இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
60
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஒரு ஜாதகத்தை ஆராயும்போது அந்த ஜாத கரின் ஜனனம் இரவில் நிகழ்ந்ததா, பகலிலில் நிகழ்ந்ததா என்பதைப் பகுத்தறிந்தால் மட்டுமே துல்லிலியமான பலன்களைக் கணிக்கமுடியும். பகலிலில் ஜனித்தவர்களுக்கு சூரியனும், இரவில் ஜனித்தவர்களுக்கு குருவும் பிதாகாரர்களாகிறார்கள். பஞ்ச பட்சிகளின் செயல் பாடும் மாறுகிறது. பகலிலில் பிறந்தவர்களுக்கு சூரியனின் வலிமையும், இரவில் பிறந்தவர்களுக்கு சனியின் வலிமையும் மிகவும் முக்கியம். சூரியன், சந்திரன் நீங்கலாக, பிற கிரகங்கள் இரவு வீட்டில் உள்ளனவா அல்லது பகலில் வீட்டில் உள்ளனவா என்பதை அறிவதும் முக்கியம். பகலில் பிறந்தவர்களுக்கு தேய்பிறையும், இரவில் பிறந்தவர் களுக்கு வளர்பிறையும் நற்பலன்களைத் தரும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று. ""ஜம்புநாதரே! அவரவர் முன்ஜென்ம வி
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
60
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஒரு ஜாதகத்தை ஆராயும்போது அந்த ஜாத கரின் ஜனனம் இரவில் நிகழ்ந்ததா, பகலிலில் நிகழ்ந்ததா என்பதைப் பகுத்தறிந்தால் மட்டுமே துல்லிலியமான பலன்களைக் கணிக்கமுடியும். பகலிலில் ஜனித்தவர்களுக்கு சூரியனும், இரவில் ஜனித்தவர்களுக்கு குருவும் பிதாகாரர்களாகிறார்கள். பஞ்ச பட்சிகளின் செயல் பாடும் மாறுகிறது. பகலிலில் பிறந்தவர்களுக்கு சூரியனின் வலிமையும், இரவில் பிறந்தவர்களுக்கு சனியின் வலிமையும் மிகவும் முக்கியம். சூரியன், சந்திரன் நீங்கலாக, பிற கிரகங்கள் இரவு வீட்டில் உள்ளனவா அல்லது பகலில் வீட்டில் உள்ளனவா என்பதை அறிவதும் முக்கியம். பகலில் பிறந்தவர்களுக்கு தேய்பிறையும், இரவில் பிறந்தவர் களுக்கு வளர்பிறையும் நற்பலன்களைத் தரும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று. ""ஜம்புநாதரே! அவரவர் முன்ஜென்ம வினைக்கேற்ப இளம்வயதில் ஐம்புலன்களில் குறை ஏற்பட்டு அவதியுறு வது ஏற்கத்தக்கதே. ஆனால் சிலர் பிறவியிலேயே எந்தப் புலனுணர்வும் இல்லாமல், ஜடமாய், சதைப்பிண்டமாய்
பூவுலகில் தோன்றிமறைவது படைப்பின் குற்றமா? தாங்கள் இதை விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை பெரியநாயகி சிவபுரம் எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு சிவகுருநாதரைப் பணிந்து கேட்டாள்.
வெள்ளீஸ்வரர் உரைத்தது- ""மனிதர்கள் மனதால் செய்யும் பாவங் களுக்கு மேலுலகிலும், உடலால் செய்யும் தவறுகளுக்கு பூவுலகிலும் தண்டனை பெறுகிறார்கள். முற்பிறவி யில் ஞானமுக்தி அடைந்தும் தேக முக்திபெறாத ஞானிகள், கருவிலும், மண்ணிலும் தோன்றி மறைகிறார்கள். தேவலோகத்து சக்கரவாகப் பறவைகள், ஆகாயத்தில் பிறந்து மறையும். அவை பூமியைத் தொடுவதில்லை. அதுபோல, புலனுணர்வு இல்லாமல் பிறக்கும் ஞானிகளை பூவுலகின் கர்மப் பலன்கள் அடைவதில்லை. அன்னப்பறவை சேற்றில் இருந்தாலும் அதன் வெண்மை நிறம் மாறுவதில்லை.
