இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
78
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஆணின் ஜாதகத்தில் திருமண பாக்கியம் மற்றும் மணவாழ்க்கைப் பற்றி சுக்கிரன் இருக்குமிடத்தை லக்னமாகவும், பெண்ணின் ஜாத கத்தில் செவ்வாய் இருக்குமிடத்தை லக்னமாகவும் கொண்டே அறிய வேண்டும். அந்த லக்னத்திற்கு 3, 7, 11 பாவங்களில் குரு சம்பந்தப்பட்டால் இளமையில் திருமணமும், சனி சம்பந்தப்பட்டால் காலதாமத மான திருமணமும், புதன் சம்பந் தப்பட்டால் காதல் திருமணமும் அமையும். ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 6, 8, 12 பாவங்களில் லக்னாதிபதியின் சம்பந்தம் ஏற்பட்டாலும், பெண்ணின் ஜாத கத்தில் செவ்வாய்க்கு 6, 8, 12 பாவங்களில் லக்னாதிபதியின் சம்பந்தம் ஏற்பட்டாலும் தார தோஷம் உண்டாகும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""மன்றாடியாரே! ஞானி, தவசி, பக்தரைவிட, யோகியே பெரிதும் போற்றப்படுவதன் காரணத்தைத் தாங்கள் விளக்கியருள வேண்டு கிறேன்'' என அன்னை சகிதேவி யம்மை சேங்கனூர் எனும் திருத் தலத்தில் உறையும் அருள்மிகு சத்யகிரீஸ்வரரைப் பணிந்து கேட்டாள்.
தியாகேசர் உரைத்தது- ""யோகி தன்னையே தானே பற்றி, சுயமாய் விருட்சம்போல உயர்கிறான்.
ஞானி

ஞானியும் தவசியும் கொழுக்கொம்பை நாடி, காற்றிலாடும் கொடிபோல் அலைகிறார்கள். சுயம் (தன்னையறிவது) என்பதை உணர்வதே குறிக்கோள்; சிரத்தையே சாதனை என்பதை முழுமையாய் அறிந்தவனே யோகி. எப்போதும் குளவியின் நினைப்பில் வாழும் புழு குளவியாவதுபோல், திரிகால யோகத்தில் ஆழ்ந்திருக்கும் யோகி இறைநிலையை தன்வயப்படுத்துகிறான். அவனுக்கே சுத்த வித்யா தத்துவம், கடுவெளியில் சுட்ட பொன்னாய், சுவேத நிறமுடைய கமலமாய் விளங்கும்.''
""சந்திரசேகரரே! "வித்யுத் பராந்தம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய விசாக நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும், பூராடம் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், பூராடம் மூன்றாம் பாதத்தில் புதனும் சூரியனும் சேர்ந்திருக்க, உத்திராடம் இரண்டாம் பாதத்தில் குருவும், ரேவதி நான்காம் பாதத்தில் சந்திரனும், சித்திரை முதல் பாதத்தில் சனியும், ஸ்வாதி முதல் பாதத்தில் செவ்வாயும் அமரும் அமைப்பைப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று மேலத் திருமணஞ்சேரி திருத்தலத்தில் அருள்புரியும் ஐராவதேஸ்வரரை அன்னை மலர்க்குழல் நாயகி வேண்டிப் பணிந்தாள்.
மாமறையோன் உரைத்தது- ""வேதநாயகியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் விவேகன் எனும் பெயருடன் தேரெழுந்தூர் என்ற ஊரில் வாழ்ந்துவந்தான். அவன் அசுர சந்தியில் பிறந்ததால், துஷ்டதேவதைகளின் அருளைப் பெற்றான்.
அஷ்டகர்ம வித்தையைக் கற்றான். பஞ்சாட்சரத்தின் மூன்றெழுத்தைக்கூட்டி ஓத எட்டெட்டும் சித்தி யானது. விருட்ச மாரணம் செய்து மந்திர வலிமையைக் கண்டான். மந்திர அஸ்திரப் பிரயோகத்தால், அவன் வாழ்ந்த ஊரையே அச்சுறுத்தினான். கள்ளையுண்ட மந்திபோல களியாட்டம் ஆடினான்.
அந்த ஊரில் வாழ்ந்த ஒரு பத்தினி யின்மேல் மோகம் கொண்டு அவளைப் பெண்டாளத் துடித்தான். அவள் கணவன்மேல் மாரணம் செய்து வென்றான்.
