இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
105
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஒரு ஜாதகருக்கு வாழ்வில் ஏற்படும் தொடர்புகள், அவருடைய நடப்பு தசாபுக்தியைச் சார்ந்ததாகவே அமையும். உதாரணத்திற்கு, ஒருவருக்கு திருமணம் நடக்கும் காலத்தில், சனி தசை சந்திரபுக்தியாக இருந்து, திருமண நாளில் ஒரு கிரகமும் அதை சுட்டிக்காட்டினால், மணமகளின் லக்னமும், ராசியும் அந்தத் தொடர்பிலேயே அமைவதைக் காணலாம். ஒரு விதைக்குள்ளே விருட்சத்தைக் காண்பது போல, ஒருவரின் ஜனனகாலத்தில் தசாநாதனாகவும் புக்திநாத னாகவும் அமையும் கிரகங்களே அவருடைய வழ்வின் நிகழ்வு களைத் தீர்மாணிக்கும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""யோகீஸ்வரரே! கனலில் தொடங்கி கமலத்தில் நிறைவுறும் யோக மார்க்கத்தில் ஜாதகர் அறியவேண்டிய உபாயத்தினைத் தாங்கள் உபதேசித்தருள வேண்டுகிறேன்'' என அன்னை அல்லியம் பூங்கோதை, கானகந்தர்வர்களைக் காதணியாய் அணிய இசைந்த தியாகராஜரை திருவாரூர் திருத்தலத்தில் பணிந்துகேட்டாள்.
நாகநாதர் உரைத்தது- ""உடலில் பிரித்த மனதை உயிரினில் கரைத்து, ஏகமுகமாகத் தியானிக்க வேண்டும். நவவாசல் அறிந்து, நினைவை வாசியில் கூட்டினால், தன்னுள்ளே தன்னைக் காணலாம். வேணுவின் (புல்லாங் குழல்) எட்டு வி
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
105
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஒரு ஜாதகருக்கு வாழ்வில் ஏற்படும் தொடர்புகள், அவருடைய நடப்பு தசாபுக்தியைச் சார்ந்ததாகவே அமையும். உதாரணத்திற்கு, ஒருவருக்கு திருமணம் நடக்கும் காலத்தில், சனி தசை சந்திரபுக்தியாக இருந்து, திருமண நாளில் ஒரு கிரகமும் அதை சுட்டிக்காட்டினால், மணமகளின் லக்னமும், ராசியும் அந்தத் தொடர்பிலேயே அமைவதைக் காணலாம். ஒரு விதைக்குள்ளே விருட்சத்தைக் காண்பது போல, ஒருவரின் ஜனனகாலத்தில் தசாநாதனாகவும் புக்திநாத னாகவும் அமையும் கிரகங்களே அவருடைய வழ்வின் நிகழ்வு களைத் தீர்மாணிக்கும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""யோகீஸ்வரரே! கனலில் தொடங்கி கமலத்தில் நிறைவுறும் யோக மார்க்கத்தில் ஜாதகர் அறியவேண்டிய உபாயத்தினைத் தாங்கள் உபதேசித்தருள வேண்டுகிறேன்'' என அன்னை அல்லியம் பூங்கோதை, கானகந்தர்வர்களைக் காதணியாய் அணிய இசைந்த தியாகராஜரை திருவாரூர் திருத்தலத்தில் பணிந்துகேட்டாள்.
நாகநாதர் உரைத்தது- ""உடலில் பிரித்த மனதை உயிரினில் கரைத்து, ஏகமுகமாகத் தியானிக்க வேண்டும். நவவாசல் அறிந்து, நினைவை வாசியில் கூட்டினால், தன்னுள்ளே தன்னைக் காணலாம். வேணுவின் (புல்லாங் குழல்) எட்டு விரல் துளைகளும் ஒரு ஆற்று வாய்த் துளையும் இசைக்கு இசைவதுபோல, நவதுவாரங்களை மூடித்திறப்பதைத் திறம்பட உணர்ந்தவன் நாதப் பிரம்மத்தில் லயிக்கலாம். பிரக்ருதி ஸ்வரங்களாகிய ஷட்ஜமும் பஞ்சமுமாய் விளங்கும்,சூரிய -சந்திரர்களுடன், விக்ருதிகளாகிய ரிஷபம், காந்தாரம், மத்யமம், தைவதம், நிஷாதம் எனும் பஞ்சபூதங்களும் சங்கமிப்பதே ஆத்மநாதோ உபாசனை.''
""கமலேஸ்வரரே! ஸிம்ஹாகர்சிதம் எனும் தாண்டவத்தின் லயமாகிய அவிட்ட நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும், ரேவதி இரண்டாம் பாதத்தில் குருவும், கிருத்திகை நான்காம் பாதத்தில் புதனும், மிருகசீரிடம் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், மிருகசிரீடம் மூன்றாம் பாதத்தில் சூரியனும், திருவாதிரை முதல் பாதத்தில் செவ்வாயும், மகம் முதல் பாதத்தில் சனியும், உத்திரம் முதல் பாதத்தில் சந்திரனும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனை தாங்கள் விளக்கவேண்டும்'' என தகடூர் (தருமபுரி) எனும் திருத்தலத்தில் அருள்புரியும் மல்லிகார்ச்சுனரை அன்னை காமாட்சி வேண்டிப் பணிந் தாள்.
அஷ்டபுரீஸ்வரர் உரைத்தது- ""திரிலோசனியே! இந்த ஜாதகன் முகவூர்ஊரில் பிறந்து நேமிநாதன் என்ற பெயர்பெற்றான். அவன் தந்தையின் காலத்திற்குப் பிறகு, அவன் வாழ்ந்த ஊரின் தலைவனானான்.
