டுகிறேன்'' என அன்னை அபிராமி, திருக்கடைமுடி திருத்தலத்தில் அருள்பாலிக்கும் கடைமுடிநாதரைப் பணிந்துகேட்டாள்.

gandharvanadi

அதற்கு மணவழகர் உரைத்தது- ""புகழும் அமைதியும் இருவேறு இலக்குகள். புகழ் வேண்டுவோருக்கு அமைதி கிடைப் பதில்லை. அமைதியாக வாழ விரும்புவோருக்கு புகழென்பது எட்டாத கனியாகும். வைராக்கியமும் விடாமுயற்சியும் உள்ள வர்களே புகழ்பெறுவார்கள். அறிவாளியின் பிடிவாதமே வைராக்கியம். அறிவற்றவனின் வைராக்கியம் வீண் பிடிவாத மாகும். அசையாத அடிமரமும், காற்றுக்கேற்ப அசைந்து கொடுக்கும் கிளைகளும் உள்ள மரங்களே நெடுநாள் வாழும். உறுதியான கொள் கையும், காலத்திற்கு ஏற்றாற்போல் செயலையும் வகுத்துக்கொள்பவர் மட்டுமே புகழ்பெறுவார்.''

Advertisment

""மாயை அகற்றும் மருத்துவரே! "விக்ஷிப் தாக்ஷிப்தம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும், புனர்பூசம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், மகம் மூன்றாம் பாதத்தில் சூரியனும், மகம் நான்காம் பாதத்தில் புதனும், ஹஸ்தம் நான்காம் பாதத்தில் சுக்கிரனும், கேட்டை இரண்டாம் பாதத்தில் சனியும், அவிட்டம் இரண்டாம் பாதத்தில் சந்திரனும், ரோகிணி இரண்டாம் பாதத்தில் குருவும் அமையப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் தயைகூர்ந்து விளக்க வேண்டும்'' என்று திருஇன் னாம்பர் திருத்தலத்தில் அருள்புரியும் எழுத்தறி நாதரிடம் அன்னை சௌந்தர நாயகி வினவினாள்.

தென்முக நம்பி உரைத் தது- ""தேவி! இந்த ஜாதகன் முன்ஜென்மத்தில் பலாச புரம் எனும் கடற்கரை நகரில் மீனவர் குடியில் பிறந்தான். ஒரு நாள் மீன்பிடித்தொழிலுக்காக கடலில் பயணிக் கையில், நீந்தத் தெரியாத ஒருவன் கடலலை களில் சிக்கித் தவிப்பதைக் கண்டான். உயிருக்குப் போராடுபவன் தன் பகைவன் என்பதால், அவனைக் காப்பாற்றாமல் தன்வழியே சென்று விட்டான். முதுமையில் நோயுற்று இறந்து, பிண்ட சரீரத்துடன் எமபுரியை அடைந்தான். அங்கு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, "வைதரணி' எனும் நரகத்தில் பலகாலம் துன்புற்றான். சிலகாலம் கழித்து ரத்னகிரி எனும் ஊரில் ஒரு வைசிய குடும்பத்தில் பிறந்தான்.

இளம்வயதிலேயே சுவாச காச நோயால் அவதியுறுகிறான். எந்த மருத்துவராலும், அவன் நோயைத் தீர்க்க முடியவில்லை. முற்பிறவியில், நீரில் மூழ்கி மூச்சுவிட முடியாமல் தவித் தவனை முன்விரோதம் கொண்டு காப்பாற்றா மல் போனதால் இப்பிறவில் நோயால் துன்பப்படுகிறான். அவதிப்படும் உயிருக்கு உதவாதவன், நம்பிக்கை துரோகம், கொலைப் பாதகம் போன்ற பல கொடிய பாவங்களுக்கு ஆளாகிறான். இதுபோன்ற பாவங்களுக்குப் பரிகாரமே கிடையாது.''

(வளரும்)

செல்: 63819 58636

bala231118
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe