இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
77
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஒவ்வொரு ஜாதகத்திலும் ஷத்ர பாவம் (குடை) எனும் பாதுகாப்பைத்தரும் பாவங்கள் உள்ளன. ஷோடச உபச் சாரத்தில் அவகுண்டனம் செய்யும்போது, சோடிகா முத்திரை, காளசண்டீ முத்திரைகளாலும், கவச மந்திரத்தாலும் மூன்று கவசங்கள் உண்டாக்கப்படுவதுபோல, இறைவனால் நமக்குக் கொடையாக வழங்கப்பட்டுள்ள குடை ஸ்தானங் களே 3, 7, 11-ஆம் பாவங்கள். மூன்றாம் பாவம் பராக் கிரமத்தையும், இளைய சகோரத்தையும் குறிக்கும். (தம்பி யுடையான் படைக்கு அஞ்சான்). ஏழாம் பாவம் கூட்டாளி மற்றும் வாழ்க்கைத்துணையைக் குறிக்கும். பதினோறாம் பாவம் மூத்த சகோதரம் மற்றும் சமுதாயத்தைக் குறிக்கும். இந்த பாவங்களில் கொடுப்பினையிலோ, தசாபுக்தியிலோ, கோட்சாரத்திலோ குறை ஏற்படும்போது, கோட்டையையும் கவசத்தையும் இழந்த மன்னர்போல் ஜாதகர் துன்பத்தால் சூழப்படுகிறார் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""மணிவாசகரே! அனல்வாதம், புனல்வாதம் செய்யும் தர்க வாதிகள், தத்துவ ஞானிகளின் கூற்றை ஏற்காது மாயை பொய்யென்றும், ஆன்மாவும், பிற உலகியல் பொருட் களும் வேறென்றும், காணும் காட்சியே மெய்யென்றும் வாதிடுகின்றனர். வழக்குரைத் தாருக்கு வழிகாட்டும் வள்ளலே! அறிவில் எளியோரும் அறியும் வண்ணம். இதை விளக்கியருள வேண
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
77
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஒவ்வொரு ஜாதகத்திலும் ஷத்ர பாவம் (குடை) எனும் பாதுகாப்பைத்தரும் பாவங்கள் உள்ளன. ஷோடச உபச் சாரத்தில் அவகுண்டனம் செய்யும்போது, சோடிகா முத்திரை, காளசண்டீ முத்திரைகளாலும், கவச மந்திரத்தாலும் மூன்று கவசங்கள் உண்டாக்கப்படுவதுபோல, இறைவனால் நமக்குக் கொடையாக வழங்கப்பட்டுள்ள குடை ஸ்தானங் களே 3, 7, 11-ஆம் பாவங்கள். மூன்றாம் பாவம் பராக் கிரமத்தையும், இளைய சகோரத்தையும் குறிக்கும். (தம்பி யுடையான் படைக்கு அஞ்சான்). ஏழாம் பாவம் கூட்டாளி மற்றும் வாழ்க்கைத்துணையைக் குறிக்கும். பதினோறாம் பாவம் மூத்த சகோதரம் மற்றும் சமுதாயத்தைக் குறிக்கும். இந்த பாவங்களில் கொடுப்பினையிலோ, தசாபுக்தியிலோ, கோட்சாரத்திலோ குறை ஏற்படும்போது, கோட்டையையும் கவசத்தையும் இழந்த மன்னர்போல் ஜாதகர் துன்பத்தால் சூழப்படுகிறார் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""மணிவாசகரே! அனல்வாதம், புனல்வாதம் செய்யும் தர்க வாதிகள், தத்துவ ஞானிகளின் கூற்றை ஏற்காது மாயை பொய்யென்றும், ஆன்மாவும், பிற உலகியல் பொருட் களும் வேறென்றும், காணும் காட்சியே மெய்யென்றும் வாதிடுகின்றனர். வழக்குரைத் தாருக்கு வழிகாட்டும் வள்ளலே! அறிவில் எளியோரும் அறியும் வண்ணம். இதை விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை சோமலாம்பிகை கீழ்ப் பழையறை எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகுசோமேஸ்வரரைப் பணிந்துகேட்டாள்.
