Advertisment

கந்தர்வ நாடி! - 14

/idhalgal/balajothidam/gandharva-nadi-14

க்ன கேந்திரம், கோணம், பணபரம், ஆபோக்லிமம் போன்றவற்றின் அமைப்பும், கிரகங்கள் அமர்ந்திருக்கும் வரிசைக்கிரமம், கிரகங்களுக்குள் உள்ள இடைவெளி மற்றும் குறிப்பிட்ட காரக பாவத்திற்கும், பாவ காரகருக்கும் இடையேயுள்ள பகுதியின் அளவு போன்றவையே ஒரு ஜாதகத்தின் விதியை நிர்ணயிக்கும் என்பதே கந்தர்வ நாடியின் கருத்து.v ""அசையும், அசையா பொருளுமாகி, இசையும், நிருத்தியமும் உலகிற்குத் தந்த பரம்பொருளே! வேண்டுதல், வேண்டாமையில்லாமல் எல்லா உயிர்களையும் சமமாகக் கருதும் தாங்கள், எப்பொழுத

க்ன கேந்திரம், கோணம், பணபரம், ஆபோக்லிமம் போன்றவற்றின் அமைப்பும், கிரகங்கள் அமர்ந்திருக்கும் வரிசைக்கிரமம், கிரகங்களுக்குள் உள்ள இடைவெளி மற்றும் குறிப்பிட்ட காரக பாவத்திற்கும், பாவ காரகருக்கும் இடையேயுள்ள பகுதியின் அளவு போன்றவையே ஒரு ஜாதகத்தின் விதியை நிர்ணயிக்கும் என்பதே கந்தர்வ நாடியின் கருத்து.v ""அசையும், அசையா பொருளுமாகி, இசையும், நிருத்தியமும் உலகிற்குத் தந்த பரம்பொருளே! வேண்டுதல், வேண்டாமையில்லாமல் எல்லா உயிர்களையும் சமமாகக் கருதும் தாங்கள், எப்பொழுதும் தேவர்கள் மட்டுமே வெற்றிபெறுமாறு காலத்தைப் படைத்ததன் காரணம் யாதோ?'' என்று அன்னை திரிபுர சுந்தரி, திருவிற்கோலத்தில் வீற்றிருக்கும் திரிபுராந்தகரிடம், ஐய வினாவைத் தொடுத்தாள்.

Advertisment

அதற்கு மகாதேவன் உரைத்தது- ""சத்துவ, ரஜோ, தமஸ் ஆகிய மூன்றும் சேர்ந்தே பரிபூரண குண தத்துவமாவதுபோல், ஐந்திறன் எனும் காலக்கணிதத்தில் வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என்ற ஐந்து அங்கங்களும், தேவர், அசுரர், நரன்(மனிதர்) ஆகிய மூவருக்கும் சமமாகவே பிரிக்கப்பட்டுள்ளன. அசுரர்களுக்கு சாதகமான வேளையில் தவமும், யாகமும் செய்து வலிமை பெற்று, அவர்கள் தேவர்களைப் பலமுறை அடிமைப்படுத்தியுள்ளார்கள். நரன் (மனிதர்) தனக்கு சாதகமான தருணத்தில் மந்திர உச்சாடனம் செய்து தேவதைகளை வசியப்படுத்துகிறான். காலக்கணிதம் அறிந்தவர் மட்டுமே வாழ்வில் வெற்றியடைய முடியும் என்பதே உண்மை.''

siva-parvathi

""அணுவுக்குள்ளும் அற்புத நடனம் புரியும் ஆலங்காட்டு அரசே! "அபவித்தம்'

எனும் தாண்டவத்தின் லயமாகிய அஸ்வினி நான்காம் பாதத்தில் லக்னமிருக்க, பரணி இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், புதனும் சேர்ந்திருக்க, கிருத்திகை இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், கிருத்திகை மூன்றாம் பாதத்தில் சூரியனும், ரோகிணி முதல் பாதத்தில் சனியும், மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் குருவும், மூலம் இரண்டாம் பாதத்தில் சந்திரனும், இருக்கப் பிறந்த இந்த ஜாதகரின் கர்மபலனை, தாங்கள் அருள்கூர்ந்து விளக்க வேண்டும்'' என்று அன்னை வண்டார்குழலி அறிவினாஎழுப்பினாள்.

சாம்பசிவன் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில் அவந்தி நகரில் பெண்ணாகப் பிறந்து, தனவதி என்ற பெயரில், செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தான். தன் குரூர எண்ணத்தால் பிறரைப் பற்றி அவதூறு பேசி வந்தான். அதனால் பல குடும்பங்கள் குழப்பம் ஏற்பட்டுப் பிரிந்துபோயின. அவன் முதுமையில் இறந்து நரகம் சென்றான். சில காலம் கழித்து, தென்னாங்கூர் என்ற ஊரில் ஒரு ஏழைக் குடும்பத்தில் ஆணாகப் பிறந்தான். முற்பிறவியில் செய்த தவறால் ஊமையாகப் பிறந்து மனவேதனையுடன் வாழ்கிறான். இப்பிறவியில், திருந்தி, வருந்தி விடும் கண்ணீரே, தீய கர்மபலனைப் போக்கும். இதற்கு வேறு பரிகாரம் கிடையாது.''

(வளரும்)

செல்: 63819 58636

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe