இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

102

லால்குடி கோபாலகிருஷ்ணன்

Advertisment

பொதுவாக தசாபுக்திப் பலன்களைக் காணும் போது, தசாபுக்தி நாதர்களின் மித்ர ராசி, மித்ர நவாம்சம், உச்ச- நீச கதிகள் போன்றவற்றை அனுசரித்து. ஏழுவிதமான மாறுபாடுகளை அறியலாம் அவை. சம்பூர்ண தசை, பூர்ண தசை, ரிக்த தசை, ஆரோஹினி தசை, அவரோஹினி தசை, மத்திம தசை, அதம தசை எனப்படும். இதில் பரம உச்சத்திலிருக்கும் நட்பு கிரகத்தின் தசையில் வலிமையான மித்ர கிரகத்தின் புக்தி நடை பெறுமேயானால், அந்த சம்பாண தசையில் இராஜபோக சுகத்தை அனுப விக்கலாம். நீசம், பகை, கிரக யுத்தத்தில் தோல்வி போன்ற அவஸ்தை களையுடைய கிரகங்களின் தசை, ஜாதகரை படுபாதாளத்தில் தள்ளும்.

சம்பூரண தசா புக்தி நடக்கும் காலத்தில் துவங்கும் பணிகள் மட்டுமே முழுவெற்றியைத் தருமென்தே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

""வடமூலநாதரே! மனிதர்களின் முற்பிறவி வாழ்க்கையையும், வரும் பிறவியின் நிலையையும் அவர் களாகவே அறிவதற்கான உபாயத்தைத் தாங்கள் கூறியருள வேண்டுகிறேன்'' என அன்னை பார்வதி, திருச்சூர் திருத் தலத்தில் உறையும் ஸ்ரீ வடக்கநாதரைப் பணிந்துகேட்டாள்.

Advertisment

கச்சாலீஸ்வரர் உரைத்தது- ""மனிதன் ஒவ்வொரு பிறவியிலும் வெவ்வேறு பெற்றோரைப் பெறு கிறான். முற்பிறவியில் உயிர்களிடம் காட்டிய அன்பே தாயாகவும், பெற்ற அறிவே தந்தையாகவும், ஞானமே குருவாகவும் இப்பிறவியில் வாய்க்கும். அதனாலேயே, பெற்றோருக்கும் குருவுக்கும் செய்யும் பணிவிடையே ஜென்மாந்திர பாவங்களைத் தீர்க்கும். கர்மவினைப்பயனே குலமும், சுற்றமும் நட்பும், பகையுமாக அமையும். பிறக்கும் புத்திரரின் ஒழுக்கமே தந்தை யின் வரும் பிறப்பின் நன்மை, தீமை களை நிர்ணயிக்கும். அதுவே மகன் தந்தைக்காற்றும் உதவி. உபநயனத்தில் தந்தை மகனுக்கு பிரம்ம உபதேசம் செய்வதும், அந்திமத்தில் மகன் தந்தைக்கு கர்ணமந்திரத்தை உபதேசம் செய்வதன் கருத்தும் இதுவே.''

""சபாபதியே! "கரிஹஸ்தம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய திருவோண நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், மிருக சீரிடம் நான்காம் பாதத்தில் சந்திரனும், பூசம் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், பூசம் மூன்றாம் பாதத்தில் சூரியனும், மகம் முதல் பாதத்தில் புதனும் சனியும் சேர்ந் திருக்க, ஹஸ்தம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், ஸ்வாதி இரண்டாம் பாதத் தில் குருவும் அமையப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனை தாங்கள் விளக்கவேண்டும்'' எனறு கொடுங்கநல்லூர் எனும் திருத்தலத் தில் அருள்புரியும் ஸ்ரீ மகாதேவரை அன்னை மகோதை வேண்டிப்பணிந்தாள்.

ss

அபயவரதேஸ்வரர் உரைத்தது- ""இமய வல்லியே! இந்த ஜாதகன் கொடிவேரி எனும் ஊரில், ஒரு "புலைவினையர்' குடும்பத்தில் பிறந்து, வீரவாகு என்ற பெயர்பெற் றான். மிருகங்களை வேட்டையாடுவதையே தொழிலாகக் கொண்டான். மிருகங்களின் தோலையும் எலும்பையும் காவிரியில் எறிந்து, நீரை மாசுபடுத்தினான். பல்லுயிரின் தாகம் தீர்த்து, பாவம் போக்கும் பொன்னி (காவிரி), மலர் முக்காடிட்டு அழுதாள்.

தர்மதேவதை சினந்தாள். ஒரு நாள் காட் டெருமைத் தாக்கியதால் நிலை குலைந்தான். கால்விரல் நெட்டி யிழுக்க, கல்லாய் வயிறு கனக்க, தனஞ்ஜெயன் நெஞ்சின் சங்கில் ஏறி கபாலத்தையடைந் தான். அவனுடல் பெருங்காடு (மயானம்) போனது.