வன்னிநாதர் உரைத்தது- ""பானை, குடம் போன்றவை மண்ணால் செய்யப்பட்டவை யானாலும், தோற்ற மாயை யால், பிரிதொன்றாக உணரப் படும். அதுபோன்றே இந்த பிரபஞ் சமும், அதிலுள்ளவையும் பல ரூபங் களாய்த் தெரிந்தாலும், அவை யனைத்தும் ஆன்மாவின் ஸ்வரூ பமே. இதை மறைப்பதே மாயை. உருவாக்கமென்பதே உண்மையை மறைத்தல். தர்க்கவாதி மண்ணைப் பானையாகப் பார்க்கிறான். தத்துவஞானியோ, பானையை மண்ணாகவே பார்க்கிறான். மண்ணே பானைக்கு ஆதாரம். பானை மண்ணின் விகாரம். மாயை என்பதே மனதின் விகாரம் என்பதை அறியமாட்டார்.''
"ஞானசேகரரே! "நிசும்பிதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய ஸ்வாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், கேட்டை நான்காம் பாதத்தில் புதனும் சூரியனும் சேர்ந்திருக்க, மூலம் முதல் பாதத்தில் சுக்கிரனும், சதயம் இரண்டாம் பாதத்தில் குருவும், சித்திரை முதல் பாதத்தில் சந்திரனும் செவ்வாயும் சனியும் சேர்ந்திருக்கும் அமைப் பைப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று அகத்தியான் பள்ளி எனும் திருத்தலத்தில் அருள்புரியும் அகத்தீசுவரரை அன்னை மங்கைநாயகி வேண்டிப் பணிந்தாள்.
காலக்கூத்தர் உரைத்தது- ""மாதரசே! இந்த ஜாதகன் முற்பிறவியில் அம்பலவாணன் எனும் பெயருடன், நேத்திரபுரி என்ற ஊரில் வாழ்ந்துவந் தான். அவன் இளமைப்பருவத்தில் பரதக் கலையைக் கற்றுத்தேர்ந்தான். அந்தக் கலைக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து, பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடித்து வாழ்ந் தான். பரதமுனிவரின் ஆசிபெற்று, அந்தக் கலை யைப் பிறருக்கும் போதித்துவந்தான். அவனிடம் பரதம் கற்கவந்த பெண்ணைக் கண்ணால் காமுற் றான். வாழ்க்கையின் ஜதி மாறியது. கைவழி நயனஞ் செல்ல, கண்வழி மனமும் செல்ல, மனதின்வழி பாவமும், பாவத்தின்வழி ரசமும் சேர, காமனின் கைவில்லால் வீழ்ந்தான். காய்ந்த சருகுகளில் காட்டுத்தீ பற்றியதுபோல, அவன் கலைத்தவம் கருகிப்போனது.
காற்றின் திசை மாற்றம்போல, அவன் மனமும் திசை மாறியது.
கொண்டவளையும் கைவிட் டான். புது வெள்ளம், பழைய ஆற்றுநீரையும் கொண்டு போவதுபோல், கலையும் காதலும் காணாமல் போயின.
மனம் வெறுத்து, தன்னுயிர் மாய்த்தான்.
பிரேத ரூபம் கொண்டு பல நாள், அலைந்தான்.
எமலோகத்தின் அழைப்பை ஏற்றான். "வஜ்ர கண்டம்' எனும் நரகத்தில் சிக்கி அல்லலுற்றான்.
