இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
99
வீடுகட்டுதல், புதிய தொழில் முயற்சி போன்றவற்றில் வெற்றியைத் தீர்மானிப்பவை உபஜய ஸ்தானங் களேயாகும். (3, 6, 10, 11). மருந்துக்குத் துணைபுரியும் அனுபானம்போல, உபஜய ஸ்தானாதி பதிகள் புக்தி நாதர்களாக வரும்போது தசாநாதனுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சந்திரனுக்கு உபஜய ஸ்தானங்களில் பாவர்கள் இருந்தால், உழைப்பின்மூலம் யோகமும், சுபர்கள் இருந்தால் வசுமதி யோகத்தால் அதிர்ஷ்டமும் கிடைக்கும். சூரியன், செவ்வாய், சனி போன்ற கிரகங்கள் உபஜய ஸ்தானங்களில் நட்பு, ஆட்சி, உச்சம் பெறுவதும், சுபர் பார்வை பெறுவதும் ஜாதகருக்கு நல்ல பலன்களைத் தரும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""ஞானேஸ்வரரே! தான் யார் என்ற தத்துவ விசாரத்தில் ஈடுபடாமல், சதாகாலமும் நோயைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும் கவலையில் ஆழ்ந்து, விழலுக்கு நீர் இரைத்ததுபோல, கிடைத்தற்கரிய மானுட வாழ்க்கையை வீணாக்கும் வீணர்கள் உய்வுபெற கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறையைத் தாங்கள் உபதேசித்தருள வேண்டுகிறேன்'' என அன்னை மங்களேஸ்வரி உத்தரகோச மங்கை திருத்தலத்தில் உறையும் ஸ்ரீ மங்களேஸ்வரைப் பணிந்துகேட்டாள். சொக்கநாதர் உரைத்தது- ""மனிதன் அனுபவித்த உலக சுகங்களுக்காகத் தரும் பணயம்தான் நோய். மரணத்தைப்பற்றி மனிதன் கவலைப்படுவது
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
99
வீடுகட்டுதல், புதிய தொழில் முயற்சி போன்றவற்றில் வெற்றியைத் தீர்மானிப்பவை உபஜய ஸ்தானங் களேயாகும். (3, 6, 10, 11). மருந்துக்குத் துணைபுரியும் அனுபானம்போல, உபஜய ஸ்தானாதி பதிகள் புக்தி நாதர்களாக வரும்போது தசாநாதனுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சந்திரனுக்கு உபஜய ஸ்தானங்களில் பாவர்கள் இருந்தால், உழைப்பின்மூலம் யோகமும், சுபர்கள் இருந்தால் வசுமதி யோகத்தால் அதிர்ஷ்டமும் கிடைக்கும். சூரியன், செவ்வாய், சனி போன்ற கிரகங்கள் உபஜய ஸ்தானங்களில் நட்பு, ஆட்சி, உச்சம் பெறுவதும், சுபர் பார்வை பெறுவதும் ஜாதகருக்கு நல்ல பலன்களைத் தரும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""ஞானேஸ்வரரே! தான் யார் என்ற தத்துவ விசாரத்தில் ஈடுபடாமல், சதாகாலமும் நோயைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும் கவலையில் ஆழ்ந்து, விழலுக்கு நீர் இரைத்ததுபோல, கிடைத்தற்கரிய மானுட வாழ்க்கையை வீணாக்கும் வீணர்கள் உய்வுபெற கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறையைத் தாங்கள் உபதேசித்தருள வேண்டுகிறேன்'' என அன்னை மங்களேஸ்வரி உத்தரகோச மங்கை திருத்தலத்தில் உறையும் ஸ்ரீ மங்களேஸ்வரைப் பணிந்துகேட்டாள். சொக்கநாதர் உரைத்தது- ""மனிதன் அனுபவித்த உலக சுகங்களுக்காகத் தரும் பணயம்தான் நோய். மரணத்தைப்பற்றி மனிதன் கவலைப்படுவது நகைப்புக் குரிய அறியாமை. மரணம் வந்தவுடன் மனிதன் இருப்பதில்லை. மனிதன் இருக் கும்வரை மரணம் வருவதில்லை. மனிதன் பிறப்பதே இறப்பதற்காகத் தான். பலியாகும்வரை புல்லை ருசித்துக் கொண்டிருக்கும் ஆடுபோல சுகபோகத் தில் திளைத்து, தான் இவ்வுலகிற்கு வந்ததன் காரணத்தை அறியாமல், போகும் வழியைக்கண்டு அச்சமுறுவது பேதமையே. ஐம்புலன்களின் பஞ்ச வாத்தியத்திற்கேற்ப ஆடும் மனக் குரங்கின் ஆட்டத்தை புத்தியால் உற்றுநோக்கினால், ஆடியது அடங்கி ஆதியில் ஒடுங்கும். சித்தம் தெளிவாகும். சரீரம் எனும் ஆடை, தான் அல்ல என்ற தெளிந்த ஞானத்தில் தன்னைக் காணலாம். உண்மையில், மரணமே ஆன்மாவின் விழிப்பு நிலை. இவ்வுலக வாழ்க் கையே உறக்க நிலை.
