கந்தர்வ நாடி! 58 - லால்குடி கோபாலகிருஷ்ணன்

/idhalgal/balajothidam/gandharva-nadi-58

இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

ரு ஜாதகருக்கு இந்த உலகில் ஏற்படும் தொடர்புகளை ஜாதகத் தின் ஏழாம் பாவத்தைக்கொண்டே அறியமுடியும். ஒன்றாம் பாவமும், ஏழாம் பாவமும் தனித்தனி பாவங்கள் என்று கருதுவதைவிட ஒரே பாவத்தின் பிரதிபலிப்பு என்பதே சரியானது. கிணற்றில் நீர் இறைக்கப் பயன்படும் கயிற்றின் ஒருமுனை நம் கையிலும், மறுமுனை ஒரு இரும்புப் பறியோடும் கட்டப்பட்டிருக்கும். ஒருமுனையை கீழ்நோக்கி இழுத்தால் மறுமுனை மேல்நோக்கி வரும். அதுபோல கயிறின் ஒருமுனை svஒன்றாம் பாவம்; மறுமுனை ஏழாம் பாவம். உதாரணத் திற்கு, ஒரு ஜாதகத்தில் பூசம் நான் காம் பாதத்தில் லக்னம் அமைந்தால், எழாம் பாவம் திருவோணம் முதல் பாதத்தில் அமையும். சனியின் நட்சத்திரப் பாதத்திற்கு நேர் ஏழில் சந்திரனின் நட்சத்திரப் பாதம் அமைவதால், "புனர்பூ தோஷம்' உண்டாகிறது. ஜாதகத் தில் லக்ன பாவமும் ஏழாம் பாவமும் அமையும் நட்சத்திர பாதத்தைப்பொருத்தே, அவர் வாழ்வின் வெற்றி- தோல்விகளைக் கணிக்க இயலும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

""பதஞ்சலிநாதரே! அனேக மனிதர்கள் யோகிகளாக உயர்ந் திட விரும்பி, மெய்யை வருத்திக் கடுந்தவம் புரிகிறார்கள். ஆனாலும் யோகசித்தி கிடைக்கப்பெறாமல் பூவுலக வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். யோகத்தின் உயர்நிலையாகிய ஆன்ம அனுபூதிய

இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

ரு ஜாதகருக்கு இந்த உலகில் ஏற்படும் தொடர்புகளை ஜாதகத் தின் ஏழாம் பாவத்தைக்கொண்டே அறியமுடியும். ஒன்றாம் பாவமும், ஏழாம் பாவமும் தனித்தனி பாவங்கள் என்று கருதுவதைவிட ஒரே பாவத்தின் பிரதிபலிப்பு என்பதே சரியானது. கிணற்றில் நீர் இறைக்கப் பயன்படும் கயிற்றின் ஒருமுனை நம் கையிலும், மறுமுனை ஒரு இரும்புப் பறியோடும் கட்டப்பட்டிருக்கும். ஒருமுனையை கீழ்நோக்கி இழுத்தால் மறுமுனை மேல்நோக்கி வரும். அதுபோல கயிறின் ஒருமுனை svஒன்றாம் பாவம்; மறுமுனை ஏழாம் பாவம். உதாரணத் திற்கு, ஒரு ஜாதகத்தில் பூசம் நான் காம் பாதத்தில் லக்னம் அமைந்தால், எழாம் பாவம் திருவோணம் முதல் பாதத்தில் அமையும். சனியின் நட்சத்திரப் பாதத்திற்கு நேர் ஏழில் சந்திரனின் நட்சத்திரப் பாதம் அமைவதால், "புனர்பூ தோஷம்' உண்டாகிறது. ஜாதகத் தில் லக்ன பாவமும் ஏழாம் பாவமும் அமையும் நட்சத்திர பாதத்தைப்பொருத்தே, அவர் வாழ்வின் வெற்றி- தோல்விகளைக் கணிக்க இயலும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

""பதஞ்சலிநாதரே! அனேக மனிதர்கள் யோகிகளாக உயர்ந் திட விரும்பி, மெய்யை வருத்திக் கடுந்தவம் புரிகிறார்கள். ஆனாலும் யோகசித்தி கிடைக்கப்பெறாமல் பூவுலக வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். யோகத்தின் உயர்நிலையாகிய ஆன்ம அனுபூதியை அடையும் உபாயத் தைத் தாங்கள் விளக்கியருள வேண்டுகிறேன்'' என அறம் வளர்த்தநாயகி ஆத்தூர் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு முக்தீஸ்வரரைப் பணிந்து கேட்டாள்.

