இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

12

ஆன்மா, உடல், தாது, மண்டலம், குணம், மலம், பிணி, விகாராம், ஆதாரம், வாயு, நாடி, அவஸ்தை, ஐயுடம்புகள் உள்ளடக்கிய தொன்னூற்றாறு தத்துவங்களின் அடிப்படையில் உருவாகும் பேதமே பிறவி என்றும், அதன் அடிப்படையில் மட்டுமே ஜாதகங்கள் ஆராயப்பட வேண்டும் என்பதே கந்தர்வ நாடியின் கருத்து.

Advertisment

""அருள் எனும் ஒளியால் இருளாகிய அறியாமையை அகற்றும் பராபர குருவே! மரங்களில் பழுத்த பழங்கள் இயல்பாகவே உதிர்ந்து விழுவதுபோல், இயற்கையாகவே நடக்கும் நிகழ்வுகளுக்கும் விதிக்கும் தொடர்புண்டா?'' என்று அன்னை பெரிய நாயகி, சீர்காழியில் உறையும் தோணியப்பரைப் பணிந்துகேட்டாள்.

Gandharva Nadi!

சட்டையப்பர் (சிவன்) உரைத்தது- ""பழுத்த பழங்கள் மட்டுமல்லாது, சிலசமயம் பழுக்காத காய்களும் வெம்பி விழும். பலமான காற்றாலும், பறவைகள் அமர்வதாலும் காய்கள் உதிர்ந்துவிடும்.

அதுபோல விதியின் வினைப்பயனால், நோயாலும் விபத்தாலும் அற்ப ஆயுளில் மானுடர் மாண்டுபோவதை உணர்ந்தால் மட்டுமே விதியின் தொடர்பையும் வலிமையையும் அறியமுடியும்.''

""லலாட திலகா எனும் நாட்டிய கரணத்தால் குண்டலினியின் இயக்கத்தை சூட்சுமமாய் விளக்கிய பெருமானே, "வர்த்திகம்' என்ற தாண்டவத்தின் லயமாக அமைந்த அஸ்வினி இரண்டாம் பாதம் லக்னமாக அமைய, அஸ்வினி நான்காம் பாதத்தில் சந்திரனும், ரோகிணி மூன்றாம் பாதத்தில் சுக்கிரனும், ரோகிணி நான்காம் பாதத்தில் புதனும், மிருகசிரீட மூன்றாம் பாதத்தில் சூரியனும், மிருகசீரிட நான்காம் பாகத்தில் குருவும், ஹஸ்தம் முதல் பாதத்தில் செவ்வாயும், ரேவதி நான்காம் பாதத்தில் சனியும் இருக்கப் பிறந்தவரின் ஜென்மப் பலன்களை விளக்கவேண்டும்'' என்று அன்னை அறம்வளர்த்த நாயகி, திருபுவனம் கம்பகரேசுவரரை (சிவன்) வினவினாள்.

அம்பலவாணன் (சிவன்) உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில் அருணையம்பதியில் விவசாயம் செய்து வந்தான். தன்னை நாடிவந்தோருக்கு இல்லையென்று சொல்லாமல் உணவளித்தான். தர்ம சாத்திரங்களின் நெறி நின்று, தன் வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு தருமம் செய்தான். முதுமையில் மரணமடைந்து சுவர்க்கம் சென்றான். சிலகாலம் கழித்து வடபுரி என்ற ஊரில் பிறந்து, தன் முயற்சியால் ஊர்த்தலைவராகப் பொறுப்பேற்றான். தன் ஆடம்பர செலவிற்காக மக்கள் வரிப்பணத்தைத் திருடினான். ஊரின் பொது நிலங்களை அபகரித்தான். நடுவயதில் நோயால் கண்களையும், விபத்தில் குடும்பத்தாரையும் இழந்து வாடுகிறான். ஊருக்குச் செய்த துரோகத்தால் உயிருள்ளவரை அவதியுற வேண்டும். இதற்குப் பரிகாரம் கிடையாது என்பதே விதி.''

(வளரும்)

செல்: 63819 58636