இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

ரு ஜாதகருக்கு திருமணத்தில் தடை அல்லது தாமதத்தை ஆராயும்போது, அந்த ஜாதகருக்கு சூரியன், சுக்கிரன், புதன் அமைந்திருக்கும் நிலையைக் கணக்கில் கொள்ளவேண்டும். அன்பைச் சுட்டிக்காட்டும் புதனும், தேக சுகத்தைச் சுட்டிக்காட்டும் சுக்கிரனும், ஆற்றல் நாயகன் சூரியனுக்கு எவ்வளவு பாகை இடைவெளியில் அமைந்துள்ளன என்பதையறிவதே முக்கியமானது. சூரியனுக்கும் சுக்கிரனுக்குமுள்ள இடைவெளி நாற்பது பாகைக்கு மேலிலிருந்தால் திருமணம் தாமதமாகும். அதேபோல் சூரிய, சந்திரர்களுக்கிடையே சுக்கிரன் அகப்பட்டாலும் திருமணத்தில் தடையுண்டாகும். புதனுக்கும் சூரியனுக்கு முள்ள இடைவெளி, தம்பதிகளின் மன ஒற்றுமையைச் சுட்டிக்காட்டும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

Advertisment

nandhi

""பொன்னம்பலனே! நிர்குண பிரம்மத்தை உணர்ந்த ஞானிகள் ஜீவசமாதியடையும் நிலைக்கும், நிறைவேறாத ஆசைகளுடன் மாய்ந்திடும் மானுடரின் மரணத்திற்குமுள்ள வேறுபாட்டைத் தாங்கள் கூறியருள வேண்டுகிறேன்'' என அன்னை மரகதாம்பாள், ராமகிரி எனும் திருத்தலத்தில் உறையும் ஸ்ரீ வாலீசுவரரைப் பணிந்துகேட்டாள்.

வைத்தீஸ்வரர் உரைத்தது- ""அற்ப ஆசைகளுக்காக மும்மலத்துடன் வாழ்ந்த உடல், உயிரின் எச்சம். அந்த உடல் மரணத்திற்குப்பின் அழிந்துவிடும். ஆனால், நிர்குண பிரம்மத்தை உணர்ந்த ஞானிகள் வாழும்போதே, கனிந்த கனி தோலைப்பிரிந்து விதையோடு ஒட்டுதல்போல, ஆன்மாவுடன் உயிர் சேரும். ஜீவசமாதியின்போது ஆன்மா, பிராணனை உடலிலிலேயே விட்டுவிட்டுப் பிரிவதால், உடல் அழிவதில்லை. உஷ்ணத்தால் வியர்க்கும். மறுபிறவியை எடுக் கின்ற ஆன்மாவுக்குதான் பிராணன் தேவை. பிரும்ம ஞானம் பெற்ற வர்கள் பிறவியெனும் சுழலிலிருந்து விடுபடுகிறார்கள். காற்றுடன் இசை கலந்தபின் காற்றையும் இசையையும் பிரிக்கமுடியாது. பிரும்ம ஞானிகள், பிரம்மத்துடன் இரண்டறக் கலந்துவிடுகிறார்கள்.

காலச்சுழற்சியில் மரம் கல்லாகும்; கல் ஒருபோதும் மரமாவதில்லை.''

Advertisment

""பசுபதிநாதரே! "ஸர்பிதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய பூராட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், சதயம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், ரேவதி நான்காம் பாதத்தில் சந்திரனும், ரோகிணி மூன்றாம் பாதத்தில் சூரியனும், மிருகசிரீடம் இரண்டாம் பாதத்தில் குருவும், மிருகசிரீடம் நான்காம் பாதத்தில் புதனும் சுக்கிரனும் சேர்ந்திருக்க, ஆயில்யம் இரண்டாம் பாதத்தில் சனியும் அமையப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று ஸ்ரீசைலம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீ மல்லிலிகார்ச்சு னேஸ்வரரை அன்னை பிரம்மராம்பிகை வேண்டிப் பணிந்தாள்.

சத்தபுரீசுவரர் உரைத்தது- ""பர்வதவர்த் தினியே! இந்த ஜாதகி அமராவதி என்ற ஊரில் சௌந்தரி என்ற பெயரில் வாழ்ந்துவந்தாள். தன் சுந்தர வதனத்தால் அந்த ஊரில் வாழ்ந்த யௌவனப் பருவத்து ஆண்களை, மன்மதக் கணைகொண்டு தாக்கினாள். மணம் பேசிமுடிக்க வந்தோரை ஏசினாள். பெரியோரை ஏளனமாய்ப் பேசினாள். ஆசை காட்டி மோசம் செய்தாள். பிணமாகும் உடலைப் பொன் னாலும் பூவாலும் அலங்கரித்து, தன் அழகில் பெருமிதம் கொண்டாள். அகங்காரம் அழகை மறைத்தது. மணவாழ்க்கையின்றி தனிமரமா னாள். அவள் அழகு காட்டில் காய்ந்த நிலவாய், கற்பாறையில் பெய்த மழையாய்ப் பயனின்றிப் பாழானது. காலம் எதற்கும் காத்திருப்பதில்லை. கிருஷ்ண பட்சத்து நிலவாய், அவள் இளமை தேய்ந்து மறைந்தது.

