இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்

ஜாதகக் கணிதத்தில் ஆயுர்தாயம் எனப்படும் ஆயுள்நிர்ணயம் மிகவும் முக்கியமானது. ஒரு ஜாதகரின் ஆயுள் காலத்தை அறிந்தே மற்ற பலன் களைக் கூறவேண்டும் என்பதே அடிப் படை விதி. ஒரு ஜாதகத்தில் பாலா ரிஷ்டம், யோகாரிஷ்டம், அற்பாயுள் ஆகியவற்றைக் கணிப்பதே முதன்மை யானது. ஜனன நாளின் நட்சத்திர கண்டாந்தம், திதி கண்டாந்தம், ஜனன லக்னத்தின் மிருத்யு பாகை போன்றவற்றைக் கணக்கிட்டே ஆயுர்தாயம் செய்யவேண்டும்.

லக்னாதிபதியைக் காட்டிலும், எட்டாமதிபதி வலுவடைந்து ஆபோக்லிமத்தில் (3, 6, 9, 12) அமர்ந் தால் நீண்ட ஆயுளையுடையவராக இருப்பார் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

""அகத்தீசுவரரே! ஐம்புலன்களையும் அடக்கி, ஒரு மந்திரத்தால் ஒன்பது வாயில்களை அடைத்தாலும், சாதகனுக்கு யோகசித்தி கைவரப் பெறாமல் போவதன் காரணத்தை விளக்குமாறு வேண்டுகிறேன்'' என அன்னை புவனநாயகி திருமாகறல் எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு உடும்பீஸ்வரரைப் பணிந்து கேட்டாள்.

Advertisment

யோகநாதர் உரைத்தது- ""ராஜயோகம் எனும் ஆத்ம சங்கமத்தில், ஒரு சாதகன் சத்குருவின் துணைக் கொண்டு தச நாடிகளையும், தசவாயுக் களையும் உணரவேண்டும். சுழுமுனை பற்றிய வீணா தண்டில் (முதுகுத் தண்டு) பிரணவ விந்துவால் நாதம் இசைத்து, செத்தாரைப்போல் கிடப்பானே, யோக சித்தியடைவான். ஆறு ஆதாரம் அறியா தவனின் முயற்சி சேதாரமாகும்.''

""கச்சபேஸ்வரரே! "தலவிலாசிதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய சித்திரை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும், மூலம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், உத்திராடம் இரண்டாம் பாதத்தில் குருவும், சதயம் மூன்றாம் பாதத்தில் சுக்கிரனும் ggசூரியனும் சேர்ந்திருக்க, ரேவதி இரண்டாம் பாதத்தில் புதனும், அஸ்வினி முதல் பாதத்தில் சனியும், உத்திரம் முதல் பாதத்தில் சந்திரனும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று திருநல்லூர் எனும் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரரை அன்னை பர்வதசுந்தரி வேண்டிப்பணிந்தாள்.

தண்டீஸ்வரர் உரைத்தது- ""ஷோடசியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் சுயோதனன் எனும் பெயருடன், சீதாப்பூர் என்ற ஊரில் வாழ்ந்துவந்தான். அவன் பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து, இளவர சனைப்போல் வளர்ந்தான். தீயோர் நட்பாலும், செல்வச் செழிப்பாலும் தன்னிலை மறந்தான். நைமிசாரண்ய வனத்தில் மிருகங்களை வேட்டையாடுவதும், வேதனைப்படுத்துவதும் அவனுக்கு வேடிக்கையானது. இறக்கும் தறுவாயில் உயிர்கள் எழுப்பும் ஈனக்குரல் அவனுக்கு இசையானது. இரக்க குணமில்லாத அரக்கனாகவே வாழ்ந்தான். ஒரு நாள் காட்டுப் பன்றியால் தாக்கப்பட்டு உயிரிழந்தான்.

Advertisment

உற்றாரும் உறவும் காரிருள் கானகத்தில் அவனைத் தேடி அலைந்தனர். நரியும் பருந்தும் உண்டு மிகுந்த உடலை, சுற்றமும் நட்பும் சுமந்து சென்றனர். காலக்கள்வன் அவன் உயிரைக் கவர்ந்தான். பிரேத சரீரம் நீங்கிப் பிண்டசரீரம் பெற்று வன்னிமரத்தில் பலகாலம் தலைகீழாகத் தொங்கினான். பின்னர் தன் பிண்டசரீரத்தை வன்னிமரத்தில் உதிர்த்து, கர்மசரீரத்துடன் எமபுரிக்குப் பயணமானான். எமதூதர்கள் அவனுக்கு விலங்கிட்டு, விலங்கினைப்போல் எமதர்மராஜனிடம் நிறுத்தினர்.

