இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
66
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஜனன ஜாதகத்தின் கொடுப்பினைப் பலன்களையே ஒரு ஜாதகர் அனுபவிப்பார் என்றா லும், அந்த பலன்களை ஜாதகர் அடையும் காலத்தை நிர்ணயிப்பது தசாபுக்திகளே. பொதுவாக ஆறாம் தசையும், ஆறாம் பாவாதிபதியின் தசையும் கடன், நோய், மாரகம் அல்லது மரணத்திற்கு ஒப்பான கண்டம் போன்றவற்றைத் தரும். ஆறாம் தசையின் அதிபதியும், ஆறாம் பாவத்தின் அதிபதியும், லக்னத்திற்கு பாதக, மாரக ஸ்தா னங்களில் நின்றால் கடுமையான தீய விளைவுகளை உண்டாக்கும். சனி தசையில் சந்திர புக்தியும், சந்திர தசையில் சனி புக்தியும் தோல்வியைத் தரும். சந்தி ரனுக்கு குருவின் நேரடித் தொடர்பு அல்லது பார்வை ஏற்பட்டால் மட்டுமே பலன்கள் மாறும். தசாநாதனுக்கும், புக்திநாதனுக்கும் உள்ள நட்பு அல்லது பகை யைக் கொண்டே தசாபுக்திப் பலன்களைக் கண்டறியலாம் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""பிராணநாதரே! ஸ்திரீ, புருஷ (ஆண்- பெண்) பேதமில்லாமல் சிருஷ்டியை உருவாக்க முடியாதா? ஒரு மனிதனின் அன்னை, பிதா இருவரில் பிரதானமானவர் யார்?'' என அன்னை சொக்கநாயகி திருக்கழுகுக்குன்றம் திருத்தலத் தில் உறையும் அருள்மிகு வேதகிரீஸ்வரரைப் பணிந்து கேட்டாள்.
வேங்கிபுரீஸ்வரர் உரைத்தது- ""தீயைக் கடையும்போத

வேங்கிபுரீஸ்வரர் உரைத்தது- ""தீயைக் கடையும்போது அக்னிக்குஞ்சு பிறக்கிறது. அது தீக்கடைக் கோலிலோ கற்குழிக்குள்ளோ மறைந்திருப்பதில்லை. கடைதல் எனும் செய லால் உருவாவது. தன்னிலிருந்தே தன்னைத் தோற்றுவித்துக்கொள்ளும் அக்னி, பொருட் களால் உருவாகாது. செயலால் மட்டுமே தோன்றும். இரவு- பகல் பேதத்தால் வாரமும், சீத, உஷ்ண பேதத்தால் ருதுக்களும் உருவாகும். பேதமே சிருஷ்டியின் ஆதாரம். தன் உடலுக்குள் வேறு உடலினைச் சுமந்து உணவூட்டி, அதனால் உயிரையும் ஊட்டும் தாயே முதன்மை யானவள். இதை அவரவர் நாபியே (தொப்புள்) அவர்களுக்கு நினைவூட்டும்.''
""சுவாமி, "சக்ரமண்டலம்' எனும் தாண்ட வத்தின் லயமாகிய ஹஸ்த நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், சதயம் நான்காம் பாதத்தில் சந்திரனும், ரேவதி நான்காம் பாதத்தில் செவ்வாயும், அஸ்வினி நான்காம் பாதத்தில் சூரியனும், அப பரணி இரண்டாம் பாதத்தில் புதனும், கிருத்திகை இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், திருவாதிரை முதல் பாதத்தில் சனியும், ஆயில்யம் இரண்டாம் பாதத்தில் குருவும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று திருவதிகைத் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீவீரட்டானேசுவரரை அன்னை பெரியநாயகி வினவினாள்.
பிரும்மபுரீசுவரர் உரைத்தது- ""தாட்சாயினியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் சாரநாதன் எனும் பெயருடன் நாரையூர் என்ற ஊரில் வாழ்ந்துவந்தான். அவனுக்கும் அந்த ஊரில் வாழ்ந்த ஒரு ஏழை விவசாயிக்கும் பணம் கொடுக்கல்- வாங்கலில் தகராறு ஏற்பட் டது. பணத்திற்குப் பணயமாக அந்த விவசாயி யின் மகளைக் கடத்திவந்து வீட்டுக்காவலில் வைத்தான். சிலகாலம் கழித்து அவளை விடுவித்தான். ஒரு ஆடவனின் வீட்டுக்காவலில் அந்தப் பெண் இருந்ததால், அவளை மணக்க யாரும் முன்வரவில்லை. மனமொடிந்த அந்தப் பெண், தன்னுயிரைத் தானே மாய்த் தாள். சாரநாதனை நரை, திரை, மூப்பும், பிணியும் சுமந்துசென்று இறுதி ஊர்வலத்தை முடித்தன. அவனு டைய பிரேத ரூபம், பிண்ட ரூபமாகி நரகத்திற்குப் பயண மானது. "தாமிஸ்ரம்' எனும் நரகத்தில் அவதியுற்றான். முன்ஜென்ம வினைப்பயனால், அனுபவம் பெறவேண்டி பூவுலகம் சென்றான். சிம்மபுரி என்ற ஊரில் பிறந்தான். கல்வியில் சிறந்து மனநோய் தீர்க்கும் மருத்துவனானான். ஒருநாள் மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணால் கொல் லப்பட்டான். அவன் முற்பிறவியில் வஞ்சித்த பெண்ணே இப்பிறவியில், மனநோயாளியாய் வந்து தன் பிறவிக் கடனைத் தீர்த்தாள் என்பதை ஊழ்வினை மட்டுமே உணர்த்தும். முற்பிறவி யில், * பீஷ்மர்போல், ஒரு பெண்ணின் வாழ் வைக் கெடுத்ததால் இந்த கதி நேர்ந்தது.
