இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
காற்றடிக்கும் திசையை மாற்ற முடியாததுபோல விதியின் போக்கை மாற்ற முடியாது. விதிக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வது, காற்றடிக்கும் திசையறிந்து கப்பலில் பாய்மரத்தை மாற்றிக்கட்டி காற்றின் சக்தியில் பயணம் செய்வதுபோல, வாழ்க்கைப் பாதையை அறிந்து பரிகாரங்கள்மூலம் குறைகளை சரிசெய்து, வாழ்க்கையை வளம்பெறச் செய்யும் முறைகள் கந்தர்வ நாடியில் கொடுக்கப்படுகின்றன.
""முதலும் முடிவும் இல்லாத- அருவாய், உருவாய் விளங்கும் பெருமானே! ஜீவர்கள், தாங்கள் ச
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
காற்றடிக்கும் திசையை மாற்ற முடியாததுபோல விதியின் போக்கை மாற்ற முடியாது. விதிக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வது, காற்றடிக்கும் திசையறிந்து கப்பலில் பாய்மரத்தை மாற்றிக்கட்டி காற்றின் சக்தியில் பயணம் செய்வதுபோல, வாழ்க்கைப் பாதையை அறிந்து பரிகாரங்கள்மூலம் குறைகளை சரிசெய்து, வாழ்க்கையை வளம்பெறச் செய்யும் முறைகள் கந்தர்வ நாடியில் கொடுக்கப்படுகின்றன.
""முதலும் முடிவும் இல்லாத- அருவாய், உருவாய் விளங்கும் பெருமானே! ஜீவர்கள், தாங்கள் செய்யும் பாவங்களுக்கேற்ப நரக தண்டனையை அனுபவிக்கிறார்கள்.
அங்ஙனம் வருந்திய பிறகாவது மறுபிறவி எடுக்கும்போது திருந்துகிறார்களா?'' என்று அன்னை மீனாட்சி, சுந்தரேஸ்வரரைப் பணிந்து கேட்டாள்.
காலேஷ்வரர் (சிவன்) உரைத்தது- ""கடலில் உள்ள உப்புநீர் ஆவியாகி, மேகங்களால் மழை நீராக மாறி இவ்வுலகிற்குத் திரும்பி வரும்போது தூய்மையானதாகவே வருகிறது.
அதுபோல் ஜீவன் பிறக்கும்போது நிர்குணமாய் பிறந்து, அது விழும் மண்ணுக்கேற்ப மாறுபடுகிறது. இதையே சஞ்சித, பிராரப்த, ஆகாமிய கர்மாக்களின் சூட்சுமமாக உணர வேண்டும்.''
""அழகே வடிவான சோமசுந்தரராகவும், கோர பயங்கர அகோரராகவும் பற்பல உருவங்களில் காட்சிதரும் பெருமானே! "தாளபுஷ்பபுடம்' என்ற தாண்டவத்தின் லயமாக அமைந்த அஸ்வினி முதல் பாதம் லக்னமாக அமைய, அஸ்வினி இரண்டாம் பாதத்தில் சனியும், அஸ்வினி மூன்றாம் பாதத்தில் சூரியனும், அஸ்வினி நான்காம் பாதத்தில் புதனும், பரணி முதல் பாதத்தில் சுக்கிரனும், புனர்பூசம் இரண்டாம் பாதத்தில் சந்திரனும், பூரட்டாதி முதல் பாதத்தில் அங்காரகனும் (செவ்வாய்), உத்திரட்டாதி மூன்றாம் பாதத்தில் குருவும் இருக்கப் பிறந்தவரின் ஜென்மப் பலன்களை விளக்கவேண்டும்'' என்று அன்னை காந்திமதி, நெல்லையப்பரை (சிவன்) வினவினாள்.
யோகேஸ்வரர் (சிவன்) உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில் அனகாபுரி என்ற ஊரில் விஜயன் என்ற பெயருள்ள நாவிதனாக இருந்தான். தன் கடமையைச் சரிவர செய்துவந்தான். கோடையில் நீர்வேட்கையில் அவதியுற்ற யாத்திரிகர்களுக்கு தாகம் தீர்த்தான். முதுமையில் மரணமடைந்து சுவர்க்கம் சென்றான்.
சில காலம் கழித்து ஒரு வைசிய குடும்பத்தில் பிறந்தான். தன் குடும்பத் தொழிலான நவதானிய வியாபாரத்தில் ஈடுபட்ட வேளையில், பேராசையால் தீயவர்களுடன் சேர்ந்து உணவுப்பொருளில் கலப்பட வணிகம் செய்தான். அதனால் அவனை நம்பி தானியம் வாங்கிய பலரும் நோயால் அவதியுற்றனர். நாற்பது வயதில் அந்த வணிகன் வாத நோயால் கை, காலிழந்து அவதியுறுகிறான். இந்த ஜாதகனுக்கு பிராரப்த கர்மாவின் பாதிப்பு இல்லையென்றாலும், இப்பிறவியில் செய்த ஆகாமிய கர்மாவினால் அவதியுறுகிறான். உணவில் கலப்படம் செய்வோருக்குப் பரிகாரம் இல்லை என்பதை ஜீவர்கள் உணரவேண்டும். "சத்சங்கத்வே நித்சங்கத்வம்' என்பதையறிந்து நல்லவர்களுடன் சேர்ந்தால் மட்டுமே ஆகாமிய கர்மாவிலிருந்து விடுபடமுடியும்.''
(வளரும்)
செல்: 63819 58636