பூதவுடல் பெற்று பூதலம் சென்றான். ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து, விசித்திரன் எனும் பெயர் பெற்றான். இளம்வயதில் நோயுற் றான். கால்கள் செயலிழந்து போயின. முற்பிறவி யின் விதிப்பயனால் வாடுகிறான். நாட்டியம் பயிலவந்த மகள் போன்ற சிஷ்யையை, மனைவி யாக்க முயன்றான். குறிக்கோளை இழந்தவன் தன்னையே இழந்தவன் ஆவான். *விஸ்வாமித் திரர்போல கொண்டதைத் துறந்து கண்டதே காட்சியென்று தடம் மாறிப்போன தால் அவதியுறுகிறான். ஊனமுற்றோருக்கு உதவி செய்தால் குணம் பெறுவான்.
*விஸ்வாமித்திரர்- மேனகை எனும் தேவலோகப் பெண்ணின்மேல் கொண்ட இச்சையால், தன் தவவலிலிமையை இழந்தவர்.
(வளரும்)
செல்: 63819 58636
______
நாடி ரகசியம்
1. ஸ்வாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சந்திரனும், லக்னமும் அமையப்பெற்ற ஜாதகர் ராஜயோகம் பெறுவார்.
2. ஸ்வாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் செவ்வாயும், லக்னமும் சேர்ந்திருந்தால் நிலவளத்துறையில் ஜீவனம் அமையும்.
3. ஸ்வாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சூரியனும், அஸ்வினி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும் அமையும் ஜாதகருக்கு திருமண வாழ்வில் சோகம் உண்டாகும்.
கேள்வி: ஒருவருக்கு பிறந்தநாளும், நேரமும் சரியாகத் தெரியவில்லையென்றால், நஷ்ட ஜாதகத்தைக் கணிக்கும் முறையை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?
பதில்: கர்க முனிவர், மூதண்டர், சவணர், மணித்த முனிவர் போன்றோர் நஷ்ட ஜாதகத்தைக் கணிக்க பல வழிமுறைகளைக் கையாண்டிருக்கிறார்கள். பெருவிரல் ரேகைகளை எண்ணி அதனுடன் ஒன்றைக் கூட்டி வரும் தொகையை, ஒன்பதால் வகுக்க வரும் ஈவு, சூரியனிருக்கும் ராசியைக் காட்டும். மிகுதியை பன்னிரண்டால் பெருக்கிவரும் தொகையை இருபத்தேழால் வகுக்க, சந்திரனிருக்கும் நட்சத்திரத்தை அறியலாம். இதேபோல், மற்ற கிரகங்களுக்கும் கணிதம் செய்து, கிரகங்களின் அமைவிடத்தை அறியலாம். ஜாதகர் வரும் நேர லக்னத்தின் நவாம்சம், துவதாம்சம் கொண்டு சூரிய, சந்திர நிலைகளையறியலாம். இந்த முறைகள், சற்றே கடினமாக இருப்பதால், அங்க லட்சணம் எனப்படும் சாமுத்திரிகா லட்சணத்தினைக்கொண்டு, ஜாதகத்தைக் கணிக்கும் முறையே நடைமுறையிலுள்ளது. மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் முகத்திலுள்ள பஞ்ச அங்கங்களைக்கண்டு, பஞ்சாங்கத்தைக் கொண்டு ஜாதகம் கணிப்பதுபோல் கணிக்கலாமென்பதே இதன் அடிப்படை. உதாரணத்திற்கு, அடர்ந்த புருவம் உள்ளவர்களுக்கு மகர ராசியில் செவ்வாய் உச்சம் பெற்றிருக்கும். அகலமான புருவம் உள்ளவர்களுக்கு செவ்வாய் மேஷத்தில் ஆட்சிபெற்றிருக்கும். முடியும், நகங்களும் செவ்வாயின் ஆதிக்கத்திலிருப்பதாலேயே, மீசை வீரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதேபோல் உபய ஸ்தானமாகிய காதுகளின் அமைப்பைக்கொண்டு, உபய ஸ்தானாதிபதிகளாகிய புதன் மற்றும் குருவின் நிலைகளையறியலாம். அங்க லட்சணத்தைக்கொண்டு, "அங்கவித்யா' முறையில் நஷ்ட ஜாதகம் கணிப்பதே துல்லிலியமாக அமையும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.