இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

28

டும் நதி, தடுக்கும் கற்களைத் தூக்கியெறிந்தும், பாறைகளைத் தாண்டிக் குதித்தும், மலைகளைப் பணிந்தும் செல்லும். அதுபோல், எல்லாருடைய வாழ்க்கை நீரோட்டத் திலும் தடைகள் உண்டாவது இயல்பானதே. ஒரு ஜாதகருக்கு ஏற்படும் தடை கோட்சாரத்தால் வந்ததா, தசாபுக்தி யால் ஏற்பட்டதா, சஞ்சித கர்மாவால் முடிவு செய்யப்பட்ட கொடுப்பினையால் விளைந்ததா என்று ஆராய்ந்து தடையின் அளவைக் கண்டறிந்தால் மட்டுமே, பரிகாரங்களால் சரிசெய்ய முடியுமா என்பதை உறுதிசெய்ய முடியும் என்பதே "கந்தர்வ நாடி'யின் அடிப்படை.

Advertisment

siva""பஞ்சாசனத்து அமரும் பரம் பொருளே! தாங்கள் எப்பொழுதும் ஆழ்ந்த தியானத்திலிருந்தாலும் எவ்வாறு இந்த பிரபஞ்சத்தில் வாழும் சகல உயிர்களையும் கட்டுப்படுத்து கிறீர்கள்? அதன் சூட்சுமத்தைக் கூறியருள வேண்டும்'' என அன்னை பரிமளசுகந்த நாயகி, திருவேள்விக்குடியில் அருள் பாலிக்கும் கல்யாண சுந்தரேசுவரரைப் பணிந்துகேட்டாள்.

அதற்கு ஜடாதரர் உரைத்தது- ""நந்திதேவரின் கட்டளையின்படியே சிவகணங்கள் இந்த பிரபஞ்சத்தை ஆள்கின்றன. புப்புக்ஷா (பசி), இச்சா (ஆசை) எனும் சிவகணங்களே பூலோகத்தை இயக்குகின்றன. இயற்கையான பசியும், பிறரால் கற்பிக்கப்பட்ட ஆசையுமே மனிதர் களின் வாழ்க்கைக்கு ஆதாரமாகிறது. உடலின் ஆசையே பசி; மனதின் பசியே ஆசை. பசியையும் ஆசையையும் வென்றவனே சிவகணங்களைக் கட்டுப்படுத்தும் சிவயோகி ஆகிறான்.''

""அம்பலத்தரசே! "திக்ஸ்வஸ்திகம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய மிருகசிரீட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், மகம் முதல் பாதத்தில் செவ்வாயும் சனியும் சேர்ந்திருக்க, சித்திரை முதல் பாதத்தில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்திருக்க, ஸ்வாதி முதல் பாதத்தில் புதனும், அனுஷம் மூன்றாம் பாதத்தில் குருவும், மூலம் மூன்றாம் பாதத்தில் சந்திரனும் அமையப்பெற்ற இந்த ஜாத கரின் கர்மப்பனை தாங்கள் தயைக் கூர்ந்து விளக்க வேண்டும்'' என்று திருப்பாற்றுறை திருத்தலத்தில் அருள் புரியும் திருமூலநாதரிடம் அன்னை நித்யகல்யாணி வினவினாள்.

Advertisment

திருஎதிர்கொள்பாடி உடையார் உரைத் தது- ""தேவி! இந்த ஜாதகன் முன்ஜென் மத்தில் காந்தார நாட்டில் புருஷபுரம் எனும் நகரில் ஒரு வைசிய குடும்பத்தில் பிறந்தான். கல்வியில் தடை ஏற்பட்டு, ஜீவனத்திற்காக ஒரு உள்ளூர் வணிகரிடம் உதவியாளனாக இருந்தான். பேராசையால் உந்தப்பட்டு, ஒரு நாள் தன் எஜமானரைக் கொன்று, அவரது பெரும் பொருளைக் களவாடி, வேறு ஊருக்குத் தப்பிச் சென்றான். சிலகாலம் கழித்து மனநோயால் பாதிக்கப்பட்டு தன்னுயிரை மாய்த்துக்கொண்டான். எமதூதர்கள் அவனை "அந்தகூபம்' என்ற நரகத்தில் தள்ளினார்கள். எமவதை முடிந்து, சஞ்சித கர்மாவைச் சுமந்து, ரங்கபுரம் என்ற ஊரில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தான்.

இளம்வயதிலேயே பெற்றோரை இழந் தான். உறவினர்கள் அவனுடைய மூதாதையர் சொத்துகளைத் தந்திரமாக அபகரித்துக் கொண்டனர்.

செல்வமும், பிறர் ஆதரவுமின்றி அல்லலுறுகிறான். முன்செய்த படுபாதகச் செயலுக்குப் பரிகாரமாக, குலகுருவுக்கு பாதபூஜை செய்யவேண்டும். எஜமான விசுவாசமுள்ள ஞமலிக்கு (நாய்) தினமும் உணவளிக்க வேண்டும். இதுதவிர, தேய்பிறை அஷ்டமியில் மௌன விரதமிருந்தால், அவன் இழந்த செல்வம் மீண்டும் வரும்.''

(வளரும்)

செல்: 63819 58636