இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
ஒரு குறிப்பிட்ட தசாபுக்தியில் நிகழும் சம்பவம், அந்த தசா புக்திநாதர்கள் எந்த பாவத்தின் அதிபதிகளாக இருக்கிறார்கள் என்பதைப் பொருத்தும், எந்த பாவத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதைப் பொருத்துமே அமையும். உதாரணத்திற்கு, மிதுன லக்னம், மக நட்சத்திர ஜாத கருக்கு சூரிய தசை, குரு புக்தி, செவ்வாய் அந்தரத்தில் திருமணம் நிகழும் வாய்ப் புண்டு. பொதுவாக 3, 7, 11-ஆம் பாவங்களின் தொடர்பே, ஒரு வரின் திருமண வாழ்வை நிர்ணயிக்கும். அதேபோல், ஏழாம் பாவாதிபதியின் தசையில் ஆறாம் பாவாதிபதியின் புக்தியில் இல்லறத் தில் பிரிவுண்டாகும். தசாபுக்திகளே வாழ்வில் நடை பெறும் நிகழ்வுகளின் காலத்தைக் காட்டும் கருவியென்பதே "கநதர்வ நாடி'யின் நிலைப்பாடு.
""வேதநாதரே! ஒருவர் தன் சுயநலனுக்காக, காம்ய கர்மாவாகச் செய்யும் யாகங்கள
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
ஒரு குறிப்பிட்ட தசாபுக்தியில் நிகழும் சம்பவம், அந்த தசா புக்திநாதர்கள் எந்த பாவத்தின் அதிபதிகளாக இருக்கிறார்கள் என்பதைப் பொருத்தும், எந்த பாவத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதைப் பொருத்துமே அமையும். உதாரணத்திற்கு, மிதுன லக்னம், மக நட்சத்திர ஜாத கருக்கு சூரிய தசை, குரு புக்தி, செவ்வாய் அந்தரத்தில் திருமணம் நிகழும் வாய்ப் புண்டு. பொதுவாக 3, 7, 11-ஆம் பாவங்களின் தொடர்பே, ஒரு வரின் திருமண வாழ்வை நிர்ணயிக்கும். அதேபோல், ஏழாம் பாவாதிபதியின் தசையில் ஆறாம் பாவாதிபதியின் புக்தியில் இல்லறத் தில் பிரிவுண்டாகும். தசாபுக்திகளே வாழ்வில் நடை பெறும் நிகழ்வுகளின் காலத்தைக் காட்டும் கருவியென்பதே "கநதர்வ நாடி'யின் நிலைப்பாடு.
""வேதநாதரே! ஒருவர் தன் சுயநலனுக்காக, காம்ய கர்மாவாகச் செய்யும் யாகங்களால் உலகோர் அடையும் பயனையும், யாகம் செய்யும் முறையையும் எளியோரும் அறியுமாறு விளக்கி யருள வேண்டுகிறேன்'' என அன்னை கடிவாய் மொழியம்மை திருவெண்பாக்கம் எனும் தலத்தில் உரையும் அருள்மிகு ஆதாரதாண் டேசுவரரைப் பணிந்துகேட்டாள்.
வாசீஸ்வரர் உரைத்தது- ""எவரும், எப்போதும், எதைச் செய்தாலும் தனியொருவர் மட்டுமே பலன்களை அடைந்துவிடமுடியாது. கனிகளைப் பெறுவதற்காக விருட்சங்களை ஒருவர் வளர்த்தாலும், அந்த விருட்சத்தின் பயனாகிய நிழலும், வர்ஷமும் (மழை) உலகோருக்கு அனுகூல மாகும். அதேபோல் காம்ய கர்மாவாகச் செய்யும் யாகங்களால் உலகம் தூய்மையடையும். ஹோதா (ரிக்), அத்வர்யு (யஜுர்), உத்காதா (ஸாம), பிரம்மா (அதர்வண) எனும் நான்கு வேதங்களையறிந்த ரித்விக்குகளை (யாகத்தைச் செய்துவைப்பவர்) கொண்டு செய்யப்படும் யாகமே உத்தம மானது.''
