இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

71

வாழ்க்கைத்துணையின் நிலைபற்றி அறிய பொதுவாக ஏழாம் பாவமே பரிசீலிக்கப்படுகிறது. ஆனால் ஏழாம் பாவம், வாழ்க்கைத்துணை என்ற நேரடி காரகத்தைக் குறிப்பிடாமல், பங்குதாரர் என்றே குறிப்பிடுகிறது. பங்குதாரர் என்றால் வாழ்க்கையின் பங்குதாரரா? தொழிலின் பங்குதாரரா என்ற கேள்வி எழுகிறது. வாழ்க்கைத் துணையால் ஏற்படும் நன்மை- தீமைகளைக் கண்டறியவே "உபபாத' லக்னத்தைக் கணிக்க வேண்டியதாகிறது. பாத லக்னத்தை லக்ன அடிப்படையில் குறிப்பதுபோல, "உபபாத' லக்னத்தை பன்னிரண்டாம் பாவத்தின் அடிப்படையில் குறித்திட வேண்டும். பன்னிரண்டாம் பாவத்தை முதலாகக் கொண்டு, அந்த பாவாதிபதி அமர்ந்த இடம்வரை எண்ணவேண்டும்.

அவ்வாறு எண்ணிவந்த தொகையை, பன்னிரண்டாம் பாவாதிபதி நின்ற இடம் முதலாய் எண்ண வரும் வீடே "உபபாத' லக்னம். உதாரணம்: லக்னம் கும்பம்- பன்னிரண்டாம் பாவாதிபதி மகரச்சனி அமர்ந்த இடம் ரிஷப மானால், மகரத்திலிருந்து ரிஷபம் வரை எண்ண வரும் தொகை ஐந்து. ரிஷபத்தை முதலாகக்கொண்டு எண்ணினால் ஐந்தாவது வீடாக வருவது கன்னி. கன்னி ராசியே "உபபாத' லக்னம். திருமணம், தாம் பத்திய சுகம், முறிவு, பிரிவு போன்றவற்றை "உபபாத' லக்னத்தைக் கொண்டே அறிய வேண்டும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

Advertisment

ggg

""திருமேனி அழகரே! சிற்றின்பத்தால் பேரின்பம் கெடும் எனும் அறிவிலார் கூற்றின் அறியாமை நீக்கி, அரும்பொருள தனை அறுதியிட்டு விளக்குமாறு வேண்டுகிறேன்'' என அன்னை சொக் கநாயகி திருப்புன்கூர் எனும் திருத் தலத்தில் உறையும் அருள்மிகு சிவலோகநாதரைப் பணிந்து கேட்டாள்.

காமேஸ்வரர் உரைத்தது- ""அந்தகன் (கண் இல்லாதவன்) விளக்கின் உஷ்ணம் அறிவான்; ஒளி அறியான். எல்லா செயலும் நன்மையையும் தீமையையும் சேர்ந்தே சமைத்திடும். நிழல் உருவாவது ஒளியின் செயலே. இல்லறத்தின் பின் வரும் துறவே நல்லறம். இல்லறம் என்பதே இன்பம் துய்த்தல். எதையும் பெறவிரும்பாதவர் எதைத் துறப் பார்? கல் குதிரைக்கு கடிவாளம் எதற்கு? பசி பாவமாகாது. புசிக்காமலிருத்தலே பாவமன்றோ? மனிதன், புனிதனாய் மாறிட பூவுலகிற்குச் செல்லும் பாதையமைப்பது சிற்றின்பம்தானே. யோகமென்பதே இணைவு. கருத் தினால் இன்புறும் செயல்கள் யாவும் யோகம் என்றுணர்.''

Advertisment

""ஆட்சீஸ்வரரரே! "விக்ஷிப்தம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய சித்திரை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், கேட்டை இரண்டாம் பாதத்தில் சனியும் செவ் வாயும் சேர்ந்திருக்க, மூலம் மூன்றாம் பாதத்தில் சூரியனும், அவிட்டம் முதல் பாதத்தில் சுக்கிரனும் புதனும் சேர்ந்திருக்க, ரேவதி நான்காம் பாதத்தில் குருவும், கார்த்திகை இரண்டாம் பாதத்தில் சந்திரனும் அமர்ந்திருக்கும் அமைப்பைப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக் கúண்டும்'' என்று கபிஸ்தலம் எனும் திருத்தலத் தில்அருள்புரியும் ஸ்ரீதயாநிதீஸ்வரரை அன்னை ஜடாமகுட நாயகி வேண்டிப் பணிந்தாள்.

நெல்லையப்பர் உரைத்தது- ""சடாதரியே! இந்த ஜாதகன், முற்பிறவியில் லோகிதாசன் எனும் பெயருடன், பஹல்பூர் என்ற ஊரில் வாழ்ந்து வந்தான். அவன் கல்வியில் தேர்ச்சிபெற்று அரசு அதிகாரியானான். தன் வானளாவிய அதிகாரத்தால் எவரையும் தண்டிக்கும் உரிமை பெற்றான். தான்தோன்றித்தனமாக தன் விருப் பத்தின்படி சட்டதிட்டங்களை வளைத்தான். ஏழை எளியோரின் பெரும்பகைக்கு ஆளானான்.

வறியவர்கள், அவன் செய்த கொடுமையால் கொதித்தெழுந்து தாக்கினர். மரணத்தோடு போராடினான். அவன் அதிகாரம் தோற்றது. மரணம் வென்றது. எமலோகத்தின் ஆணையை ஏற்றான். "பன்றி முகம்' எனும் நரகத்தில் பலகாலம் துன்புற்று பரிதவித்தபின், வந்தாரை வரவேற்கும் பூவுலகம் சென்றான். ஒரு சத்திரிய குடும்பத்தில் பிறந்து "நகைமுகன்' என்று பெயரிடப்பட்டான். இளம்வயதில் உண்டான வாத நோயால் அவன் கூன்முதுகினைப் பெற் றான். அவனைக் கண்டவர் முகத்தில் ஏளனப் புன்னகை பூத்தது. நகைமுகன் முகத்தில் புன்னகை காணாமல் போனது. முற்பிறவியில் எல்லாரையும் தலைவணங்கச் செய்து சட்டத்தை வளைத்தவன், முதுகு வளைந்து, எல்லாரையும் தலைதாழ்ந்து வணங்குபவன்போல் செல் கிறான். * நகுஷபோல, அகந்தைகொண்டு, தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பலரின் சாபத்தை முற்பிறவியில் பெற்றதால் துன்பப் படுகிறான். "பதவி வந்தால் பணிவு வேண்டும்' என்ற நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிக்க மறந்தான். தன் ஊரிலுள்ள நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்துதல், உழவாரப்பணி செய்தல் போன்ற பொதுத்தொண்டுகளைச் செய்தால், துன்பம் நீங்கி நலம்பெறுவான்.

* நகுஷன்- தன் அகம்பாவத்தால் முனிவர் களின் சாபம் பெற்று, இந்திரப் பதவியை இழந்தவன்.

(வளரும்)

செல்: 63819 58636