இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
67
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஜனன ஜாதகத்தை நவாம்சம், அஷ்ட வர்க்கம் போன்ற கணிதமுறைகளால் ஆராய்வது முக்கியம் என்றாலும், ஜனன நாளின் ஐந்து அங்கங்களாகிய வாரம், திதி, கரணம், நட்சத் திரம், யோகம் போன்ற அடிப்படைக் கட்ட மைப்பை அறிவதே முதன்மையானது. சந்தி ரனுக்கு முன்னும் பின்னும் 12 பாகைமுதல் 24 பாகைவரையுள்ள இடைவெளியில் சூரியன் அமைவது தீயபலன்களையே தரும். திதி யென்பது ஜனன, மரணத்தின் வாயிலாக அமைவது. மரணகாலத்துத் திதிபோல ஜனனகாலத்துத் திதியும் முக்கியமானது என்ற கருத்து வழக்கொழிந்துவிட்டது. ஞாயிறு- அஷ்டமி, திங்கள்- நவமி, செவ்வாய்- சஷ்டி, புதன்- திரிதியை, வியாழன்- ஏகாதசி, வெள்ளி- திரயோதசி, சனி- சதுர்த்தசி திதி போன்ற நாட்களில் நிகழும் ஜனனம் நல்ல பலன்களையும்; ஞாயிறு- சதுர்த்தசி, திங்கள்- சஷ்டி, செவ்வாய்- சப்தமி, புதன்- துவிதியை, வியாழன்- அஷ்டமி, வெள்ளி- நவமி, சனி- சப்தமியில் நிகழும் ஜனனம் தீயபலன் களையும் தருவனவாகவே அமை கின்றன என்பதே "கந்தர்வநாடி'யின் கூற்று.
""எழுத்தறிநாதரே! காலமும் தேசமுமே விதியை நிர்ணயிக்கும் என்றாலும், இவை யிரண்டில் பிரதானமானது எது?'' என அன்னை நன்மொழியம்மை திருச்சாய்க்காடு எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு இந்திரேஸ் வரரைப் பணிந்துகேட்டாள்.
செஞ்சடையப்பர் உரைத்தது- ""ஊழிக்காலங் களில் தேசத்தை காலமே நிர்ணயிக்கும். தேசங் களை வென்று ஆண்ட மன்னரும் காலத்தை வென்றாரில்லை. செல்வமும் செல்வாக்கும் காலத்தைக் கட்டுப்படுத்தாது. காலத்தைக் கடந்து செல்லவும் இயலாது. காலத்தின் சிரசே ஜனனம்; பாதமே மரணம். காலம் என்பது மகா மாயை. இறந்த காலம் இனி வராது. நிகழ் காலம் பிறக்கும்போதே இறக்கும். எதிர்காலம் ஆசையின் கனவு. காலத்தின் காவலனே காலன்.
காலத்தின் கணக்கையறிந்தவனே காலனையும் வெல்வான். படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனின் ஆயுளையும் காலமே கணிக்கிறது.'' ""ஜம்புகேஸ்வரரே! "உரோமண்டலம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய ஹஸ்த நட்சத் திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், உத்திராடம் இரண்டாம் பாதத்தில் குருவும், சதயம் மூன்றாம் பாதத்தில் சுக்கிரனும் புதனும் சேர்ந்திருக்க, பூரட்டாதி நான் காம் பாதத்தில் சூரியனும், அஸ்வினி முதல் பாதத்தில் சனியும், புனர்பூசம் இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், உத்திரம் முதல் பாதத்தில் சந்திரனும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று ஆச்சாள்புரம் எனும் திருத் தலத்தில் அருள்புரியும் சிவலோக தியாகேஸ் வரரை அன்னை திருவெண்ணீற்று உமையம்மை வினவினாள்.
அமிர்தகடேஸ்வரர் உரைத்தது- ""அகிலாண்டநாயகியே! இந்த ஜாதகன், முற்பிறவி யில் துருபதன் எனும் பெயருடன், வாஞ்சியூர் என்ற ஊரில் வாழ்ந்துவந்தான். அவன் தன் தந்தையின்மீது அன்பில் மிகுந்திருந்தான். ஒரு நாள் அவன் தந்தை விதிவசத்தால் நாகம் தீண்டி இறந்தார். இதனால் வெறுப்புற்ற துருபதன் நாகங்களின்மீது வெஞ்சினம் கொண்டான். நாகங்களைப் பழித்தீர்க்க எண்ணி பாம்புப் புற்றுகளைத் தீயிட்டுக் கொளுத்தினான். அதனால் பெரும்சாபத்தினைப் பெற்றான்.
காலம் பளிங்குபோல் அவன் முகத்தின் முதுமையைக் காட்டியது. அப்போதும் அவன் தன் தவறை உணர்ந்தானில்லை.