பத்தினிமேல் வசியம் செய்து தோற்றான்.
பத்தினியின் சாபத்தையும் பெற்றான்.
மந்திரப் பிரயோகம் தோற்றதால் துர்மணம் அடைந்தான். அடக்கமில்லாதவன் இடுகாட்டில் அடக்கமானான்.
அவன் உயிர் பலகாலம் அலைந்து திரிந்து, முடிவில் எமலோகம் சென்றது. மாற்றான் மனையாளை அடைய தீய எண்ணம் கொண்டதால் "ரௌரவம்' எனும் நரகத்தில் துன்புற்றான். அதன்பின் பாவத்தைச் சுமந்து பூலோகம் சென்றான்.
ஒரு வேதியர் குடும்பத்தில் பிறந்து, வேத அப்பியாசத்தை முடித்து, தன் முன்னோர் தொழிலைத் தொடர்ந்தான். முற்பிறவியில் பெற்ற பத்தினியின் சாபத்தால் இளம்வயதிலேயே நோயுற்று பற்களை இழந்தான். வேத மந்திரங்களைச் சொல்லும் சொல்லையும் இழந்தான்; அவதியுறுகிறான். *காந்தாரி போன்ற பத்தினியின் சாபத்திற்குப் பரிகாரமே கிடையாது.
*காந்தாரி- பத்தினியாக வாழ்ந்த காந்தாரியின் சாபத்தால் மாயவனின் (கண்ணன்) அவதாரமும் முடிந்து; அவன் குலமும் அழிந்தது.
(வளரும்)
செல்: 63819 58636
நாடி ரகசியம்
1. விசாக நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சனியும், கேட்டை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சூரியனும் புதனும் சேர்ந்திருக்க, ஜாதகர் நிதி ஆலோசகராக இருப்பார்.
2. விசாக நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் குருவும், பூராட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் புதனும் சுக்கிரனும் சேர்ந்திருக்க, ஜாதகர் சகலகலா வல்லவர்.
3. விசாக நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சூரியனும், ஹஸ்த நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும் அமையும் ஜாதகிக்கு திருமணத்தில் தடை உண்டாகும்.
கேள்வி: ஜனன ஜாதகத்தையும், கோட்சாரத்தில் குரு அமையும் நிலையையும் இணைத்துப் பலன் காணும் முறையை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?
பதில்: ஜனன ஜாதகத்தில் சூரியனிருக்கும் ராசியில் கோட்சார குரு சஞ்சரிக்கும்போது பதவி உயர்வு, புத்திர பாக்கியத்தையும், சந்திரனிருக்கும் ராசியில் சஞ்சரிக்கும்போது இருப்பிட மாற்றத்தையும் நீண்ட பயணத்தையும், செவ்வாயிருக்கும் ராசியில் சஞ்சரிக்கும்போது கடன், நோயையும், பெண்களுக்கு திருமண யோகத்தையும், புதனிருக்கும் ராசியில் சஞ்சரிக்கும்போது கல்வியில் மேன்மை, புதிய நட்பு, காதல் போன்றவற்றையும், ஜென்ம குருவிருக்கும் ராசியில் சஞ்சரிக்கும்போது புகழ், தனிமைப்படுதல் போன்றவற்றையும், சுக்கிரனிருக்கும் ராசியில் சஞ்சரிக்கும் போது குடும்பத்தில் குழப்பத்தையும், ஆண்களுக்குத் திருமண யோகத்தையும், சனியிருக்கும் ராசியில் சஞ்சரிக்கும்போது செய்தொழிலில் குழப்பத்தையும், மனம் விரும்பாத இடமாற்றத்தையும் தரும். ஜனன ஜாதகத்தில் கிரகங்கள் அமராத வீடுகளில் குரு சஞ்சரிக்கும்போது, அந்தந்த வீட்டின் அதிபதியையே குரு சேர்வதாகக் கொள்ளவேண்டும். இதேபோல பிற கிரகங்களின் கோட்சார கதியையும் ஜனன ஜாதகத்துடன் பொருத்திப் பார்க்கும்போது மட்டுமே அவரவருக்கு உண்டான தனிப்பட்ட, துல்லியமான கோட்சாரப் பலன்களையறிய முடியும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.