அவன் செய்த அடாத செயலுக் காக "வடாரோதம்' எனும் நரகத்தில் இடம்பெற்றான்.

அங்கு துன்புற்றான். பலகாலம் கழித்துப் பிறவிக்கடன் தீர்க்க மண்ணுலகில் வீழ்ந்தான். ஒரு வைசிய குடும்பத்தில் பிறந்து, தன் மூதாதையர் செய்துவந்த வணிகத் தொழிலில் சிறப்புற்றான். நல்லறம் செய்தல் வேண்டி இல்லறம் புகுந்தான். நெடுங்கால மாகியும் மடியில் தவழ மழலையில்லாமல் போனது. முற்பிறவியில் பல்லுயிரை வதைத்த தால் பெற்ற சாபமே அதன் காரணமானது.

மிருகம், மனிதன் என்ற வேறுபாடு கர்மங் களால் உண்டாகிறது. கர்ம சம்பந்தம் நீங்கி யதும் வேற்றுமை நீங்கிட பிரம்மமாக இருப் பது ஜீவாத்மா ஒன்றே என்றுணர்ந்து, * ஜடபரதர் போல், பிற உயிர்களிடம் அன்பு காட்டியிருந் தால் இந்த கதி நேர்ந்திருக்காது. சர்வாங்கங் களில் ஸமஸ்த புவனங்களும் நிறைந்திருக்கும் கோமாதாவைப் பூஜித்து, கோதானம் செய்தால், சாபம் நீங்கி புத்திரபாக்கியம் பெறு வான்.

* ஜடபரதர்- தாயை இழந்த மான்குட்டி யைக் காப்பாற்றுவதற்காக தன் தவவாழ்வையே துறந்தார்.

(வளரும்)

செல்: 63819 58636

_________

நாடி ரகசியம்

1. சித்திரை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சுக்கிரனும், ஹஸ்தம் நான்காம் பாதத்தில் குருவும் அமைந்தால் கல்வியில் சிறப்புண்டாகும்.

2. சித்திரை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் புதனும், திருவோணம் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும் அமைந்தால் ஜாதகர் பூர்வஜென்ம புண்ணியம் நிறைந்தவர். அவரை ஆபத்துகள் அணுகமாட்டா.

3. சித்திரை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சூரியனும், விசாகம் முதல் பாதத்தில் லக்னமும் அமையும் ஜாதக அமைப்பைப் பெற்றவர் மூதாதையர் சொத்துகளை நிர்மூலமாக்குவார்.

கேள்வி: பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோட்சாரத்தில் குரு பகவான் ஒரே ராசியில் பிரவேசித்தாலும், ஒரே மாதிரியான பலன்கள் ஏற்படுவதில்லை. இதற்கான காரணத்தை "கந்தர்வ நாடி'யின் மூலம் விளக்கமுடியுமா?

பதில்: கோட்சாரப் பலன்கள், சந்திரன் இருக்கும் ராசியை அடிப்படையாகக்கொண்டு கணிக்கப்படும் பொதுவான பலன்கள். துல்லியமான பலன்களைக் காண, பாவசுழற்சி என்னும் ஜோதிடக் கணிதமுறையைப் பயன்படுத்தவேண்டும். பாவசுழற்சியில் இரண்டுவிதமான அணுகுமுறைகள் உண்டு. கிரக சுழற்சிபோல பாவமும் ஓராண்டிற்கு ஒருமுறை இடம்பெயரும். ஒரு ஜாதகருக்கு ஓராண்டு நிறைவு பெறும்போது அவருடைய லக்னபாவம் முதல் எல்லா பாவங்களும் முப்பது பாகைகளைக் கடந்து, அடுத்த ராசியை அடையும். ஒரு ஜாதகத்திலுள்ள கொடுப்பினைப் பலன்களை ஆராயும்போது, வலவோட்டுச் சுழற்சியையும் (Progression),கோட்சாரப் பலன்களைப் பரிசீலிக்கும்போது இடவோட்டுச் சுழற்சியையும் (Regression)) கணக்கில் கொள்ளவேண்டும். ஒருவரின் குணத்தையும், வாழ்க்கையின் தரத்தையும் நிர்ணயிக்கும் முக்கிய காலகட்டமாகிய பருவ வயதில் (Teen-Age) லக்ன பாவம் இடவோட்டுச் சுழற்சியில், ஏழாம் பாவம்வரை சுழல்வதிலுள்ள முக்கியத்துவத்தை உணரலாம். பாவசுழற்சியில் கிரகங்களின் ஒத்திசைவு (ஈர்ய்ஸ்ங்ழ்ஞ்ங்ய்ஸ்ரீங்) எவ்வாறு அமைகிறது என்பதை ஆராய்ந்தால் மட்டுமே துல்லியமான பலன்களைக் கூறமுடியும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.