முதுமையின் பரிசாக நோயுற் றான். அவன் உடலும் உயிரும் பகைத்துப் பிரிந்தன. எமதூ தர்கள் அவனுக்குக் கொடிய பாம் புகளைமாலையாக அணிவித்து அழைத்துச்சென்றனர்.
"பிராண ரோதம்' எனும் நரகத்தில் வீழ்ந்தான்.
அங்கு அவன் பிண்டசரீரத்தைப் பறவைகள் கொத்தித்தின்றன. வடவைத்தீ எனப்படும் கொடும்பசியால் வாடினான். முன்ஜென்ம பாவத்தின் வாசத்தால் பூவுலக வாசம் பெற்றான். இளமையின் வாயிலில், திருமணம் அவனை வரவேற்றது. மழலைச்செல்வம் வேண்டி ஏங்கினான். நெடுநாள் கழித்து அவன் மனையாள் கருவுற்றாள். அவன் குழந்தை கொடிசுற்றிப் பிறந்து இறந்தது. ஒளி வருவ தற்கு முன்னால் விளக்கு அணைந்ததுபோல, அவன் மனதைக் காரிருள் சூழ்ந்தது. மனமொடிந்து வாடுகிறான். முற்பிறவியில் *ஜனமேஜயன்போல் நாகங்களைக் கொன்ற தால், இந்த கதி நேர்ந்தது. ஆஷாட மாதத்து வளர்பிறை சதுர்த்தியில் நாகபூஜையை முடித்து, வெள்ளியில் செய்த நாகப்பிரதிமன்கள், தெளிந்த நெய், அக்ஷதங்கள் (நவ தானியங்கள் நிறைந்த பாத்திரங்கள்) போன்றவற்றை குலகுருவுக்கு தானம் செய்தால் சாபம் நீங்கும்.
*ஜனமேஜயன்- குரு வம்சத்தின் ஐம்பத் திரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த ஜனமே ஜயன் "சர்ப்ப சத்ரா' வேள்வியில் நாகங்களைத் தீயிலிட்டதால் தீராத சாபத்திற்கு ஆளானான்.
(வளரும்)
செல்: 63819 58636
நாடி ரகசியம்
1. ஹஸ்த நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் செவ்வாயும் சுக்கிரனும் கூடி, திருவாதிரை மூன்றில் சனி அமர்ந்தால் ஆடை தயாரிப்பில் சிறப்புறுவார்.
2. ஹஸ்த நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் புதனும் சூரியனும் சேர்ந்திருக்க, ஜாதகர் ஜோதிடக்கலையில் வெற்றிபெறுவார்.
3. ஹஸ்த நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் குருவும் சுக்கிரனும் சேர்ந்து அமையும் ஜாதக அமைப்பைப் பெற்ற பெண்ணுக்கு திருமணத்தில் தடையும், காலதாமதமும் உண்டாகும்.
கேள்வி: நான்கு, எட்டு, பன்னிரண்டாம் வீடுகள் அழிவுக்கான தீய ஸ்தானங்களாகக் கூறப்படுவதன் காரணத்தை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?
பதில்: எதையும், எப்போதும், எவராலும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பதே பொது விதி. ஆக்கம்- அழிவு என்பதை உருமாறுதல் என்றே பொருள்கொள்ள வேண்டும். மரம், நாற்காலியாக உருமாறும்போது மரம் அழிவதாகவும், நாற்காலி உருவாக்கப்படுவதாகவும் தோன்றும். பஞ்சபூதங்கள் இணைந்தால் ஜனனம்; பிரிந்தால் மரணம். உலகில் நல்வாழ்வைக் கொடுப்பதும் கெடுப்பதும் மழை என்பதாலேயே காலபுருஷனின் நான்கு, எட்டு, பன்னிரண்டாம் வீடுகள் நீர்த்தத்துவத்தில் நீருக்குரிய ஸ்தானங்களாய் அமைக்கப்பட்டுள்ளன. நான்காம் பாவம் உற்பத்தியையும், எட்டாம் பாவம் உற்பத்தியான பொருளை சேமிப்பதையும், பன்னிரண்டாம் பாவம் உற்பத்தியான பொருளை உபயோகிப்பதையும் (நுகர்தல்) குறிக்கும். உபயமே உபயோகமாவதால் பன்னிரண்டாம் வீடு மீனம் எனும் உபய ராசியில் அமைந்தது. கடகம்- சரம், நதி, கருப்பை, உற்பத்தி, படைத்தல்; விருச்சிகம்- ஸ்திரம், அணைக்கட்டு, வாழ்க்கைப் பாதுகாப்பு, காத்தல்; மீனம்- உபயம், நுகர்தல், மரணம், தடாகம், உருமாறுதல். நான்கு, எட்டு, பன்னி ரண்டாம் வீடுகள் காலச்சுழற்சியின் முக்கியமான ஸ்தானங்கள் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.