ஒரு சமுதாயத்தில் ஆசிரியர் (குரு) எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நெசவாளியும் (சுக்கிரன்), வணிகரும் (புதன்), விவசாயியும் (சந்திரன்), அரசு அதிகாரியும் (சூரியன்), காவலாளியும் (செவ்வாய்), துப்புரவுத் தொழிலாளியும் (சனி) அவசியம் என்பதுபோல், கிரகங்கள் அதனதன் வேலையைச் செய்வதால் நல்ல கிரகம், தீயகிரகம்- சுபர், அசுபர் என்ற வேறுபாடு இல்லாமல், கிரகங்களின் பொதுவான காரகத்துவ அடிப்படை மட்டுமே கந்தர்வ நாடியில் இடம்பெறுகின்றது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/guru_7.jpg)
""டமரூக (உடுக்கை) ஒலியால் காலத்தை உருவாக்கிய ஓங்கார சொரூபமே! பசு தன் கன்றுகளுக்காகத் தரும் பாலையும், தேனீக்கள் தங்கள் உணவுக்காக சேகரிக்கும் தேனையும் களவாடும் ஜீவர்களுக்குப் பரிகாரம் உள்ளதா என்பதை விளக்கவேண்டும்'' என்று இச்சா, ஞான, கிரியா சக்திகளாக உருவான ஆதிசக்தி ஈசனிடம் வினவினாள்.
அதற்கு சதாசிவன் உரைத்தது- ""கோமாதா என்று போற்றப்படும் பசுவுக்கு உணவு தருவதால் பாலினைக் களவாடும் பாவமும், தேன் தரும் பூக்களை உருவாக்கும் விருட்சங்களை (மரங்கள்) வளர்ப்பதால் தேனை அபகரிக்கும் தோஷமும் தீரும்.''
""சிற்சபையில் ஆனந்த தாண்டவம் புரியும் பெருமானே, "ஸகடாஸ்யம்' என்ற தாண்டவத்தின் லயமாக அமைந்த ரேவதி மூன்றாம் பாதம் லக்னமாக, அதில் சுக்கிரனும் சூரியனும் கூடியிருக்க, அஸ்வினி முதல் பாதத்தில் புதனும், ரோகிணி இரண்டாம் பாதத்தில் சந்திரனும், திருவாதிரை இரண்டாம் பாதத்தில் சனியும், மூலம் முதல் பாதத்தில் அங்காரகனும் (செவ்வாய்), சதயம் மூன்றாம் பாதத்தில் குருவும் இருக்கப் பிறந்தவரின் ஜென்மப் பலன்களை விளக்க வேண்டும்'' என்று பார்வதி கேட்டாள்.
அதற்குப் பரமேஸ்வரன் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில் ஜனகபுரி என்ற பட்டணத்தில் ஒரு மருத்துவரின் மகனாகப் பிறந்து, தந்தையின் காலத்திற்குப்பிறகு அதே மருத்துவத்தொழில் செய்து வந்தான். வறுமையிலுள்ள நோயாளிகளிடம் பொய் சொல்லிப் பணம் பறித்தான். முதுமையால் இறந்தபின் எமகிங்கரர்கள் அவனை "கிருமி போஜனம்' என்ற நரகத்தில் தள்ளினர். சில காலம் கழித்து சந்திரகிரி அருகில் ஒரு சிற்றூரில் ஊனமான கைகளோடு பிறந்து, இளமைக்காலத்தில் கடுமையான சூலை நோயால் அவதிப்பட்டு வருகிறான். இதற்குப் பரிகாரமாக வறுமையில் வாடுபவருக்கு வஸ்திர தானம், அன்னதானம் செய்து, பின் கங்கையில் நீராடினால் நோய் நீங்கி சுகம் பெறுவான்.''
(வளரும்)
செல்: 63819 58636
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-06/guru-t.jpg)