அக்னீஸ்வரர் உரைத்தது- ""ஆன்ம அனுபூதியால் பிரம்மானந்தத்தை அடைவதென்பது, வில்லிலில் நாண் ஏற்றி இலக்கை வீழ்த்துவதற்குச் சமம். இதில் வில் என்பது ஓங்கார மந்திரம். "நான்' என்ற மமதையில்லாத மனமே வில்லிலின் நாண். ஆன்மாவே அம்பாகப் பாயும். இலக்குதான் பிரம்மம். இதில் நான்கும் முக்கியமானவை. நாண் வில்லில் சரியாக இழுத்துக் கட்டப்பட்டிருக்க வேண்டும் அம்பு கூரியதாக இருக்கவேண்டும். அம்பு இலக்குடன் நேர்க் கோட்டில் அமையுமாறு பொருத்தப்பட வேண்டும். இலக்கை நோக்கி அம்பைச் செலுத்தும் வல்லமை இருந் தால் எவரும், எதையும் அடையலாம்.''

""பிரம்மபுரீஸ்வரரே! "விருச்சிக ரேசிதம்' எனும் தாண்ட வத்தின் லயமாகிய பூர நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், விசாகம் இரண்டாம் பாதத்தில் சந்திரனும், சதயம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், உத்திரட்டாதி இரண்டாம் பாதத்தில் சனியும், ரேவதி மூன்றாம் பாதத்தில் சூரியனும், அஸ்வினி நான்காம் பாதத்தில் சுக்கிரனும், பரணி நான்காம் பாதத்தில் புதனும், ஆயில்யம் முதல் பாதத் தில் குருவும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பல னைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று திருப்புலி வனம் எனும் திருத்தலத்தில் அருள்புரியும் வியாக்ரபுரீ சுவரரை அன்னை அமிர்த குஜாம்பாள் வினவினாள். சிவலோகநாதர் உரைத்தது- ""சங்கரியே! இந்த ஜாதகி, முற்பிறவி யில் அம்பிகா எனும் பெயருடன் மதுரா நகரில் வழ்ந்தாள். இளம்வயதில் தன் மனம் கவர்ந்த மணாளனை மணந்தாள். காலம் காற்றினும் வேகமாய்ப் பயணப்பட்டது. துன்ப மான ஒரு நாளில் அவள் கணவன் நோயால் பேச்சிழந்தான். ஊமையான கணவனை உதாசீனம் செய்தாள். அவனைவிட்டு நீங்கினாள். பற்றிய மரத்தைவிட்ட கொடி வேறு கொழுக்கொம்பை நாடுவதுபோல, வேறு ஆடவனுடன் தன் இளமைப் பயணத்தைத் தொடர்ந்தாள்.

கருங்கூந்தல் வெண்மேகங்களாயின. இளமை இல்லாமல் போனது. வாழ்விக்க வந்தவன் வழிப் போக்கன்போல நில்லாமல் போனான். மனம் வெதும்பினாள். மரணம் மட்டுமே அவளுக்கு அடைக்கலம் தந்தது. "அசிபத்திரம்' எனும் நரகம் அவளை விழுங்கியது. பலகாலம் நரகத்தில் துன்புற்றபின் பூவுலகம் எனும் தாய்வீட்டிற்குத் திரும் பினாள். ஒரு வைசிய குடும்பத்தில் பிறந்து, யமுனா என்ற பெயருடன் செல்வச் செழிப் புடன் வளர்ந்தாள். உரிய பருவத்தில் வாழ்க்கைத் துணைவரின் கைப்பிடித்தாள். மணவாழ் வின் இன்பம் வெகுநாட்கள் நீடிக்கவில்லை. மின்னல்போல் தோன்றி மறைந்தது. தீய எண்ணம்கொண்ட உறவினர், அவள்மேல் வீண்பழி சுமத்தினர். புறங்கூறிய சுற்றத்தாரின் வாக்கை உண்மையென நம்பி, அவளது நம்பி இல்லம் நீங்கினான். கணவனைப் பிரிந்து கலங் கினாள். அவள் இல்வாழ்க்கை "ஊமை கண்ட கன'வானது. முன்ஜென்மத்தில் *காந்தாரி போல் பதிபக்தியுடன் வாழ்ந்திருந்தால், இந்த துன்பம் நேர்ந்திருக்காது. இதற்குப் பரிகார மாக வியாழக்கிழமையன்று மௌன விரதம் இருந்து, சோகம் நீக்கும் அசோகமரத்தை "சீதா பிராட்டி' போல் பூஜை செய்தால் பிரிந்தவர் கூடுவார்.''

