இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

ரு ஜாதகருக்கு தர்ம, கர்மாதிபதிகள் சாத க மான பலன்களையே தருவார்கள். ஒன்பதாம் வீட்டோன் தர்மாதிபதியாகவும், பத்தாம் வீட்ட திபதி கர்மாதிபதியாகவும் அமைகிறார்கள். 6, 8, 12 போன்ற துர்ஸ்தானங் களில் தர்ம, கர்மாதிப திகள் அமர்ந்தாலும் கெடுதல் செய்வதில்லை.

தர்ம, கர்மாதிபதிகளின் தின, ஹோரைகளில் துவங்கும் செயல்கள் நல்ல பலன்களையே தரும். தர்ம, கர்மா திபதிகளின் தசை மற்றும் புக்திகளில் யோகமான பலன் களை எதிர்பார்க்கலாம் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

gga

Advertisment

""திருமேனி அழகரே! ஒளியுடலாய் உள்ள பிரும்மத்தை, பூவுலகின் ஞானியர் உருவாய் வழிபட உபதேசம் செய்வது ஏன் என அறிவில் எளியோரும் தெளிவுறு மாறு விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை ஆவுடையநாயகி சூரைக்குடி எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு தேசிகநாதரைப் பணிந்துகேட்டாள்.

மரகதேஸ்வரர் உரைத்தது- ""ஒளியென் றால் விளக்கும், நீரென்றால் குவளை நீரும் நினைவில் ஒடுங்கும். விளக்கும் குவளையும் மெய்ப்பொருளைச் சுட்டிக் காட்டாது எனினும், நினைவதனில் நிறுத்தும் உபாயமன்றோ. ஒளியைக் காணாதவன் இருளை உணரமுடியாது. உருவத்தைக் காணாதவன் அருவத்தை அறியமுடியாது. உருவாயும் அருவாயும், உளதாயும் இலதாயும் அமைவதே பிரும்மம்.''

""ரத்னகிரிநாதரே! "ஆவர்த்தம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய சித்திரை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், ரேவதி இரண்டாம் பாதத்தில் சந்திரனும், ரோகிணி இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், திருவாதிரை நான்காம் பாதத்தில் புதனும், புனர்பூசம் முதல் பாதத்தில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்திருக்க, உத்திரம் முதல் பாதத்தில் குருவும், சித்திரை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சனியும் அமர்ந்திருக்கும் அமைப்பைப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று தாராமங்கலம் எனும் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீகைலாச நாதரை அன்னை சிவகாமசுந்தரி வேண்டிப் பணிந்தாள்.

Advertisment

சத்யவாகீஸ்வரர் உரைத்தது- ""அமிர் தையே! இந்த ஜாதகன் முற்பிறவியில் வீரசேனன் எனும் பெயருடன் விருத்தகிரி என்ற ஊரில் வாழ்ந்துவந்தான். அவன் செல்வமும் செல்வாக்குமுள்ள குடும் பத்தில் பிறந்து, கண்டதே காட்சி, கொண்டதே கோலமென தன் மனம் போனபோக்கில் வளர்ந்தான். அவன் ஒழுக்கக்குறைவால் குருகுலத்திலிலிருந்து நீக்கப்பட்டான். பொன்னும் பொருளும் தந்து, குருகுலத்தில் மீண்டும் இணைய தலைப்பட்டான். ஒழுக்கமில்லாதவன் பொருளை, அவன் குரு ஏற்கமறுத்தார். சினம் கொண்ட வீரசேனன் குருவின் சிகையை அறுத்து அவமானப்படுத்தினான். ஞானக் கண்ணை இழந்து, அறியாமை இருளில் மூழ்கினான். தீயோர் நட்பில் இளமை கரைந்தது. கூடா நட்பால் தீரா நோயுற்றன். அவன் பெற்ற செல்வம் அவனைக் காக்க மறந்தது.

அவன் உடலிலில் சுவாசம், வாசம் செய்ய மறுத்தது. உயிர் நரகம் சென்றது. ட்டைக்குழி, அரணைக் குழியில் வதைக்கப்பட்டான். "க்ஷாரகர்த்தமம்' எனும் நரகத் தில் பலகாலம் துன்புற்றபின், நிலவுலகில் வீழ்ந்தான்.

