கந்தர்வ நாடி! 88

/idhalgal/balajothidam/gandharva-nadi-88

இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

88

லால்குடி கோபாலகிருஷ்ணன்

கி.மு., கி.பி. என்று காலத்தைப் பிரித்துக் கணக்கிடுவதுபோல, ஒருவரின் வாழ்க்கையை திருமணத்திற்குமுன் (தி.மு), திருமணத்திற் குப்பின் (தி.பி) என்று வகைப்படுத்தலாம். திருமணம், ஒருவர் வாழ்வின் திருப்புமுனையென்பதே உண்மை. ஆறாம் பாவாதிபதியின் தசையில், பன்னி ரண்டாம் பாவாதிபதியின் புக்தி யில் நடைபெறும் திருமண ஒப்பந்தம், அந்த புக்தி முடிவ தற்குள் முறிந்துவிடும். லக்னா திபதியும், லக்ன யோகாதிபதியும் கோட்சாரத்தில் நட்பு, ஆட்சி, உச்ச வீடுகளில் அமரும்போது நிகழும் திருமண வைபவம், வாழ்வை ஒளிமயமாக்கும். மணமக்கள், ராசிக்கு ஏழாம் வீட்டை குரு பார்க்கும் காலங்களில் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத் தால், தோஷங்கள் விலகி சந்தோஷம் உண்டாகும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

""பெருந்தேவரே! ஆனந்தமயமான ஆத்மா, மனமெனும் மாசுடன் கலந்து, ஆசையெனும் சகதியில் சிக்கித்தவிப்பதன் காரணத்தைத் தாங்கள் விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை மலர்க்குழல் நாயகி திரு எதிர்கொள் பாடி எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு

இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

88

லால்குடி கோபாலகிருஷ்ணன்

கி.மு., கி.பி. என்று காலத்தைப் பிரித்துக் கணக்கிடுவதுபோல, ஒருவரின் வாழ்க்கையை திருமணத்திற்குமுன் (தி.மு), திருமணத்திற் குப்பின் (தி.பி) என்று வகைப்படுத்தலாம். திருமணம், ஒருவர் வாழ்வின் திருப்புமுனையென்பதே உண்மை. ஆறாம் பாவாதிபதியின் தசையில், பன்னி ரண்டாம் பாவாதிபதியின் புக்தி யில் நடைபெறும் திருமண ஒப்பந்தம், அந்த புக்தி முடிவ தற்குள் முறிந்துவிடும். லக்னா திபதியும், லக்ன யோகாதிபதியும் கோட்சாரத்தில் நட்பு, ஆட்சி, உச்ச வீடுகளில் அமரும்போது நிகழும் திருமண வைபவம், வாழ்வை ஒளிமயமாக்கும். மணமக்கள், ராசிக்கு ஏழாம் வீட்டை குரு பார்க்கும் காலங்களில் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத் தால், தோஷங்கள் விலகி சந்தோஷம் உண்டாகும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

""பெருந்தேவரே! ஆனந்தமயமான ஆத்மா, மனமெனும் மாசுடன் கலந்து, ஆசையெனும் சகதியில் சிக்கித்தவிப்பதன் காரணத்தைத் தாங்கள் விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை மலர்க்குழல் நாயகி திரு எதிர்கொள் பாடி எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு ஐராவதேஸ்வரரைப் பணிந்து கேட்டாள்.

ss

உலகுடையான் உரைத்தது- ""பிரும்மம் ஆகாயமெனும் ஆன்மாவைப் படைத்து நின்றது; ஆகாயம் காற்றைப் படைத்ததைப்போல, ஆன்மா வினைப்பயனைக் கூட்டியது. காற்று எனும் வினைப்பயன் அறிவெனும் தீயை மூட்டியது. தீயெனும் அறிவு, மனமெனும் நீர்க்கோலத் தைத் தீட்டியது. மனமெனும் தடாகம், ஆசையெனும் நிலத்தின் சகதியைச் சுமந்தது. விண்ணில் பறக்கும் பறவையும் மண்ணில்தான் தன் இனத்தை உருவாக்கும். ஆகாயமெனும் ஆன்மாவும், தன் கர்மசரீரத்தை ஆசையெனும் மண்ணுலகில் விதைக்கும். இதுவே சிருஷ்டியின் விதியாகும்.''

""சொக்கநாதரே! "க்ருத்ராவலீனம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய கேட்டை நட்சத் திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், ரேவதி நான்காம் பாதத்தில் புதனும், அப பரணி இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், அப பரணி மூன்றாம் பாதத்தில் சூரியனும், ரோகிணி நான்காம் பாதத்தில் செவ்வாயும், திருவாதிரை நான்காம் பாதத்தில் குருவும், புனர்பூசம் முதல் பாதத்தில் சனியும், சித்திரை நான்காம் பாதத்தில் சந்திரனும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று திருவிசைநல்லூர் எனும் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீ சிவயோக நாதரை அன்னை சாந்தநாயகி வேண்டிப் பணிந்தாள்.