*காந்தாரி- காந்தார நாட்டு இளவரசியும், கௌரவர்களின் தாயுமாகிய காந்தாரி, தன் கணவர் பிறவிக்குருடர் ஆகையால், பதிபக்தி யின் காரணமாக தானும் தனது கண்களைக் கட்டிக்கொண்டே வாழ்ந்தாள்.

(வளரும்)

செல்: 63819 58636

_____________

நாடி ரகசியம்

1. பூர நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் குருவும் செவ்வாயும் சேர்ந்திருக்க, சூரியன் ரோகிணி இரண்டாம் பாதத்தில் இருக்கும் அமைப்பைப் பெற்ற ஜாதகர், காவல்துறை அல்லது நீதித்துறையில் உயரதிகாரமும் அந்தஸ்தும் பெறுவார்.

2. பூர நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சுக்கிரனும், புனர்பூசம் மூன்றாம் பாதத்தில் குருவும் அமர்ந் தால், ஜாதகருக்கு பெண்களால் ஆதாயம் அதிகம் உண்டு.

3. பூர நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சனியும், ரேவதி நான்காம் பாதத்தில் சூரியனும் அமையும் ஜாதகர் பிறர் துன்பங்களைச் சுமந்து அவதியுறுவார்.

கேள்வி: "நிழல் விழாத நாள்' என்ற அபூர்வ நிகழ்வை வானசாஸ்திரம் விளக்குவதுபோல, ஜோதிடத் தின்மூலம் விளக்க இயலுமா?

பதில்: வானசாஸ்திரமும் ஜோதிடமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவையே. சம இரவு நாட்கள், கதிர் திருப்ப நாட்கள்போல, நிழல் விழாத நாட்கள் உத்திராயனத்தில் ஒருமுறையும், தட்சிணாயனத்தில் ஒருமுறையுமாக, வருடத்தில் இரண்டுமுறை நிகழும். இந்த நிகழ்வு, சூரியனின் உச்ச ராசியாகிய மேஷத்திலும், சூரியனின் ஆட்சி வீடாகிய சிம்மத்திலும் சூரியன் சஞ்சரிக்கும்போது மட்டுமே நிகழும். உலகம் சரியான உருண்டை வடிவமாக இல்லாமல், கோள வடிவத்தில் இருப்பதாலேயே ஜாதகக் கணிதத்தில் கால, தேச வேறுபாடுகளுக் கேற்ப, பன்னிரண்டு பாவங்களின் அளவுகளும் வேறுபடுகின்றன. ஒரு பாவத்திற்கு, அந்த பாவத்தின் ஏழாம் பாவம் மட்டுமே சரியாக 180 பாகையில் அமையும். ஆனால் லக்ன கேந்திரங்களாகிய ஒன்று, நான்கு, ஏழு, பத்தாம் பாவங்கள் சம அளவில் அமைவதில்லை. நிழல் விழாத நாளின் நண்பகலில், துல்லிலியமான கணித அடிப்படையிலுள்ள பஞ்சாங்கத்தைக்கொண்டு லக்னத்தைக் கணித்தால், லக்ன கேந்திர பாவங்கள் ஒரே அளவில் அமையும். நிழல் என்பது ஒளி மறைவுப் பிரதேசம். அதுபோல் ஒரு ஜாதகத்தின் அருள் மறைவு பாவத்தை கேந்திரங்களின் அமைப்பைக்கொண்டே அறியமுடியும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.

bala240519
இதையும் படியுங்கள்
Subscribe