""கிருபாபுரீஸ்வரரே! "ஸுசி' எனும் தாண்ட வத்தின் லயமாகிய மூல நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும், உத்திராடம் இரண்டாம் பாதத்தில் குருவும், சதயம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், உத்திரம் முதல் பாதத்தில் சந்திரனும், ஸ்வாதி இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும் புதனும் சேர்ந்திருக்க, விசாகம் நான்காம் பாதத்தில் சனியும் சூரியனும் சேர்ந்திருக்கும் அமைப்பைப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று திருக்கண்டலம் எனும் திருத்தலத்தில் அருள்புரியும் சிவானந்தேஸ்வரரை அன்னை ஆனந்தவல்லி வேண்டிப் பணிந்தாள்.
தாளபுரீஸ்வரர் உரைத்தது- ""சுபாஷினியே! இந்த ஜாதகி முற்பிறவியில் வாஹீஸ்வரி எனும் பெயருடன், துறையூர் என்ற ஊரில் வாழ்ந்து வந்தாள். அவள் செல்வத்தாலும், செல்வாக்கினாலும் அதிகாரம் மிகுந்தவளாக வாழ்ந்தாள்.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நான்கு குணங்களின் அடையாளங்களை இழந்தாள். அவள் வாழ்ந்த ஊரின் மக்களை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தினாள். ஏழைகளின் நிலங்களை அபகரித்து, அதில் மாளிகைக்கட்டி வாழ்ந்தாள். அவள் செய்த கொடுமைகளைத் தட்டிக்கேட்டவர்களை எமனுலகிற்கு அனுப்பிவைத்தாள். கண்டதே காட்சி, கொண்டதே கோலமென, புலனடக்க மற்ற செயல்களில் விருப்பம் கொண்டாள். எளியோரின் வேதனையான கூக்குரலுக்கு தர்மதேவதை செவிமடுத்தாள். குடிகெடுத்து வாழ்ந்த வாஹீஸ்வரி, ஒருநாள் இடிவிழுந்து மாண்டாள். எமகிங்கரர்களின் கைகளில் சிக்குண்டு அடிமையானாள். அவள் ஜீவன், குரூரபுரம் எனும் பட்டினத்தின் வழியாகச் செல்லுகையில், எமகிங்கரர்கள் பலரும் ஒன்றுசேர்ந்து, அந்த ஜீவன்மீது கற்களை யெறிந்து துன்புறுத்தினார்கள். பின்பு, நூறு யோஜனை நீளமுள்ள, துர்நாற்றம் மிகுந்த "வைதரணி' நதியைக் கடந்து, எமலோகம் சென்றாள். மண்ணுலகில் அவள் செய்த பாவங்களுக்காக "தந்த சூகம்' என்ற நரகத்தில் பலகாலம் வதைக்கப்பட்டாள். முன்ஜென்மத்து பாவப்பதிவுகளைச் சுமந்து, மண்ணுலகில் வீழ்ந்தாள். மாத்தூர் என்ற ஊரில் பிறந்து, மலர்விழி எனும் பெயர்பெற்றாள். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினாள். இளமை யில் நோயுற்றாள். கண்களில் வெண்மை படர்ந்தது. மலர்விழியின் விழிகள் பூத்துப் போயின. பகலிலும் இரவின் நிழல் விழுந்தது. காட்டாறு திசை மாறியதால் மருதம் பாலையாவதுபோல, அவள் வாழ்வில் வசந்தம் வற்றிப்போனது. முற்பிறவியில், * தாடகைபோல, ஊராரைப் பகைத்து சாபம் பெற்றதால் கண்ணொளி இழந்து துன்புறுகிறாள். சிலந்தியும் அரவும் வேழமும் முக்திபெற்ற திருக்காளத்தி சென்று திருப்பணி செய்தால் சாபம் நீங்கும்.
* தாடகை- அகத்தியரின் சாபத்தால் அரக்கியாக மாறிய, கொடுமையான இயல்புகளைக்கொண்ட இயக்கர் குலப்பெண். இராமருடைய அம்புக்கு இரையாகி மாண்டாள். (இராமாயணம்)
(வளரும்)
செல்: 63819 58636