எமனுகில், அவன் செய்த பாவங்களுக்காக சாரமேயாதனம் எனும் நரகத்தில் பலகாலம் துன்புற்றபின், உடல் என்னும் ஓட்டைக் குடமேந்தி பூவுலகம் சென்றான். செல்வச் செழிப்புடைய வணிகக் குடும்பத்தில், மாயக் கனவுலகில் விழித்தெழுந்தான். இளமையில் தகாத நட்பினால் செல்வத்தையிழந்து, செல்லாத காசுபோல செயலிழந்தான்.

திருவோடு (செல்வத்தோடு) பிறந்தவன் திருவோடு (பிச்சைப்பாத்திரம்) ஏந்தினான்.

* பராசர முனிவரின் குழந்தைகள் நீரை மாசுபடுத்தி சாபம் பெற்றதுபோல, முற்பிறவி யில் காவிரியைக் களங்கப்படுத்தியதால், அவனுக்கு இந்த கதி நேர்ந்தது. "வறுமையில் சிக்குண்டு அவதியுறுகிறான். தாயைப் பழிப்பவனும், தண்ணீரைக் களங்கப்படுத்து பவனும் மூன்று பிறவிகள் அவதியுறுவர்.

இதற்குப் பரிகாரமேயில்லை.

* பராசர முனிவர்- பராசர முனிவரின் குழந்தைகள் ஆறுபேரும் குளத்தின் நீரினை அசுத்தம் செய்ததால், முனிவர் கோபம் கொண்டு குழந்தைகள் ஆறுபேரையும் சபித்துவிட்டார்.

(வளரும்)

செல்: 63819 58636

___________

நாடி ரகசியம்

1. திருவோண நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், பூசம் நான்காம் பாதத்தில் குருவும் அமரும் அமைப்பைப்பெற்ற ஜாதகர், 32 வயதிற்குப்பின் திரண்ட சொத்துகளுக்கு அதிபதியாவார்.

2. திருவோண நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சூரியனும் குருவும் இருந்து, பகல் நேர ஜனனமானால் பால்யத்தில் தந்தையை இழப்பார்.

3. திருவோண நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சந்திரனும் லக்னமும் சுக்கிரனும் சேர்ந்திருந்து, பூசம் நான்காம் பாதத்தில் சனியும் இருக்க, ஜாதகர் மரபுமீறிய இழிதொழில் செய்வார்.

கேள்வி: ஜோதிடத்தில் பருவகால மாற்றங்களையும், இயற்கைப் பேரிடர்களையும் எவ்வளவுதான் துல்லிய மாகக் கணித்தாலும் சில நேரங்களில் பலன் சரியாக அமையாமல்போவதன் காரணத்தை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?

பதில்: பிரதேச உலகியல் நிகழ்வுகளாகிய (ஙன்ழ்க்ஹய்ங் ஆள்ற்ழ்ர்ப்ர்ஞ்ஹ்) மழையை கர்ப்போட்டம், புதன், சூரிய, சுக்கிர சங்கமத்தாலும்; இயற்கைப் பேரிடர்களை, பானு மத்திமம், அமாவாசை, பௌர்ணமி திதிகள் அமையும் நட்சத்திரங்களைக்கொண்டும் கணக்கிடலாம் என்பது பொதுவிதி. ஆனாலும், சப்தரிஷி மண்டலத்தின் மாற்றங்களைக் கருத்தில்கொள்ளாத ஜோதிடக் கணக்கீடு துல்லியமாக அமையாது. மக நட்சத்திரத்திற்கும் சுவாதிக்குமுள்ள தூரத்திற்கு நேர் வடக்காக ஏழு ஒளி பொருந்திய நட்சத்திரங்கள் ஏர்க்கால் போன்று ஒருமுனை கிழக்காக இருக்குமாறு காணப்படுவதே சப்தரிஷி மண்டலம். "பிரம்ம சித்தாந்தம்' என்னும் நூலில் சகலர் என்னும் ரிஷியும், ரிஷி யாஸ்கரரும், ஆரியபட்டரும் வராகமிகிரரும் (பிருஹத்சம்ஹிதா) சப்தரிஷி மண்டலத்தின் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார்கள். சப்தரிஷிகளின் 1,600 முறைப் பயணமே ஒரு மகாயுக காலம். (43,20,000 வருடங்கள்). சப்தரிஷி மண்டலமே ஆட்சி மாற்றம், இயற்கைப் பேரிடர்களையும், சமுதாய மாற்றங்களையும், யுகதர்மத்தையும் அறிவுறுத்தும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.