முதுமையின் முழு இருளில் முடங்கிப் போனாள். முடிவில் நோயை மணந்தாள். காலன் கடைச்சங்கு ஊதினான். அழகிய உடல் அழலுக்கு இரையானது. வாழ்க்கை விழலுக் கிறைத்த நீரானது. உயிர் எமனுலகம் சென்றது. "பன்றி முகம்' எனும் நரகத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் துயருற்றபின், உயிர் தேக சம்பந்தம் பெற்று, காசினியில் கருவாய் உருப்பெற்றது. அனந்தபுரி எனும் ஊரில் பிறந்து ரூபவதி என்ற பெயர் பெற்றாள். முன்ஜென்ம வினைப்பயனால் அவள் நோயுற்று, இளமையின் பொலிலிவை இழந்தாள். திருமணம் எட்டாத கனியானது.

Advertisment

*அப்சரஸ்கள்போல், அழகின் செருக்கால் பலரைப் பழித்ததால் வந்த வினைப்பயனால் அல்லலுறுகிறாள். திருப்பைஞ்ஞீலி திருத்தலத் தில் ஆனிமாத வளர்பிறையில் ரம்பா திரிதியை விரதத்தைக் கடைப்பிடித்தால் நிவர்த்தி யுண்டாகும்.''

*அப்சரஸ்- தேவலோக நடன மாதர் களாகிய ரம்பையும், ஊர்வசியும் தங்களழகின் செருக்கினால், தேவ குருவாகிய பிரகஸ்பதியை அவமானப்படுத்தி சாபம் பெற்றனர்.

(வளரும்)

செல்: 63819 58636

__________

நாடி ரகசியம்

1. பூராட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் புதனும், திருவாதிரை நான்காம் பாதத்தில் குருவும் அமையும் ஜாதகர் அரசு ஆலோசகராகப் புகழ் பெறுவார்.

2. பூராட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் செவ்வாயும் சனியும் சேர்ந்து அமையப்பெற்ற ஜாதகரால் குடும்பத்தின் அமைதி கெடும்.

3. பூராட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சந்திரனும், அனுஷம் நான்காம் பாதத்தில் சூரியனும் இருந்தால் ஜாதகரின் பால்ய பருவத்தில் தந்தைக்கு கண்டம்.

கேள்வி: நீண்டகால நட்பில் எதிர்பாராத பிரிவு ஏற்படுவதன் காரணத்தை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?

பதில்: தொடர்வண்டியில்(Train)தொடங்கும் நட்பு, வாழ்க்கை முழுவதும் தொடர்வதும், பல நாட்கள் தொடர்ந்த நட்பு பாதியிலேயே முடிவதும் உலகியல் நிகழ்வுகளில் காணக்கூடியவையே. நட்புக்குக் காரகமான கிரகம் புதன். அதனாலேயே மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் நட்புக்கு முதலிடம் கொடுப்பவர்களாக அமைகிறார்கள். கன்னி ராசியில் புதன் உச்சம் பெற்றவர்களும் எல்லாரிடமும் நட்பு பாராட்டக்கூடியவர்கள். ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் பாவத்தின் வலிலிமையே நட்பின் நிரந்தரத்தன்மையை நிர்ணயிக்கும். பொதுவாக, ஒரு ஜாதகரின் சந்திரன் அமரும் வீட்டின் திரிகோண வீடுகளில் ராசி அமையப்பெற்றவர்களே சிறந்த நண்பர்களாக விளங்குகிறார்கள். ஐந்தாம் வீட்டதிபதியின் தசையில், நான்காம் வீட்டதிபதியின் புக்தி நடந்தால் நட்பு தள்ளாடும். ராசிக்கு ஐந்தாம் வீட்டோன், ராசிக்கு பாதக ஸ்தானங்களில் அமர்ந்த ஜாதகர்களுக்கு தொடக்கத்தில் கரும்பாய் இனித்த நட்பு விரைவில் வேம்பாய்க் கசந்துவிடும். ஜாதகத்தில் மனோகாரகனாகிய சந்திரனுக்கும், நட்புக்கு காரகனாகிய சந்திரனின் மகன் புதனுக்கும் உள்ள தொடர்பு வலுப்பெற்றால், என்றும் நட்பின் பசுமை மாறாதென்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.