தக்கோலம் என்ற ஊரில் ஒரு வைசியக் குடும்பத்தில் பிறந்தான். தன் தந்தைக் குப்பின், குடும்ப வணிகத்தை நிர்வகிக்கும் பொறுப்பைப் பெற்றான். அவன் வாழ்க்கை யில் ஞாபக மறதி நோய், வேண்டாத விருந்தாளியாகப் புகுந்தது. நோயின் கடுமை யால், தொழிலிலில் பின்னடைவு ஏற்பட்டது. வாழ்வில் வளமை வறண்டது. *ரைக்ரவர் அறிவுறுத்தியதுபோல் ஞானத்தின் மேன் மையை உணராது, ஞானகுருவின் சாபத்தை முற்பிறவியில் பெற்றதால் துன்பப்படுகிறான். அறியாமை இருள்நீக்கும் குருவின் சிகையை அறுத்தவனுக்கு எத்தனை பிறவியெடுத்தாலும் சாப விமோசனமே கிடையாது.''

*ரைக்ரவர்- பதினாறு செல்வங்களில் முதன்மையான ஞானத்தை, பொன்னும் பொருளும் ஒருபோதும் ஈடுசெய்ய இயலாது என்பதை, ஜானஸ்ருதி என்னும் அரசனின் வழித்தோன்றலுக்கு இடித்துரைத்த ஞானி.

(வளரும்)

செல்: 63819 58636

____________

நாடி ரகசியம்

1. சித்திரை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சூரியனும், திருவோணம் இரண்டாம் பாதத்தில் சந்திரனும் அமைந்தால் பொறியியல் துறையில் சிறப்பு உண்டாகும்.

2. சித்திரை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சுக்கிரனும், பூசம் நான்காம் பாதத்தில் செவ்வாயும் அமைந்தால் ஜாதகருக்கு செல்வாக்கும் செல்வச் செழிப்பும் உண்டாகும்.

3. சித்திரை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் புதனும், சித்திரை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும் அமையும் ஜாதகர் சுயமரியாதையை இழப்பார்.

கேள்வி: நிமித்தம், சகுனம், கோள் கணிதம் ஆகியவற்றை அறிவியலின் அடிப்படையில் விளக்கமுடியுமா?

பதில்: அனுபவத்தால் உண்மைகளைக் கண்டறிதலே (Observation) அறிவியலின் அடிப்படை கோள் கணிதம் நேரியல் கணித அடிப்படையில் (Linear System) அமைவது. நிமித்தம், சகுனம் போன்றவை நேரியல் சாராத (Non-Linear System) கோட்பாடுகளை உள்ளடக்கியவை.

ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு, பின்னாளில் வரும் சூறாவளியை அறிவுறுத்தலாம் என்பதே மேலைநாட்டு விஞ்ஞானிகளின் கருத்து.(Choas Theory-Butterfly Effect).). இதையே நாம், நிமித்த, சகுன சாஸ்திரங்களாகக் காண்கிறோம். உதாரணத்திற்கு, எறும்பு, முட்டையைச் சுமந்து திட்டை ஏறினால் மழை வருமென்பது, மழை வருவதற்கான சகுனம். மழை வருவதை முன்கூட்டியே உணரும் எறும்புகள், முட்டைகள் மழையால் பாழாகாமல் இருப்பதற்காகவே, மேடான இடங்களில் சேமிக்கின்றன என்பதே உண்மை. தூக்கணாங்குருவி கூட்டினைக்கொண்டு, வடகிழக்குப் பருவ மழையையும் தென்மேற்குப் பருவ மழையையும் அறியலாம். நிமித்தம் என்பது இயற்கை அறிவியல். ஜோதிடத்தில், "ஸம்ஹிதா ஸ்கந்தம்' என்ற பிரிவில் வருவதே நிமித்தம். பறவைகளால் ஏற்படும் நிமித்தமே சகுனம். (சகுனப் பட்சி). கிரக சஞ்சாரங்களைக் கணக்கிடும் நேரத்தில் நிகழும் நிமித்தங்களையும் கருத்தில்கொண்டே பலன்களையறிய வேண்டுமென்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.