இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
22
மனமும் உடலும் திரிதோஷங்களாலும், பஞ்சபூத சம்பந்தத்தாலும் உருவாகி, தசவாயுக்களினால் இயக்கப்படுகின்றன. இந்த இயக்கத்தை நுண்ணறிவு எனும் ஐந்தாம் பாவத்தின் வலிமையாலும், அதற்கு ஐந்தாமிடமாகிய ஒன்பதாமிடத்தின் கடவுள் கருணையாலுமே- கட்டுப்படுத்த முடியும்.
அதனால், ஒரு ஜாதகத்தின் திரிகோண பாவங்களைக்கொண்டே ஒருவரின் வாழ்வையும் தாழ்வையும் அறியமுடியும் என்பதே "கந்தர்வநாடி'யின் கருத்து.
""விதியை மாற்றும் வண்மையுடைய சங்கரரே, தேவர்களுக்குக் கேட்டதையெல்லாம் தரும் காமதேனு, கற்
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
22
மனமும் உடலும் திரிதோஷங்களாலும், பஞ்சபூத சம்பந்தத்தாலும் உருவாகி, தசவாயுக்களினால் இயக்கப்படுகின்றன. இந்த இயக்கத்தை நுண்ணறிவு எனும் ஐந்தாம் பாவத்தின் வலிமையாலும், அதற்கு ஐந்தாமிடமாகிய ஒன்பதாமிடத்தின் கடவுள் கருணையாலுமே- கட்டுப்படுத்த முடியும்.
அதனால், ஒரு ஜாதகத்தின் திரிகோண பாவங்களைக்கொண்டே ஒருவரின் வாழ்வையும் தாழ்வையும் அறியமுடியும் என்பதே "கந்தர்வநாடி'யின் கருத்து.
""விதியை மாற்றும் வண்மையுடைய சங்கரரே, தேவர்களுக்குக் கேட்டதையெல்லாம் தரும் காமதேனு, கற்பக விருட்சம், அட்சய பாத்திரத்தைத் தந்ததுபோல மனிதர்களுக்கும் கொடுத்தால் அவர்களும் சுகம் பெறுவார்கள். அவ்வாறிருக்க ஜீவர்களுக்கு மட்டும் அவற்றைத் தராதது ஏனோ?'' என அன்னை மனோன்மணி, திருநாவலூரில் அருள்புரியும் பக்தஜனேசுவரரைப் பணிவுடன் கேட்டாள்.
அதற்கு திருநாவலேசுவரர் உரைத்தது- ""காமதேனு, கற்பக விருட்சம், அட்சய பாத்திரமெனும் மூன்றும் ஒன்றாய்ச் சேர்ந்த மெய்யறிவாகிய பகுத்தறிவு புத்தியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. புத்தியே ஞானப்பாலினைத்தரும் காமதேனு; புத்தியே எதைக் கேட்டாலும் தரும் கற்பக விருட்சம்; புத்தியே அள்ளக்குறையாத அமுதசுரபி. புத்தியின் துணைக்கொண்டு செய்யும் காரியங்களில் யுக்தியும், பக்தியும் உண்டானால், அவர்களுக்கு வானமும் வசப்படும்.''
""திருவாதவூர் வள்ளலே! "கடிச்சன்னம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய கிருத்திகை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், உத்திரம் முதல் பாதத்தில் செவ்வாயும், ஹஸ்தம் முதல் பாதத்தில் சந்திரனும், சுவாதி நான்காம் பாதத்தில் புதனும், கேட்டை இரண்டாம் பாதத்தில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்திருக்க, சதயம் இரண்டாம் பாதத்தில் சனியும், சதயம் நான்காம் பாதத்தில் குருவும் அமையப் பிறந்த இந்த ஜாதகரின் கர்மப்பலனை, தாங்கள் அருள்கூர்ந்து விளக்க வேண்டும்'' என்று திருவாதவூரில் அருள்பாலிக்கும் திருமறைநாதரை அன்னை திருமறை நாயகி வினவினாள்.
திருமாலுக்கு சாப விமோசனம் தந்த திருவாதவூரார் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில் செய்த நல்வினையால், நாகபுரி என்ற ஊரில் அந்தணர் குடும்பத்தில் பிறந்து, நான்கு வேதங்களையும் கற்று வேதியனாய் வாழ்ந்து வந்தான். தீய நட்பினாலும், பெரும் பொருளீட்ட வேண்டுமென்ற அவாவினாலும் சூதாட்டக்களும் சென்றான். சூதாட்டத்தில் கைப்பொருளையும், கடனாய்ப் பெற்ற பொருளையும் இழந்து கலக்கமுற்று, இல்லம் நீக்கி கானகம் புகுந்தான். உயிர் வாழ்தல் வேண்டி மயானத்தில் பிணங்களை எரிக்கும் தொழிலைப் புரிகிறான். பேராசை, பிறர்பொருள் கவர்தல் என்ற இரு பாவங்களுக்கும் காரணமாகிய சூதினால், அறியாமையை ஒழிக்கும் குருவாயிருந்தவன் அழுகும் உடலை எரிக்கிறான். சூதினால் வரும் தீமையை பிறருக்கு உபதேசித்துவிட்டு, தான் மட்டும் அவ்வழி நில்லாது அறநெறி பிறழ்ந்ததால், இன்னும் மூன்று பிறவிகளில் இதே தொழிலைப் புரிந்து, அதனால் வரும் புண்ணியத்தால், பொன்னாசையும் பொருளாசையும் சரிந்து நல்வழி ஏகுவான்.''
(வளரும்)
செல்: 63819 58636