பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில், பெண்களின் அங்க லட்சணமும், குணநலனும் எட்டுத் தத்துவங்களாகப் பிரிக்கப்படுகின்றன. தெய்வ தத்துவம், முனி தத்துவம், நாக தத்துவம், காந்தருவ தத்துவம், பூத தத்துவம், அரக்கித் தத்துவம், இயக்கித் தத்துவம், பேய் தத்துவம் என்ற அடிப்படையிலேயே "ஸ்த்ரி ஜாதகங்கள்' கந்தர்வ நாடியில் ஆராயப்படுகின்றன.
""அகிலத்தையே அச்சுறுத்திய அரக்கர்களை அழித்து தேவர்களைக் காத்த மார்க்க சகாயரே! நிலையில்லா இவ்வுலகில், என்றாவது ஒரு நாள் ஜீவர்களின் உயிர் பிரிந்து உடல் அழிந்துபோவதே இயல்
பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில், பெண்களின் அங்க லட்சணமும், குணநலனும் எட்டுத் தத்துவங்களாகப் பிரிக்கப்படுகின்றன. தெய்வ தத்துவம், முனி தத்துவம், நாக தத்துவம், காந்தருவ தத்துவம், பூத தத்துவம், அரக்கித் தத்துவம், இயக்கித் தத்துவம், பேய் தத்துவம் என்ற அடிப்படையிலேயே "ஸ்த்ரி ஜாதகங்கள்' கந்தர்வ நாடியில் ஆராயப்படுகின்றன.
""அகிலத்தையே அச்சுறுத்திய அரக்கர்களை அழித்து தேவர்களைக் காத்த மார்க்க சகாயரே! நிலையில்லா இவ்வுலகில், என்றாவது ஒரு நாள் ஜீவர்களின் உயிர் பிரிந்து உடல் அழிந்துபோவதே இயல்பு. இவ்வாறான வாழ்வில், "மரணமில்லா பெருவாழ்வு' வாழ வழியுண்டா?'' என்று அன்னை சுகந்த குந்தளாம்பிகை, மதுரையம்பதி வாழ் திருவாப்புடையாரை பணிந்து கேட்டாள்.
அதற்கு மகாதேவன் உரைத்தது- ""ஒழுக்கமான புத்திரரைப் பெற்றவரும், தன் அறிவால் பிறருக்கு விஷய தானம் செய்தவரும், விருட்சங்களை (மரங்கள்) பேணி வளர்ப்பவரும், மரணமில்லா பெருவாழ்வு பெறுகிறார்கள். ஒழுக்கமான புத்திரரால் சந்ததி வளரும். பிறருக்கு தான் கற்றதை உபதேசித்த கல்வி நெடுநாள் வாழும். வளரும் மரங்கள் பல தலைமுறைகள் தொடரும். இம்மூன்று செயல்களையும் செய்பவர்கள் பூதவுடல் அழிந்தாலும், புகழ் உடலால் இவ்வுலகம் உள்ளவரை வாழ்வார்கள்.''
""வண்டின் ரீங்கார சப்தமே ஓங்காரமாய் ஒலிக்கும் திருவண்டுத்துறையில் உரையும் மதுவனேஸ் வரரே, "வலிதோருகம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய அஸ்வினி மூன்றாம் பாதத்தில் லக்னமிருக்க, அஸ்வினி நான்காம் பாதத்தில் சூரியனும், பரணி இரண்டாம் பாதத்தில் புதனும், பரணி நான்காம் பாதத்தில் சுக்கிரனும், ரோகிணி முதல் பாதத்தில் குருவும், ஆயில்யம் முதல் பாதத்தில் சனியும், திருவோணம் மூன்றாம் பாதத்தில் சந்திரனும், திருவோணம் நான்காம் பாதத்தில் செவ்வாயும் இருக்கப் பிறந்த இந்த ஜாதகியின் கர்மப்பலனை தயைகூர்ந்து விளக்க வேண்டுகிறேன்'' என்று அன்னை பிரகதாம்பாள் விநயமுடன் விண்ணப்பித்தாள்.
சாம்பசிவன் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகி முற்பிறவியில் நேத்திரவதி ஆற்றங்கரையிலுள்ள தர்மஸ்தலத்தில் பெரும் செல்வந்தரின் மகளாகப் பிறந்து, தானதர்மம் செய்து, பிற உயிர்களிடமும் அன்பு காட்டினாள். தன் ஆசைக்காக ஒரு பெண் புறாவை, தன் உயிருக்கும் மேலாய் அன்புடன் வளர்த்து வந்தாள். முதுமையில் இயற்கையெய்தி சொர்க்கம் சென்றாள். புண்ணிய பலன்கள் தீர்ந்த பின், சில காலம் கழித்துக் கோவிலம்பதி என்ற ஊரில் பிறந்து, பத்மாவதி என்ற பெயருடன், ஒழுக்கநெறியுடன் வாழ்ந்துவந்தாள். திருமணமாகிய சிறிது காலத்திலேயே இந்த ஜாதகியின் கணவன் தீயோர் நட்பால் மனைவியைப் பிரிந்து சென்றான். கணவனைப் பிரிந்து, அற்ற குளத்தில் அகப்பட்ட மீன்போல் வாடுகிறாள்.
முற்பிறவியில், ஜோடிப் புறாவைப் பிரித்துப் பெண் பட்சியை மட்டுமே வளர்த்ததால் வந்த சாபத்தின் பலனை அனுபவிக்கிறாள். இதற்குப் பரிகாரமாக ஏழு ஏழைப் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்க, பிரிந்த கணவன் மனம் திருந்தி வீடு திரும்புவான்.''
(வளரும்)
செல்: 63819 58636