இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
ஒரு ராசியை மூன்றாகப் பகுப்பதே திரேக்காணம். இந்த திரேக்காண கணிதத் தைக்கொண்டு, எல்லா பாவங்களின் சூட்சுமப் பலன்களை அறியலாமென்றாலும், ஆறு மற்றும் எட்டாம் பாவம் அமையும் திரேக்காணத்தைக் கண்டறிவது அவசியம்.
திரேக்காணத்தினை சர்ப்ப, பக்க்ஷி, சதுஸ் பாத (விலங்கு), ஆயுதம் என நான்காகப் பிரித்துள்ளனர். ஒரு ஜாதருக்கு அரிஷ்டம் (நோய்), கண்டம் (ஆபத்து) எதனால் ஏற்படு மென்பதை திரேக்காணத்தினைக்கொண்டு அறியலாம் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""தோணியப்பரே! முக்தியை அடையும் உபாயத்தை விளக்கும் சாத்திரங்களைத் தெளிவுறக் கற்றவர்களும் மோட்சப்பதியை அடையாமல்போவதன் காரணத்தைத் தாங்கள் விளக்கியருளவேண்டு கிறேன்'' என அன்னை திருநிலை நாயகி, சட்டைநாதரை நல்லூர்ப்பெருமணம் (சீர்காழி) எனு
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
ஒரு ராசியை மூன்றாகப் பகுப்பதே திரேக்காணம். இந்த திரேக்காண கணிதத் தைக்கொண்டு, எல்லா பாவங்களின் சூட்சுமப் பலன்களை அறியலாமென்றாலும், ஆறு மற்றும் எட்டாம் பாவம் அமையும் திரேக்காணத்தைக் கண்டறிவது அவசியம்.
திரேக்காணத்தினை சர்ப்ப, பக்க்ஷி, சதுஸ் பாத (விலங்கு), ஆயுதம் என நான்காகப் பிரித்துள்ளனர். ஒரு ஜாதருக்கு அரிஷ்டம் (நோய்), கண்டம் (ஆபத்து) எதனால் ஏற்படு மென்பதை திரேக்காணத்தினைக்கொண்டு அறியலாம் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""தோணியப்பரே! முக்தியை அடையும் உபாயத்தை விளக்கும் சாத்திரங்களைத் தெளிவுறக் கற்றவர்களும் மோட்சப்பதியை அடையாமல்போவதன் காரணத்தைத் தாங்கள் விளக்கியருளவேண்டு கிறேன்'' என அன்னை திருநிலை நாயகி, சட்டைநாதரை நல்லூர்ப்பெருமணம் (சீர்காழி) எனும் திருத் தலத்தில் பணிந்துகேட்டாள்.
பிறையணி சடையர் உரைத்தது-""சாத்திரங்கள் ஒருவனை நல்வழிபடுத்தும் உபாயமென்றாலும், அவை தருவது அபர ஞானமே (ஐம்புலன்களால் அறிவது). தோணி கரையை அடைந்தபின்னும் கலத்திலேயே அமர்ந்திருப்பவன் ஊர்சேரமுடியாது. சித்தத் திலுள்ள உலக வாசனை நீங்கினால் மட்டுமே ஆத்ம சொரூபத்தைப் பற்றிய உணர்வு உண்டாகிறது. அதுவே பரஞானம். பற்றியதை விட்டுப் பறக்காத பைங்கிளி வேடன்கையில் அகப்படுதல்போல, வித்யா கர்வத்தால், தான்கற்றதே சதம் (நிரந்தரம்) என்ற மதம்கொண் டோர் பரகதியை அடையமாட்டார்.''
