கந்தர்வ நாடி! 17

/idhalgal/balajothidam/gandharva-nadi-lalgudi-gopalakrishnan-0

இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

கிரக பலங்களைத் தீர்மானிக்கும்போது, உச்சம், நீசம், அஸ்தங்கதம், கிரக யுத்தத்தில் வெற்றி மற்றும் தோல்வியுற்றவை, ராசி மற்றும் பாவ சந்திகளில் உள்ள கிரகங்கள் என தனித்தனியாய்ப் பிரித்தே பலன் காணவேண்டும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.

""ஏழிசையுந்தொழும் ஏந்தலே, எழிலரசே! தங்கள் பிறப்பைத் தாங்களே தீர்மானிக்கமுடியாத மனிதர்கள், இவ்வுலகில் நிகழும் நிகழ்வுகளுக்கு தாங்களே காரணமென்றெண்ணி அறியாமையில் வாழ்கிறார்கள். இம்மக்கள் விதியே வாழ்க்கையை வழிநடத்துக

இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

கிரக பலங்களைத் தீர்மானிக்கும்போது, உச்சம், நீசம், அஸ்தங்கதம், கிரக யுத்தத்தில் வெற்றி மற்றும் தோல்வியுற்றவை, ராசி மற்றும் பாவ சந்திகளில் உள்ள கிரகங்கள் என தனித்தனியாய்ப் பிரித்தே பலன் காணவேண்டும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.

""ஏழிசையுந்தொழும் ஏந்தலே, எழிலரசே! தங்கள் பிறப்பைத் தாங்களே தீர்மானிக்கமுடியாத மனிதர்கள், இவ்வுலகில் நிகழும் நிகழ்வுகளுக்கு தாங்களே காரணமென்றெண்ணி அறியாமையில் வாழ்கிறார்கள். இம்மக்கள் விதியே வாழ்க்கையை வழிநடத்துகிறது என்பதை அறிவது எப்போது?'' என அன்னை சவுந்திர நாயகி, திருப்புன்கூரில் உறையும் சிவலோகநாதரைப் பணிவுடன் கேட்டாள்.

siva

நந்தனாருக்காக நந்தியை விலக்கி புன்னை மரத்தடியில் காட்சி தந்த புன்னைவனநாதர் உரைத்தது- ""பூவுலகில் காற்றே எல்லா இடத்தும் வியாபித்துள்ளது. காற்றே மனிதர்களுக்கு தொடக்கம்முதல் இறுதிவரை துணை நிற்கிறது. ஆனாலும் அது தென்றலாகவும் புயலாகவும் மாறும்போது மட்டுமே காற்றை உணர்கிறான். விதியும் காற்று போன்றதே. விளைவுகளால் மட்டுமே விதியை புரிந்துகொள்கிறான். ஊழ்வினையால் உருவான மாயையே மனதை மறைக்கிறது.''

""சாமகானப் பிரியனே, "ஸ்வஸ்திக ரேசிதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய பரணி மூன்றாம் பாதத்தில் லக்னமும், ரோகிணி முதல் பாதத்தில் சுக்கிரனும், ரோகிணி மூன்றாம் பாதத்தில் செவ்வாயும், மிருகசீரிடம் முதல் பாதத்தில் சூரியனும், மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் புதனும், புனர்பூசம் நான்காம் பாதத்தில் சனியும், பூசம் இரண்டாம் பாதத்தில் குருவும், ரேவதி நான்காம் பாதத்தில் சந்திரனும் இருக்கப் பிறந்த இந்த ஜாதகரின் கர்மப்பலனை தாங்கள் அருள்கூர்ந்து விளக்கவேண்டும்'' என்று கொள்ளிடக்கரையில் குடிகொண்டிருக்கும் பால்வண்ணநாதரை அன்னை வேதநாயகி வினவினாள்.

அர்த்தநாரீஸ்வரர் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகர் முற்பிறவியில் திருக்காட்டுப்பள்ளி என்ற ஊரில் பிறந்து, வீரய்யன் என்ற பெயரில் வாழ்ந்து வந்தான். அவன் இளம்வயதிலேயே தீயோர் சேர்க்கையால் வழிப்பறிக்கொள்ளையனாக மாறிவிட்டான். ஒருமுறை வழிப்பறிக் கொள்ளையின்போது ஒரு அந்தணக் குடும்பத்தை வெட்டிக்கொன்றான். காவல் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டு, பின் தூக்கிலிடப்பட்டான். இறந்தபின் "மகாரௌரவம்' என்ற நரகம் சென்றான். நெடுங்காலம் நரக சித்ரவதைகளை அனுபவித்துவிட்டு, பின் பனையூர் என்ற ஊரில் ஒரு அந்தண குடும்பத்தில் பிறந்தான். பிறந்ததுமுதலே துன்பத்தில் உழன்று வருகிறான். திருமணமாகியும் புத்திரபாக்கியமும் இல்லாமல், மனநோயுள்ள மனைவியால் துன்புறுத்தப்படுகிறான். முன்ஜென்ம வினையால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷமே இதற்குக் காரணம். அமாவாசைகளில் பிதுர் காரியம் முடிந்தவுடன், பசுவுக்கு உணவளிக்கவேண்டும். ஏழைகளுக்கு உணவும் வஸ்திரமும் தானமாகத் தரவேண்டும். அதன்பின், பூஜைகளைச் செய்து ஒரு ஏகமுக ருத்திராட்சத்தை அணிந்தால் தோஷம் விலகி நலம் பெறுவான்.''

(வளரும்)

செல்: 63819 58636

இதையும் படியுங்கள்
Subscribe