உறக்கத்தில் விழிப் புணர்வும், விழிப்பில் இளைப்பாறுதலுமே யோகம்.''
""அடியாருக்கு நல்லாரே! "நிதம்பம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய உத்திராட நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், சதயம் இரண்டாம் பாதத்தில் சனியும், திருவாதிரை இரண்டாம் பாதத்தில் சந்திரனும், சித்திரை நான்காம் பாதத்தில் செவ்வாயும், கேட்டை நான்காம் பாதத்தில் சூரியனும் குருவும் சேர்ந்திருக்க, மூலம் முதல் பாதத்தில் புதனும், மூலம் நான்காம் பாதத்தில் சுக்கிரனும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று வாழப்பள்ளி எனும் திருத்தலத் தில் அருள்புரியும் ஸ்ரீ மகாதேவரை அன்னை பார்வதி வேண்டிப்பணிந்தாள்.
சுந்தரேஸ்வரர் உரைத்தது- ""சியாமளையே! இந்த ஜாதகன் திரூர் எனும் ஊரில் பிறந்து பலராமன் என்ற பெயர்பெற்றான். இளம்வயதில் தீய நட்பால் முரடனாய், மூடனாய், ஒரு மிருகம்போல மாறினான். மதிமயக்கத்தால் பெரியோரை மதியாமல் துன்புறுத்தினான். தன்னைக்கண்டு அந்த ஊரில் வாழ்ந்த அனைவரும் அச்சமடைவதைக்கண்டு பெருமிதம் கொண்டான். அந்த ஊரின் புறத்தே ஒரு தவசி பரணமைத்துத் தவமியற்றி வந்தார். குணமென்னும் குன்றேறி நின்றாரைப் பகைக்கக் கூடாதென்பதை அறியாமல் தவசி யிடம் விரோதம் பூண்டான். அவர் சிகையை நீக்கி அவமானப்படுத்தினான். ஆட்டம் முடிந் ததும் கூடாரத்தைப் பிரிக்கும் கூத்தாடி போல, முதுமை அவன் ஆட்டத்தை முடித்து வைத்தது. மூப்புக்கும், நோய்க்கும் தத்துப்பிள் ளையானான். மரணம் அவனை நோயின் பிடியிலிருந்து விடுவித்தது. உலக வாழ்விலிருந்து விடுதலையடைந்த அவன் உயிர், எமலோகத்தில் சரண் புகுந்தது. காலதேவனின் கட்டளையால் காலல் சூத்திரம் எனும் நரகத்தில் அடைபட்டான். அங்கு இரும்புச் சலாகையில் அவனைக் கோர்த்துப் பெருந் தணலில் வாட்டினார்கள். சிலகாலம் கழித்து தன் பாவச் சரக்கினைக் கரைக்க பூவுலகிற்குத் திரும்பினான். மேழையூரில் பிறந்து, ரகுநந்தன் என்ற பெயர்பெற்றான். இளமையின் இனிமையை அனுபவிக்கத் தொடங்கியபோது நோயுற்றான். நோயால் அவன் தேகம் உருக் குலைந்தது. சுவையான வாழ்க்கை சுமையானது.
