இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

87

லால்குடி கோபாலகிருஷ்ணன்

சிலர் எவ்வளவுதான் பரிகா ரங்கள் செய்தாலும், தோஷம் விலகிப் பலன் கிடைப்பதில்லை. சாதகமான பாவத்தின் வலிலிமையைக் கூட்டுவதும், பாதகமான பாவத் தின் வலிலிமையைக் குறைப்பதுமான முயற்சியே பரிகாரம். கிரகங்களின் காரகத் தில் சுப, அசுபப் பலன்கள் உள்ளது போல, பாவங்களின் காரகத்திலும் சுப, அசுபப் பலன்கள் உள்ளன. பரிகாரம் செய்யப் ssபடவேண்டிய பாவத்தின் அதிபதி கோட்சாரத்தில் நீசம், அஸ்தங் கதம், கிரக யுத்தத்தில் தோல்வி போன்ற நிலைகளை அடையும் காலத்தில் செய்யப்படும் பரிகாரங்கள் பலன் தராது என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

Advertisment

""காங்கேசுவரரே! தாங்கள் திரிகாலமும் ஆனந்த சாகரத்தில் திளைத்திருக்கும்போது, தாங்கள் படைத்த உயிர்கள் மட்டும் பிரும்மானந்தத் திலிலிருந்து நழுவிவிடுவதன் காரணத்தைத் தாங்கள் விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை மரகதாம் பிகை விரிஞ்சிபுரம் எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு மார்க்கபந்தீஸ்வரரைப் பணிந்து கேட்டாள்.

நாகநாதர் உரைத்தது- ""புத்தியும், மனமும் அகங்காரத்தால் பிரிக்கப்படும்போது ஆனந்தம் மறைந்துபோகும். சித்த புருஷர்களுக்கு மனமானது புத்தியில் கரைந்துபோகும். ஞானிகள், தான் கர்த்தாவும் (செய்பவன்) அல்லன்; போக்தாவும் (அனுப விப்பன்) அல்லன்; தான் கர்மாவின் கரத்திலுள்ள கருவி மட்டுமே என்ற ஞான விரிவினை உணர்வர். காட்சியாய் இல்லாமல், தங்களை சாட்சியாய் உணர்வோரே ஆனந் தம் பெறுவர்.''

""சோழீசுவரரே! "பார்ஸ்வ ஜானு' எனும் தாண்டவத்தின் லயமாகிய கேட்டை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், பூரட்டாதி முதல் பாதத்தில் செவ்வாயும், அஸ்வினி நான்காம் பாதத்தில் குருவும், கார்த்திகை முதல் பாதத்தில் புதனும், மிருகசீரிடம் இரண்டாம் பாதத்தில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்திருக்க, மிருகசீரிடம் நான்காம் பாதத்தில் சந்திரனும், புனர்பூசம் முதல் பாதத்தில் சனியும் அமரும் அமைப்பைப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று சேந்தமங்கலம் எனும் திருத் தலத்தில் அருள்புரியும் ஸ்ரீசோமேஸ் வரரை அன்னை சௌந்தரவல்லி வேண்டிப்பணிந்தாள்.

Advertisment

நீலகண்டேஸ்வரர் உரைத்தது- ""பிங்கலையே! இந்த ஜாதகன் முற்பிறவி யில் துஷ்யந்தன் எனும் பெயருடன் ஒரு அரசக் குடும்பத்தில் பிறந்து, மாகறல் என்ற ஊரில் வாழ்ந்துவந்தான். அவன் குடும்பத்தின் கட்டுப்பாட்டிலிலிருந்த பதினெட்டு கிராமங்களிலும் நிலத் தீர்வையை வசூலிலித்துவந்தான். பஞ்ச காலங் களிலும், விளைச்சல் குறைவான காலங் களிலும் விளைச்சலுக்கேற்ப நிலத் தீர்வையைக் குறைத்துக்கொள்ளாமல் அதிக நிலத்தீர்வை கேட்டுக் கொடுமைப் படுத்தினான். இதழும் மடங்காது, பூவும் வாடாது, தேன் உண்ணும் தேனீக்களைப் போல நிலத்தீர்வையை, வறியவர் களைத் துன்புறுத்தாது வசூலிலிப்பதே தர்மம் என்பதை அறியமறந்தான். அவன் செய்த கொடுமையால் பலரும் மாண்டனர். காலம் அவனை முதுமையில் தள்ளியது. முதுமை அவனுக்கு மரணத்தின் வாயிலைக் காட்டியது. எமதூதர்கள் அவனைப் பாசக்கயிற்றால் கட்டி உருட்டி, "மகா ரௌரவம்' எனும் நரகத்தில் தள்ளினர்.

