இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
ஒரு வலுவான பொருளை அசைக்க அந்தப் பொருளின் ஆதாரப்புள்ளி உதவுவதுபோல, சூரிய கதிர்கள் குவியும் புள்ளி நெருப்பை உண்டாக்குவது போல, காந்த முனையின் புள்ளி பொருட்களை ஈர்ப்பதுபோல- பல கணிதப்புள்ளிகள் எல்லாருடைய ஜனன ஜாதகத்திலும் உள்ளன. ஜாதகக் கணிதப்புள்ளிகளே வாழ்க்கைக் கோலத்தை உருவாக்குகின்றன. புள்ளிகளைப் புரிந்துகொண்டால் கோலத்தின் அமைப்பு விளங்கும். இதுவே கந்தர்வ நாடியின் அடிப்படைத் தத்துவம்.
அகிலாண்டேஸ்வரியாகிய அன்னை பராசக்தி, திரிசூலநாதரை வணங்கி, ""இந்த கலியுகத்தில் ஜோதி
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
ஒரு வலுவான பொருளை அசைக்க அந்தப் பொருளின் ஆதாரப்புள்ளி உதவுவதுபோல, சூரிய கதிர்கள் குவியும் புள்ளி நெருப்பை உண்டாக்குவது போல, காந்த முனையின் புள்ளி பொருட்களை ஈர்ப்பதுபோல- பல கணிதப்புள்ளிகள் எல்லாருடைய ஜனன ஜாதகத்திலும் உள்ளன. ஜாதகக் கணிதப்புள்ளிகளே வாழ்க்கைக் கோலத்தை உருவாக்குகின்றன. புள்ளிகளைப் புரிந்துகொண்டால் கோலத்தின் அமைப்பு விளங்கும். இதுவே கந்தர்வ நாடியின் அடிப்படைத் தத்துவம்.
அகிலாண்டேஸ்வரியாகிய அன்னை பராசக்தி, திரிசூலநாதரை வணங்கி, ""இந்த கலியுகத்தில் ஜோதிடத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்க வேண்டும்'' என்று கேட்டாள். அதற்கு சர்வேஸ்வரன், ""வேதமானது ஜோதிடம், கல்பம், நிருத்தம், சிட்சை, வியாகரணம், சந்தஸ் என ஆறு அங்கங்கள் உடையது. இதில் ஜோதிடமே கண்களைப் போன்றது.
மனிதனை பரிபூரண ஞானியாக்கக்கூடிய அஷ்டாங்க யோகம் பயில, வார சரம் அறிதல் அவசியம். காரிய சித்திகளுக்காக செய்யப்படும் வேள்விகளிலும் காலக்கணிதம் அறிந்தால் மட்டுமே ஜெயம் உண்டாகும். ஜோதிடம் அறிந்தால் மட்டுமே இவ்வுலகில் கலிபுருஷனால் ஏற்படும் துன்பங்களைத் தவிர்க்க முடியும்'' என்றார்.
""திரிகாலமும் உணர்ந்த பரமேஸ்வரரே, "லோலிதம்' என்ற தாண்டவத்தின் லயமாக அமைந்த ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதம் லக்னமாக, சனியும் அதில் கூடியிருக்க, ரேவதி நான்காம் பாதத்தில் அங்காரகனும், ரோகிணி முதல் பாதத்தில் சூரியனும், ரோகிணி இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும் புதனும் கூடியிருக்க, ஹஸ்தம் இரண்டாம் பாதத்தில் சந்திரனும், மூலம் இரண்டாம் பாதத்தில் வக்ர குருவும் இருக்கப் பிறந்த ஜாதகரின் கர்மவினைப்பயன் பற்றி விளக்க வேண்டும்'' என்று தசமகாவித்யாவாக உருவெடுத்த பராசக்தி வினவினாள்.
சிவபெருமான் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முந்தைய பிறவியில் உஜ்ஜயினி நகரத்தில் வேளாளர் குடும்பத்தில் பிறந்து, காளி உபாசனை செய்தான். சிலகாலம் சென்று, தீயவர்களுடன் கூடி சூதாட்டம், மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்களுக்கு ஆளானான். பெரியோர்களைத் துன்புறுத்துதல் போன்ற பாவகாரியங்களையும் செய்துவந்தான். பின் நடுவயதில் ஒருநாள் மரத்திலிருந்து கீழே விழுந்து மாண்டான். எமதூதர்கள் அவனை "கால சூத்திரம்' என்ற நரகத்தில் சில காலம் துன்புறுத்தினர். பின்னர் பிரம்மபுரி என்ற ஊரில், ஒரு பொற்கொல்லர் குடும்பத்தில் நாபியில் மச்சத்துடனும், சுக்கிரமேட்டில் நட்சத்திரக்குறியுடனும் பிறவியெடுத்தான். முற்பிறவியில் ருத்ராணிபீடம் எனும் உஜ்ஜயினியில் பிறந்து, சில காலம் காளி பக்தராக இருந்ததால் இப்பிறவியில் எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கினான். ஆனாலும், பெண்களால் அவமானப்படுத்தப்பட்டு, பல வழிகளிலும் துன்பப்பட்டு, புத்திரபாக்கியமும் இல்லாமல் வாழ்கிறான்.
இதற்குப் பரிகாரமாக பெற்றோருக்கு பாதபூஜை செய்து, பின் ஒரு மண்டல காலம் "ஜாதவேதசே' என்ற மந்திரத்தை காலையும், மாலையும் நூற்றியெட்டு முறை ஜெபிக்க பாவம் தீரும். அதன்பின் பழி நீங்கி, புத்திர பாக்கியம் உண்டாகும். ஜாதகனுக்கு மூன்றாம் சுற்றில், சனி மக நட்சத்திரம் புகும் காலத்தில் இதய நோயால் மாரகம் உண்டாகும்.''
(வளரும்)
செல்: 63819 58636