* பீஷ்மர்- சந்திர வம்சத்தில் சாந்தனுவின் மகனாகிய பீஷ்மர், தன் தம்பிக்காக சுயம் வரத்தின்போது காசி மன்னனின் மகளான அம்பை என்ற பெண்ணைக் கவர்ந்துவந்தார். முடிவில் அம்பையின் தற்கொலைக்கும் காரண மானார். மறுபிறவியில் சிகண்டி என்று பெயர் பெற்ற அம்பை, பீஷ்மரைப் பழிவாங்கினாள்.
(வளரும்)
செல்: 63819 58636
__________
நாடி ரகசியம்
1. ஹஸ்த நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சந்திரனும், செவ்வாயும் அமையும் ஜாதக அமைப்பைப் பெற்றவர், கடல் சார்ந்த தொழிலில் வெற்றிபெறுவார்.
2. ஹஸ்த நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சனியும் புதனும் சேர்ந்திருக்கும் அமைப்பைக் ùôகண்ட ஜாதகர் எழுத்துத்துறையில் முத்திரைப் பதிப்பார்.
3. ஹஸ்த நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்திருக்க, ரேவதி நான்காம் பாதத்தில் சந்திரனும் உள்ள பெண்ணுக்கு திருமண வாழ்வு அமையாமல் போகும்.
கேள்வி: சிலருக்கு அவர்கள் கற்ற கல்விக்கும், செய்யும் தொழிலுக்கும் தொடர்பில்லாமல் போவது ஏன்? ஜீவனத்தைத் தரும் கிரகத்தைக் கண்டறியும் முறையை "கந்தர்வ நாடி'யின் மூலம் விளக்கமுடியுமா?
பதில்: ஒரு ஜாதகத்தில் நான்காம் பாவம் கல்வியையும், ஆறாம் பாவம் உத்தியோகத்தையும், பத்தாம் பாவம் சுயதொழில் மற்றும் ஆளுமையையும் குறிக்கும். நான்காம் பாவத்தையும் ஆறாம் பாவத்தையும் தொடர்பு கொள்ளும் கிரகத்தின் காரகம் உத்தியோகம் செய்யும் துறையையும், நான்காம் பாவத்தையும் பத்தாம் பாவத்தை யும் தொடர்புகொள்ளும் கிரகத்தின் காரகம் சுயதொழில் செய்யும் துறையையும் சுட்டிக்காட்டும். சில ஜாதகங்களில் நான்காம் பாவமும், ஆறாம் பாவமும், பத்தாம் பாவமும் வெவ்வேறு கிரகங்களின் தொடர்பிலிருந் தால் கற்ற கல்விக்கேற்ற தொழில் அமையாது. ஜீவனத்தைத் தரும் கிரகம், சர ராசிகளின் தொடர்பைப் பெற்றால் நிரந்தரமற்ற தொழிலும், உபய ராசிகளுடன் தொடர்பிலிருந்தால் ஒரே நேரத்தில் ஒன்றுக்குமேற்பட்ட தொழில்களைச் செய்யும் அமைப்பையும் தரும். ஜீவனகிரகத்தின் வேர்ப்பகுதியாக அமையும் மூலத்திரிகோண ராசியின் காரகமே ஜாதகருக்கு வெற்றி தரும் தொழிலைத் தீர்மானிக்கும். பத்தாம் வீட்டு அதிபதியைக் கொண்டு மட்டுமே ஒருவரின் ஜீவனத்தைத் தீர்மானிக்க முடியாது. எந்த தொழிலும் செய்யாது, மூதாதையர் சொத்தினால் வரும் வருமானத்தைக் கொண்டே வாழ்க்கையை நடத்தி முடிக்கும் ஜாதகருக்கு கர்ம ஸ்தானாதி பதியாகிய பத்தாம் வீட்டு அதிபதி ஜீவனாதிபதியாக அமைய வாய்ப்பில்லை. ஜீவனத்தின் அடிப்படை உணவென்பதால், இரண்டு, ஆறு, பத்தாம் பாவங்களின் தொடர்பில்வரும் கிரகத்தைக்கொண்டே ஜீவனத்தைத் தரும் கிரகத்தைக் கண்டறியவேண்டும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.