இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

ந்தர்வ நாடிகர்மாவைப் பற்றி விளக்குகிறது. கர்மாவை ஒருபோதும் ஒழிக்கமுடியாது; பண்டமாற்று முறைபோல் ஒரு கர்மாவைக் கொடுத்து வேறு கர்மாவை வாங்கிக்கொள்ளவே முடியும். கர்மா, நாம் பயன்படுத்தும் நாணயம்போல் ஓரிடத்தும் நில்லாதது. நல்ல கர்மா சொர்க்கத்தையும், தீய கர்மா நரகத்தையும் தந்து மறுபடி பிறப்பெடுக்கவே வைக்கும். ஞானிகள் மட்டுமே கர்மாவிலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைந்து பிறவியில்லாத நிலையை அடைகிறார்கள்.

Advertisment

igarivar""தாயைக்காட்டிலும் கருணை மழை பொழியும் தாயுமானவரே! கலியுகத்தில் உயிர்கள் நான்கு வகை யோகங்களில், எந்த யோகத்தினால் பரம்பொருளை உணர்ந்து துன்பங்களிலிருந்து விடுபடமுடியும் என்ற வழிமுறையை தயைகூர்ந்து விளக்குங்கள்'' என்று ஜகன்மாதா, கயிலாயநாதரிடம் வேண்டினாள்.

பரமேஸ்வரன் பார்வதியிடம், ""இந்த கலியுகத்தில் ஞானயோகம் கடினமானது; மனதை ஒருமுகப்படுத்தாத சாதகர்களுக்கு தியானப் பாதையும் எளிதல்ல. ஆசை உள்ளவரை கர்மயோகமும் கைகூடாது. எனவே பக்தியோகத்தின்மூலமே தன் ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கவேண்டும். "ஜெபகோடி தியானம்' என்பதை உணர்ந்து, தியானத்தால் உபாசனை கைகூடி, உபாசனையால் ஞானயோகத்தைக் கடந்து பரம்பொருளை அடைவான்'' என்ற கருத்தை அருளிச்செய்தார்.

""பஞ்ச பூதங்களுக்கு அதிபதியாகி ஐந்து சபைகளில் நடனமாடி, ஊழிக்கூத்தில் யுகங்களைப் பூர்த்திசெய்யும் பெருமானே, "நாகாபஸர்ப்பிதம்' என்ற தாண்டவத்தின் லயமாக அமைந்த ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் லக்னமாக, குருவும் அதில் கூடியிருக்க, ரேவதி நான்காம் பாதத்தில் சூரியனும், அஸ்வினி முதல் பாதத்தில் சுக்கிரனும், அஸ்வினி இரண்டாம் பாதத்தில் புதனும் கூடியிருக்க, ஹஸ்தம் இரண்டாம் பாதத்தில் சந்திரனும், அவிட்டம் இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் சனியும் இருக்கப் பிறந்த ஜாதகரின் கர்ம வினைப்பயன் பற்றி விளக்க வேண்டும்'' என்று மகாமாயியான பராசக்தி வினவினாள்.

Advertisment

சிவபெருமான் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முந்தைய பிறவியில் தச்சர் குலத்தில் பிறந்து, பின் தன் திறமையால் ஸ்தபதியாகி பல கோவில்களை நிர்மாணம் செய்தான். தன் வருவாயில் பெரும் பகுதியை தான தருமங்களுக்குக் கொடுத்துவிட்டான். ஆனாலும் தன் நண்பருக்காக நீதிமன்றத்தில் ஒருமுறை பொய்சாட்சி சொன்னான். அதனால் குற்றமற்ற ஒருவன் தண்டிக்கப்பட்டான். அந்த ஸ்தபதி இதய நோயால் இறந்ததும் "அவீசி' என்ற நரகத்திற்கு எமதூதர்களால் அழைத்துச் செல்லப்பட்டான். சிலகாலம் கழித்து ஸ்ரீபுரம் என்ற ஊரில் சத்திரியகுடும்பத்தில் பிறந்தான்.

செல்வம், செல்வாக்கோடு வாழ்ந்துவந்த காலத்தில், தீயவர் நட்பினால் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி அவமானப்பட்டு வருகிறான்.

இதற்குப் பரிகாரமாக திலதானம், கோதானம் செய்து பின் ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய தீயபழக்கங்களிலிருந்து விடுபடுவான்.''

(வளரும்)