அனலில் சிக்கிய புழுவாய் அல்லலுறு கிறான். முற்பிறவியில், * பரீட்சித்து மன்னர் போல, ஒரு சாதுவை அவமானப்படுத்திப் பெற்ற தவசியின் சாபத்தினால் துன்புறுகிறான்.
குலகுருவுக்கு பாதபூஜை செய்தபின் கூஷ் மாண்ட ஹோமம் செய்தால் சாபம் நீங்கும்.
* பரீட்சித்து- அபிமன்யுவின் மகன். பரீட்சித்து, செத்த பாம்பை சமீக முனிவரின் கழுத்தில் போட்டு அவமானப்படுத்தியதால், முனிவரின் மகன் சிரிங்கியின் சாபம் பெற்றான்.
-மகாபாரதம்
(வளரும்)
செல்: 63819 58636
______________
நாடி ரகசியம்
1. உத்திராட நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் புதனும், புனர்பூசம் நான்காம் பாதத்தில் சந்திரனும் அமரும் அமைப்பைப்பெற்ற ஜாதகர் முப்பது வயதிற்குப்பிறகு தூரதேசத்தில் வெற்றிபெறுவார்.
2. உத்திராட நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சூரியனும் லக்னமும் அமைந்து, செவ்வாய் பூசம் முதல் பாதத்தில் இருக்க, ஜாதகர் சுவாச நோயால் அவதியுறுவார்.
3. உத்திராட நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சந்திரனும், மக நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சனியும் அமைந்து, லக்னம் குருவின் பார்வையைப் பெறாவிடில், ஜாதகருக்கு சிரவண மாதத்தில் (ஆவணி), சுக்ல பட்ச தசமியில், செவ்வாய்க்கிழமை, கேட்டை நட்சத்திரம் சேரும் நாளில் மாரகத்திற்கொப்பான கண்டம் உண்டாகும்.
கேள்வி: ஜோதிடத்தில் "அஷ்டகவர்க்கக் கணிதத்தின் முக்கியத்துவத்தையும், அதனால் கிடைக்கும் பலன்களையும் "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?
பதில்: ஜோதிடத்தில் அஷ்டகவர்க்கக் கணிதமானது நிச்சய அம்சம் எனப்படும் முக்கியத்துவத்தைப் பெறுவது. ஜனன ஜாதகத்தில் லக்னம் மற்றும் ஏழு கிரகங்களும் தரும் அனுகூல, பிரதிகூலப் பலன்களை (7+1=8) மையப்படுத்திக் கூறப்படுவதால் இதற்கு அஷ்டகவர்க்கம் என்று பெயர். அஷ்டகவர்க்க முறையில் ஒரு கிரகம் ஒரு ராசிக்கு எட்டு வர்க்கப் பலன்களைத் தரும். அதில் சுப வர்க்கம், அசுப வர்க்கம் இரண்டும் கலந்திருக்கும். சுப வர்க்கத்தை அனுகூல பிந்துகள் என்றும், அசுப வர்க்கத்தை பிரதிகூல ரேகா என்றும் குறிப்பிடுவது வழக்கம். ஒரு கிரகம் ஒரு ராசிக்கு எட்டு அசுப வர்க்கப் பலன்களைத் தரும் என்பதால், ஏழு கிரகங்களும் சேர்ந்து ஒரு ராசிக்கு மொத்தமாக 56 வர்க்கப் பலன்களைத் தரும். அஷ்டகவர்க்கக் கணிதம் செய்யும்போது அசுப வர்க்கத்தைக் கணக்கிடுவதில்லை; சுப வர்க்கம் மட்டுமே கணக்கிடப்படுகிறது. ஜனன ஜாதகத்தை அடிப்படையாகக்கொண்டு கோட்சாரத்தில் கிரக சஞ்சாரத்தைக் கணக்கிட்டு, வருட, மாத தினப்பலன்களையும், தசாபுக்திப் பலன்களையும் எளிதாக அறியலாம் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.