தீயிலிலிருந்து தீயைப் பிரித்தாலும், தீயின் அளவு குறைபடுவதில்லை. அதுபோல பூரணத்திலிலிருந்து பூரணம் பிரிந்தாலும், பூரணம் பரிபூரணமாகவே திகழ்கிறது. பிரம்மமும் படைப்பும் பூரணமானவை.
குயவனின் சக்கரத்தில் பானை உருவா வதுபோல, சுழலும் உலகில் உயிர் களை முழுமைப்படுத்துவதே படைத்த லெனும் செயலிலின் செயல்.''
""தியாகராஜரே! "வியம்ஸிதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய உத்திர நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் லக்ன மும், சித்திரை முதல் பாதத்தில் குருவும், சதயம் முதல் பாதத் தில் சந்திரனும், ரேவதி இரண்டாம் பாதத்தில் சனியும், அஸ்வினி மூன்றாம் பாதத்தில் செவ் வாயும், திருவா திரை முதல் பாதத்தில் சுக்கிரனும், பூசம் மூன்றாம் பாதத் தில் சூரியனும், ஆயில்யம் முதல் பாதத்தில் புதனும் அமையப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று வேதகிரி எனும் திருத்தலத்தில் அருள்புரியும் வேதகிரீஷ் வரரை அன்னை வேதநாயகி வினவினாள்.
வேதகிரி உரைத்தது- ""பார்கவியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் தேவதத்தன் எனும் பெயருடன் வேள்விக்குடியில் வாழ்ந்துவந்தான். இளம்வயதில் காம இச்சை மிகுந்ததால், "கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்ற நோக்கில் அவன் மனம் தறிகெட்டுப்போனது.
செல்வமும் செல்வாக்கும், புத்தி எனும் சூரியனை மறைத்ததால், அறியாமை இருளில் வீழ்ந்தான். தன் இளைய சகோதரனின் மனைவியை பலாத்காரத்தால் கூடி மகிழ்ந்தான். பருவகாலம் மாறியது. வயது முதிர்ந்ததால் இளமை உதிர்ந்தது. இலையுதிர் காலத்து மரம் போலானான்.
நோயுற்றான். மரணத்தால் வீழ்ந்தான். காமத்தீயில் வாழ்ந்த அவனுடல் மயானத்தீயில் விறகானது. பூவுலகம் புறந்தள்ளிய தால் தாமிஸ்ரம் எனும் நரகத்தை நாடினான்.
பலகாலம் நரகத்தில் துன்புற்றதால் புத்தி கொள்முதலானது. பின், தேகத்தை பரிசுத்த மாக்க பூவுலகம் வந்தான். விஸ்வகர்மா குலத்தில் பிறந்து, ஆதவன் என்று பெயரிடப் பட்டான். இளம்வயதில் சிலை வடிப் பதில் கைதேர்ந்த கலைஞனாகத் திகழ்ந்தான். மங்களன் அருளால் மணவாழ்வைத் தொடங் கினான். காலம் சுழன்றது, கண் நோயால் பாதிக்கப்பட்டான். முன்ஜென்ம வினைப் பயன் விழித்ததால் அவன் பார்வை இழந்தான்.
ஆதவன், கண்ணில்லாதவன் ஆனான். கலையும் சிலையும் கட்டிய மனைவியின் அழகும் வெறும் கற்பனையானது. முற்பிறவியில்மூடனாய், முகத்தில் கண்கொண்டு காணும் காட்சியே ஆனந்தம் என்றெண்ணி, அகக்கண் காட்டிய அறம் மறந்தான். அவதியுறுகிறான். *இந்திரனை முறையற்ற காமமும், பெண் சாபமும் வீழ்த் தியதுபோல, இவனும் வீழ்த்தப்பட்டான். இதற்குப் பரிகாரமே கிடையாது.''
*இந்திரன் தேவர்களின் தலைவன். பெண் சாபத்தால் பலமுறை அவதியுற்றவன்.
(வளரும்)
செல்: 63819 58636