இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
57
கோட்சாரத்தில் ஒரு ஜாதகரின் வருட, மாத, தினப்பலன்களைக் கண்டறிய அந்த வருடத்தின் ஆட்சி கிரகம், மாதக்கோள், தினக் கோள் ஆகியவை எந்த கிரகம் என்று அறிய வேண்டும். அந்த கிரகம், ஜாதகருக்கு யோகியா அவயோகியா என்பதையும் கணக்கிட வேண்டும். யோகியாக இருந்தால் அனுகூலப் பலன்களைத் தருவார். அவயோகியாக இருந் தால், பிரதிகூலப்பலன்களை விருத்தி செய்வார்.
உதாரணத்திற்கு- நடப்பு விகாரி ஆண்டின் ராஜாவாக, அர்காதிபதியாக, மேகாதிபதியாக, சேனாதிபதியாக சனி பகவான் அமைவதால், எந்த ஜாதகருக்கு சனி யோகாதிபதியாக அமை கிறாரோ அவரே நல்ல பலன் பெறுவார். வருட, மாத, தினத்தை ஆட்சிசெய்யும் கிரகங்கள், கொடுப்பினை, தசாபுக்தி, கோட்சாரப் பலன் களைக் கூட்டவோ, குறைக்கவோ இயலும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""அண்ணாமலையாரே! மனிதர்கள் பிறக்கும்போது சுதந்திரமாகப் பிறந்து, வாழும்போது தங்களைத் தாங்களே அடிமைப்படுத்திக்கொள்கிறார்கள். அதனால் பூவுலகம் அடையும் பயன் என்ன? அடைபட்ட மனிதர் தளைகளையறுத்து மீளமுடியுமா?'' என வித்யூஜோதிநாயகி மேலக்கடம்பூர் எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு அமிர்தகடேஸ்வரரைப் பணிந்து கேட்டாள்.
வேதநாயகர் உரைத்தது- ""மனிதன் ஆடையின்றிப் பிறப்பதுபோல ஆசையின்றியே பிறக்கிறான். சிலந்தி, தானே வலையைப் பின்னி அதனுள் வாழும். பட்டுப்புழு, தானே தன்னைச்சுற்றிக் கூட்டை அமைத்து அதனுள் அகப்பட்டுக்கொள்ளும். மனிதன் மனமெனும் மாயவலையைப் பின்னி, தன்னுள்ளே தன்னையே சிறைப்படுத்திக்கொள்கிறான். தனக்குத்தானே பகையாகிறான். தன்னை யாரென்று உணர்ந்தபின், கட்டுண்டிருப்பதை எண்ணி, பல பிறவிகளில் அழுதுபுரள்கிறான். முடிவில், தன்னை விடுவித்துக்கொண்டு ஆன்ம விடுதலை பெறுகிறான். பட்டுப்பூச்சியின் கூடு பிறருக்கு ஆடையாவதுபோல, ஆசையில் அகப்பட்டுத் துன்புற்றவன் வாழ்க்கை பிறருக்குப் பாடமாக அமையும்.''
""சர்வேஸ்வரரே! "சின்னம்' எனும் தாண்ட வத்தின் லயமாகிய பூர நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், அனுஷம் நான்காம் பாதத்தில் சந்திரனும், திருவோணம் இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், திரு வோணம் நான்காம் பாதத்தில் சனியும், ரேவதி மூன்றாம் பாதத்தில் புதனும், அஸ்வினி முதல் பாதத்தில் சூரியனும், பரணி இரண்டாம் பாதத் தில் சுக்கிரனும், பூசம் மூன்றாம் பாதத்தில் குருவும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று திருச்சிராப் பள்ளி திருத்தலத்தில் அருள்புரியும் தாயுமானவரை அன்னை குழலம்மை வினவினாள்.
ருத்ராபதி உரைத்தது- ""அகிலாண்ட நாயகியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் நேமி நாதன் எனும் பெயருடன் காசி பூரில் வாழ்ந்தான். பருவவயதில் தன் நெஞ்சுக்கினியாளை மணந் தான். அவன் மனைவி, தன் சுயநலத் திற்காகக் கலகம் செய்து, அவனை அவன் தாயிடமிருந்து பிரித்தாள்.
மனைவியின் சொல்லையே மந்திரமாக ஏற்று, தன் தாயை வெறுத்து, இல்லத்திலிலிருந்து புறந்தள்ளினான். சிலகாலம் கழித்து தீரா நோயின் பிடியில் அகப்பட்டு நடையிழந்தான். சுகம் தரவேண்டியவன் சுமை யாகிப்போனதால், மனைவியும் அவனைவிட்டு நீங்கினாள். மனவருத்தத்தில் வாடிமாண்டு நரகம் சென்றான். தாகத்திற்கு குடிக்கத் தண்ணீரும் தராமல் எமகிங்கரர்களால் இழுத்துச் செல்லப்பட்டு, எமதர்மனிடம் ஒப்படைக்கப்பட்டான். துலாபாரத்தில் பாவப் பலன் மிகுந்ததால், "காலசூத்திரம்' எனும் நரகத்தில் வீழ்த்தப்பட்டான். சிலகாலம் கழித்து, செய்த பாவத் திற்குப் படிப்பினை பெற பூவுலகம் வந்தான். இளம்வயதில், சூளை நோயால் அவதியுறுகிறான். முற்பி றவியில், இவனைப்பெற்ற வயிறு துன்பத்தீயில் எரிந்து வெந்ததால், இப்பிறவியில் இவன் வயிறும் வெந்து புண்ணாயிற்று. இதற்குப் பரிகாரமாகப் பெற்றோருக்குப் பாதபூஜை செய்து, *சிரவண குமாரனைப்போல் பணிவிடை செய்தால் சுகம் பெறுவான்.''
*சிரவண குமாரன் கண்பார்வையற்ற தன் பெற்றோரை, காவடி எடுத்துச்செல்வதுபோல் இருபக்கமும் ஒரு தராசில் அமரவைத்து, போகும் இடமெல்லாம் சுமந்து செல்வார். தன்னைச் சுமந்தவளை, தான் சுமந்ததால் நல்லுலகம் சென்றார்.
(வளரும்)
செல்: 63819 58636
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-05/siva-t.jpg)