இளம்வயதில், தான் கல்வியில் பின்தங்கியதால் அந்த ஊரில் எவரும் கல்வி கற்பதை அவன் விரும்பவில்லை. வேத பாடசாலைகளை அகற்றினான். வேதியர்களை அந்த ஊரிலிருந்து புறந்தள்ளினான். கரையான் புற்றில் பாம்பு குடிபுகுவது போல, நல்லோர் அகன்ற இடத்தில் பொல்லா தவர் குடிபுகுந்தனர். உழவில்லா கழனியில் கள்ளி முளைத்ததாக, அதர்மம் ஆட்சிசெய்ய, தர்மம் விடைபெற்றது. வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழையும், நீதி மன்னர் நெறியினுக்கோர் மழையும், கற்புடைய மங்கையர்க்கோர் மழையும் மாறிப்போனதால் மாரியும் பொய்த்தது. அந்த ஊரின் அதிகார அரியணையில் தவ்வை ஆட்சி செய்தாள். வறுமை வயதைக் கூட்டியதால் நேமிநாதன் இளமையில் முதுமையுற்றான், பாண்டு ரோகத்தால் மாண்டொழிந்தான். மரணத்திற்குப்பின், ஷபூபோதம் என்ற நரகத்தை அடைந்து, அங்கு விஷமுள்ள ஜந்துகளால் பலகாலம் துன்புற்றான். அதன்பின், பிண்ட சரீரத்தில் உயிரினைப் புகுத்திட .பூவுலகம் சென்றான். மறையூர் எனும் ஊரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தான். இளம்வயதில் மின்னலைக்கண்டதால் கண்ணிழந்தான். நான்கு வேதங்களாகிய காம்புகளால் ஞானப் பாலினைப் பரிந்து ஊட்டும் காமதேனுவைப் போன்ற வேதத்தைப் புறந்தள்ளியதால் வாழ் விழந்தான். *வேதத்தை மறைத்ததால் சாபம் பெற்ற சோமுகாசுரன்போல் அல்லலுறுகிறான்.
வேதத்தை விட்ட அறமில்லை. வாதத்தால், வேதத்தைப் பழித்தவன் வேதனையுறுவான். இதற்கு, இந்தப் பிறவியில் பரிகாரம் கிடையாது.
* சோமுகாசுரன் என்னும் குதிரை முகம் கொண்ட அரக்கன், வேதங்களைக் களவாடிக் கடலுக்குள் அவற்றை ஒளித்துவிட்டான்.
அதனால் பெருந்துயருற்று மாண்டான்.
(வளரும்)
செல்: 63819 58636
__________
நாடி ரகசியம்
1. அவிட்ட நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சனியும், புதனும் கூடியிருக்க, ஆயில்யம் மூன்றாம் பாதத்தில் சந்திரனும், அமையும் ஜாதகர் அளவில்லா செல்வம் பெறுôர்.
2. அவிட்ட நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சுக்கிரனும், ஹஸ்தம் மூன்றாம் பாதத்தில் சந்திரனும் அமையப்பெற்று சுபர் பார்வை இல்லாமல்போனால், ஜாதகரின் மனைவி நிரந்தர நோயாளியாவர்..
3. அவிட்ட நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சந்திரனும், ஆயில்யம் இரண்டாம் பாதத்தில் சனியும் செவ்வாயும் கூடியமைந்தால், ஜாதகருக்கு களத்திர நஷ்டமும், ஜாதகிக்கு கருச்சிதைவுகளும் உண்டாகும்.
கேள்வி: ஒருவரின் ஜனன ஜாதகத்தைக்கொண்டு, அவருக்கு ஏற்படப்போகும் நோயை அறியும் முறையைக் "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?
பதில்: உடலில் ஏற்படும் நீரின் குறைபாடே தாகம். சத்துக்குறைபாடே பசி. மனதின் குறைபாடே ஆசை. உடலின் எதிர்ப்புசக்திக் குறைபாடே நோய். அதனாலேயே, குறைபாட்டை விளக்கும் பாவமாக ஆறாம் பாவம் திகழ்கிறது. ஐந்தாம் பாவம் வலுவிழந்து, ஆறாம் பாவம் வலுவடையும் காலத்தில் நோயின் தாக்கத்தை உணர்கிறோம். பொதுவாக மருத்துவத்தில், உடலின் வாத, பித்த, சிலேஷ்மத்தின் அளவு மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் என அறிகிறார்கள். அதேபோல, வாத, பித்த, சிலேஷ்மத்திற்கான கிரகங்களின் வலிமை மிகுந்தாலும், குறைந்தாலும் நோயுண்டாகும். புதனும் குருவும், சனியும்- வாதநாடி, சூரியன், செவ்வாய்- பித்தநாடி, சந்திரன் ,சுக்கிரன்- கபநாடி. பதார்த்தகுண சிந்தாமணி, பஞ்சகோச விவேகம் போன்ற நூல்களில் விளக்கப்படுவதுபோல், சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் தொடர்புண்டு. ஒருவர் நாக்கின் வர்ணத்தைக்கொண்டு நோயைக்கணிப்பதுபோல், சுவையில் ஏற்படும் ஆர்வத்தைக்கொண்டும் நோயை அறியலாம். உதாரணத்திற்கு, சுக்கிரன்- புளிப்புச்சுவைக்குக் காரகன். பாலினக்குறைபாடு ஏற்படும்போது, புளிப்புச்சுவைமீது நாட்டம் அதிகமாகும். ஒரு ஜாதகத்தின் கொடுப்பினை, தசாபுக்தி, கோட்சாரத்தில் உள்ள பாவகிரகத் தொடர்புகளைக்கொண்டு நோய்களை எளிதாக அறியலாம் என்பதே, "கந்தர்வ நாடி'யின் கருத்து.