பலகாலம் நரகதண்டனையை அனுபவித்த பின், பூவுலகின் மண்வாசனையை நுகர்ந்தான். சிகாமணி என்று பெயரிடப் பட்டு, நாற்றம்பள்ளி என்ற ஊரில் வாழ்ந் தான். இளம்வயதில் பெற்றோரையிழந்து அநாதையானான். கைவிளக்கையிழந்து காரிருளில் செல்பவன்போல் திக்கற்றவனாகத் தவிக்கிறான். முற்பிறவியில் * வேனன்போல் தன் குடிமக்களைத் துன்புறுத்தியதால் அவதியுறு கிறான். திருத்தலங்களில் உழவாரப்பணி செய்தால் அவன் செய்த பாவம் நீங்கும்.

* வேனன்- நிடத நாட்டு மன்னன்.

கொடுங்கோல் ஆட்சிசெய்ததால் முனிவர்

களால் சபிக்கப்பட்டவன்.

-விஷ்ணு புராணம்

(வளரும்)

செல்: 63819 58636

________________

நாடி ரகசியம்

1. கேட்டை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், உத்திரம் முதல் பாதத்தில் சூரியனும் அமையும் ஜாதகர் அரசாங்கத்திடமிருந்து அபரிமிதமான ஆதாயம் பெறுவார்.

2. கேட்டை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் புதனும் செவ்வாயும் சேர்ந்து அமையப்பெற்ற ஜாதகருக்கு திருமணத்திற்குப்பின் வாழ்க்கையில் வீழ்ச்சி உண்டாகும்.

3. கேட்டை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சூரியனும் லக்னமும் கூடியமைந்தால், ஜாதகர் வெகுஜனங்களால் வெறுக்கப்படுவார்.

கேள்வி: ராசி, நட்சத்திரப் பொருத்தங்களைப் பார்த்துத் திருமண முகூர்த்தம் குறித்தபின்னும், சில திருமணங்கள் தடைப்பட்டு, நடைபெறாமல் போவதன் காரணத்தை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?

பதில்: ஜோதிடப் பிதாமகராகிய சகாதேவர், தருமரின் ராஜசூய யாகத்திற்கு நாள் குறித்துக்கொடுத்தார். ஆனாலும், தருமர் சக்கரவர்த்தியாகாமல் வனவாசம் செல்லவேண்டிய தாயிற்று. தருமருக்கு சக்கரவர்த்தியாகும் யோகமுள்ளதா? வனவாசம் செல்லும் யோகமுள்ளதா என்று ஆராய்ந்திருந்தால், இந்த பிழை நேர்ந்திருக்காது. அதுபோல, மணமக்களின் ராசி, நட்சத்திரப் பொருத்தங்களைப் பார்ப்பதும், சரியான முகூர்த்த நாளைக் குறிப்பதுமே திருமணத்தை உறுதிசெய்யாது. முதலிலில் மணமக்களின் ஜாதகப்படி, திருமண யோகத்தைத்தரும் தசாபுக்தி அமைந்துள்ளதா என்பதை உறுதிசெய்து கொண்டபிறகே பொருத்தம் பார்க்கவேண்டும். இல்லாவிடில் பொருத்தம் வருத்தமாய் முடியும். ஆண் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு திரிகோணாதிபதிகள் மற்றும் சுக்கிரன் அமரும் வீட்டின் யோக, பாதகாதிபதிகளை ஆராயவேண்டும். பெண் ஜாதகத்தில் செவ்வாயின் திரிகோணாதிபதிகள் மற்றும் செவ்வாய் அமரும் வீட்டின் யோக, பாதகாதிபதிகளை ஆராயவேண்டும். இந்த ஆய்வினை நவாம்ச சக்கரத்தைக்கொண்டே கணக்கிடவேண்டும். நவாம்ச சக்கரத்தில், நடப்பு தசாபுக்திநாதர்கள் திருமணத்திற்கு சாதகமா? பாதகமா என்பதையறிந்த பின்னரே திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமென்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.