வாலீஸ்வரர் உரைத்தது- ""சிவகாமியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் நாகேந்திரன் எனும் பெயருடன், பூம்பாறை என்ற ஊரில் வாழ்ந்துவந்தான். அவன் மூர்க்க குணத்தின் அடையாளமானான். இளம்வயதில், தனக்குக் கல்வி பயிற்றுவித்த குருவைப் பகைத்தான். ஒரு நாள், தன் தீய நண்பர் களின் துணைக்கொண்டு, தன் குருவைக் கொலைசெய்தான். சிலகாலம் சிறையில் வாடியபின் விடுபட்டான். ஊரும் உறவும் அவனை வெறுத்து ஒதுக்கின. மனம் நொந்து, தன்னுயிரை மாய்த்துக்கொண்டான். பலகாலம் பிரேத ரூபத்தில், வன்னி மரத்தில் பரிதவித்தான்.

அதன்பின் பழி சுமந்து எமகிங்கரர்களுடன் இருபது காததூர விஸ்தாரமுள்ள சித்ரகுப்தனது பட்டினத்தின் வழியாக எமபுரிக்குச் சென்றான்.

அறிவுக்கண் திறந்த குருவினைக் கொன்ற தால் "க்ஷாரகர்த்தமம்' எனும் பாழ்நரகத்தில் அடைபட்டான். ஏழுடலிலில், ஓருடலேற்று ஜென்ம கர்மாவைச் சேதனம் செய்ய பூவுலகம் புகுந்தான். குறுங்குடி என்ற ஊரில் ஒரு செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் வளர்ந்தான். முற்பிற வியில் *இந்திரன்போல தன் குருநாதரைக் கொன்றதால், பிரம்மஹத்தி தோஷத்தால் அவதியுறுகிறான். குருவைக் கொன்றவனுக்குப் பரிகாரமே கிடையாது.

*இந்திரன்- வஜ்ராயுதத்தால் தன் குருநாதர் வச்சிரவசுவின் தலையைக் கொய்து யாகத்தில் ஆஹுதியாக்கிவிட்டதால், பிரம்மஹத்தி தோஷம் பெற்றவன்.

(வளரும்)

செல்: 63819 58636

_______________

நாடி ரகசியம்

1. கேட்டை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் செவ்வாயும், புதன், சுக்கிரன், சனி, லக்னமும் கூடியமையும் ஜாதகர் குபேரனுக்கு ஒப்பான செல்வத்தைப் பெறுவார்.

2. கேட்டை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் குருவும், சூரியனும், செவ்வாயும் கூடியமைந்தால், ஜாதகர் அஷ்ட ஐஸ்வரியங்களைப் பெறுவார்.

3. கேட்டை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சூரியனும், மிருகசிரீடம் முதல் பாதத்தில் சனியும் செவ்வாயும் சேர்ந்து அமையப்பெற்ற ஆண் ஜாதகர், ஜனன காலத்தில் தந்தையை இழப்பார்.

கேள்வி: ஜனன ஜாதகம் மற்றும் கிரக சஞ்சாரங்களால், ஒருவருக்கு நோய் ஏற்படுவதன் காரணத்தை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?

பதில்: சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களே ஒருவரின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் முதன்மையான கிரகங்கள். ஒரு தேர்ந்த மருத்துவர், நோயாளியின் விரல் நகங்களின் நிற மாற்றத்தையும், அதில் ஏற்படும் கோடுகளையும், புள்ளிகளையும் ஆராய்ந்தே நோய்க்குறியினை அறிவதுபோல, நகத்திற்குக் காரகனான செவ்வாயின் நிலையைக் கணக்கிட்டாலே நோயை அறியலாம். செவ்வாயும் ஐந்தாம் பாவமுமே ஒரு ஜாதகரின் நோய் எதிர்ப்பு சக்தியை சுட்டிக்காட்டும். செவ்வாயின் வலிலிமை குறைவாகவுள்ள ஜாதகர்கள் அடிக்கடி நோய்வாய்ப் படுவதற்கான வாய்ப்பு அதிகம். பொதுவாக ஜனன ஜாதகத்தில் லக்னாதிபதியுடன் ஆறு, எட்டு, பன்னிரண்டாம் அதிபதிகள் தொடர்பிலிருந்து நீசச் செவ்வாயும் அமைந்தால், வாழ்க்கை முழுவதும் நோயால் துன்பம் உண்டாகும். சூரியன் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரங்களின் மூன்றாம் பாதத்தில் அமையும் ஜாதகர்களுக்கு, தொற்று நோய்களின் பாதிப்பு அதிகமாகும். அதேபோல் செவ்வாய், புனர்பூசம் நான்காம் பாதத்தில் அமையும் ஜாதகருக்கும் அடிக்கடி ஆரோக்கியம் கெடும். சிலருக்கு தசாபுக்தி மற்றும் கோட்சாரத்தில் செவ்வாய் பாதிப்படைவதால், ஆரோக்கியத்தில் தற்காலிலிகப் பின்னடைவு உண்டாகுமென்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.

bala201219
இதையும் படியுங்கள்
Subscribe