""சங்கரரே! ஜநிதம் எனும் தாண்டவத்தின் லயமாகிய சதய நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும், அஸ்வினி முதல் பாதத்தில் குருவும், திருவாதிரை நான்காம் பாதத்தில் சனியும் சூரியனும் சேர்ந்திருக்க, புனர்பூசம் நான்காம் பாதத்தில் புதனும், பூசம் முதல் பாதத்தில் சுக்கிரனும், சித்திரை முதல் பாதத்தில் சந்திரனும், கேட்டை நான்காம் பாதத்தில் செவ்வாயும் அமரும் அமைப் பைப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என திருநீடூர் ( நாகை) எனும் திருத்தலத்தில் அருள்புரியும் அருள் சோமநாதேசுவரரை அன்னை அபயப்பிரதாம் பிகை வேண்டிப் பணிந்தாள்.
ஐராதேஸ்வரர் உரைத்தது- ""வேதநாயகியே! இந்த ஜாதகன் தென்குடித்திட்டை எனும் ஊரில், வேதியர்குடியில் பிறந்து, ஞானசம்பந்தன் என்ற பெயர் பெற்றான். பெயருக்கேற்றாற் போல, பல சாத்திரங்களைக் கற்றறிந்து பண்டிதனானான்.
தான் வாழ்ந்த ஊரில் குருகுலத்தை நிறுவி, விஷய தானம் செய்து வந்தான். குருகுலத்தில் குற்றேவல் புரிந்திட ஆனந்தன் என்ற ஒரு அநாதைப் பிள்ளையைப் பணித் திருந்தான். கேள்வி ஞானத்தால் அந்தப் பிள்ளை குருவின் உபதேசங் களைக் காற்றின்வழியே கற்றுத் தேர்ந்தான். ஒருநாள் தன் சீடர்களின் அறிவுத்திறனை அறியவேண்டி, தர்க்க சாத்திரத்தில் ஒரு வினா தொடுத்தார். அவருடைய மாணாக் கர்கள் மௌனத்தையே மறுமொழியாக்கினர்.
ஆனந்தன் மட்டும் தக்க பதிலளித்து திகைப்பில் ஆழ்த்தினான். குலமறியாதவன் தன் குரு குலத்தையே நகைப்புக்குள்ளாக்கியதாக எண்ணிய ஞானசம்பந்தன், அன்பையும் அறத்தையும் ஒருசேர துறந்தான். சினத்தில் குணம் மறைந்தது. எட்டுவகைப் பற்றுகளை அறுத்து, தன்னில் தானாக நிறைந் திருப்பவரே குரு என்பதை அறியமறந்தான்.
பிறப்பறியாத அவமானத்தைச் சுமந்தவன் பிரம்படியும் பெற்று, புறம்தள்ளப்பட்டான். ஆனந்தனோடு தர்மமும் வருந்தியது. காலதேவனின் கட்டளை யால் ஞான சம்பந்தனை கதண்டி (விஷவண்டு) கடித்தது. மரணம் எனும் மறுக்கமுடியாத அழைப் பினை ஏற்றான். உயிருக்கு உடல் விடைகொடுத்தது. "கர்தமம்' என்ற நரகத்தில் நெடுங்காலம் துன்புற்றபின், பருவுடல் தாங்கி பூவுலகம் சென்றான். வாலையூர் என்ற ஊரில் பிறந்து தேனப்பன் என்ற பெயர்பெற்றான். இளம்வயதில் நோயால் பாதிக்கப்பட்டு நினைவாற்றலை இழந்து, நடைப் பிணமாக வாழ்கிறான். தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி, பணிவுக்கு மூலம் குருவின் பாதம், துணிவுக்கு மூலம் குருவின் வாக்கியம், வெற்றிக்கு மூலம் குருவின் அருள் என்று குருவைக்கொண்டாடிய ஏகலைவனுக்கு நயவஞ்சகம் காட்டிய *துரோணரைப்போல் அறம் தவறியதால் அவதியுறுகிறான். இதற்கு, இப்பிறவியில் பரிகாரமில்லை.''
* துரோணர் குலபேதத்தால் சீடனாக ஏற்க மறுத்தது மட்டுமல்லாது, அவன் கட்டைவிரலையும் நயவஞ்சகமாகப் பறித்ததால், பாரதப்போரில் வஞ்சகமாகக் கொல்லப்பட்டார். (மகாபாரதம்).
(வளரும்)
செல்: 63819 58636