இதுவரை ஜோதிட உலகிற்கு
அறிமுகமாகாத புதிய தொடர்!
ஒரு ஜாதகத்தில் முதலில் ஆராயவேன்டியது ஆயுள் பாவமே. ஆயுள் பாவத்தை ஆராயாமல் சொல்லும் பலன், போகாத ஊருக்கு வழிசொல் வதுபோல், ஜாதகர் வாழாத நாளுக்குப் பலன் சொல்வது போலாகும். ஆயுள் கணக்கீடு முறையில், பாலாரிஷ்டம் (8 வயதுவரை), யோகாரிஷ்டம் (20 வயதுவரை), அற்பாயுள் (32 வயதுவரை), மத்திம ஆயுள் (70வயதுவரை), பூரண ஆயுள் (70 வயதுக்குமேல்) என வகைப்படுத்திக் கொள்ளவேண்டும். பாலாரிஷ்டம் பெற்றோர் செய்த பாவத்தால் வருவது. மற்றவை, ஜாதகரின் முன்ஜென்ம வினையால் வருவது. ஒவ்வொரு கிரகத்தின் ஆயுட்கலைகள் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஒரு கிரகத்தின் உச்ச பாகையிலிருந்து அந்த கிரகத்தின் ஸ்புடத்தைக் கழிக்கவேண்டும். கழித்து மீதம் வரும் ராசி பாகைக் கலை 6 ராசிக்கு மேற்பட்டிருப்பின், அப்படியே அதைக் கலைகளாக்கிக் கொள்ள வேண்டும். 6 ராசிக்கு உட்பட்டிருப்பின் இந்த மீதத்தைப் பன்னிரண்டு ராசிகளில் கழித்து, மீதம் வருவதைக் கலைகளாக்கிக் கொள்ளவேண்டும். இதுவே அக்கிரகத்தின் ஆயுட்கலை களாகும். பொதுவாக, லக்னத் தைவிட எட்டாம் பாவமும், எட்டாம் பாவாதிபதியும் வலிமை பெற்று மிருத்யு பாகையில் அமர்ந்தால் அற்பாயுள் எனத் தீர்மானிக்கவேண்டும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""வேதஸ்வரூபமே! ஆன்மாவும் உயிரும் ஒன்றென் றெண்ணி எல்லா உயிர்

""வேதஸ்வரூபமே! ஆன்மாவும் உயிரும் ஒன்றென் றெண்ணி எல்லா உயிர்களும் செய்யும் கர்மா ஏன் வேறுபடுகிறது என்பதை, அனல்வாதம், புனல்வாதம் செய்து மாயும் மானுடருக்கு உண்மைப்பொருளைத் தாங்கள் உபதேசித் தருள வேண்டுகிறேன்'' என அன்னை அருந்த வநாயகி வடமூலநாதரை கீழ்பழுவூர் (அரியலூர்) எனும் திருத்தலத்தில் பணிந்துகேட்டாள்.
ஜகதீசர் உரைத்தது- ""பூவில் வாசம்போல், தீயின் ஒளிபோல், விந்துவின் நாதம்போல் ஆத்மா உயிரின் உற்றதோழனாக விளங்குகிறது.
சிஷ்யா பிந்துரூப, புத்ரா நாதரூப- ஒரு குருவுக்கு புத்திரனே சிஷ்யனாக மாறுவது போன்றதே. ஆதவனும், சோமனும், தாரகையும் மாறு பட்டாலும் ஒளி ஒன்றுதான். ஆத்மா ஏகம், உயிர்கள் கோடி. உயிரின் ஒளியே ஆன்மா. உயிர் அக்னி ஸ்வரூபமானது. விளக்கின் அக்னியும் ஈமத்தீயின் அக்னியும் ஒன்றே. செம்புலப்பெய நீர்போல, முக்குண மனதோடு இயங்கும் உயிர் கர்மாவை சுமக்கிறது.''
""கயிலாயபதியே! உருத்வ்ருத்தம் எனும் தாண்டவத்தின் லயமாகிய பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும், உத்திரட்டாதி இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், கிருத் திகை நான்காம் பாதத்தில் சந்திரனும், சித்திரை இரண்டாம் பாதத்தில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்திருக்க, சுவாதி நான்காம் பாதத்தில் புதனும், மூலம் முதல் பாதத்தில் குருவும், உத்திராடம் நான்காம் பாதத்தில் சனியும் அமரும் அமைப்பைப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்''என திருச்சுழி (விருது நகர்) எனும் திருத் தலத்தில் அருள்புரியும் திருமேனி நாதரை அன்னை சகாயவல்லி வேண்டிப் பணிந்தாள்.
கல்யாணசுந்தரர் உரைத்தது- ""பைரவியே! இந்த ஜாதகன் துறையூர் எனும் ஊரில் ஒரு வேதியர் குடும்பத்தில் பிறந்து கோவர்த்தனன் என்ற பெயர்பெற்றான். இளம்வயதில் ஏற்பட்ட கூடாநட்பால் தீய பழக்கங்களில் கட்டுண்டான். இவனுடைய ஒழுக்கக்கேடால் மனம் நொந்த அவன் தந்தை நோயுற்று மண்ணுலகை நீத்தார்.
கோவர்த்தனன் தன் தந்தைக்குச் செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளைச் சரிவர செய்யாத தால், அவன் தந்தை பிரேத சரீரம் பெற்று பசியாலும் தாகத்தாலும் துன்புற்று, முடிவில் புத் எனும் நரகத்தில் வீழ்ந்தார். காலம்செய்த கோலத்தில் கோவர்த்தனனின் இளமை இருண்டது.
வளமை வறண்டது. வறுமையும் நோயும் வளர்ந்தன. உடலை வெறுத்து உயிர் பிரிந்தது.
காத்திருந்த காலனின் ஏவலர்கள் அவன் உயிரை கட்டியிழுத்து எமனூர் சென்றனர். நெடுங்காலம் பரிபாதனம் எனும் நரகத்தில் வதைபட்ட பின், ஊனுடல் தாங்கி பூவுலகம் சென்றான்.
தொண்டி எனும் ஊரில் ஒரு வைசியக்குடும் பத்தில் பிறந்தான். இளம்வயதில் பெற்றோரை இழந்து ஊராரின் கருணை யால் வாழ்ந்தான். வாழ்க்கைத்துணையைத் தேடிப்பெற்றான். நாக்கு வறண்டவனுக்கு நாவல் பழம் கிடைத்ததுபோல், பாசத்திற்கு ஏங்கியவன் புத்திரபாக்கியத்தைப் பெற்றான்.
அவன் அடைந்த இன்பம் நீர்க்குமிழியாய் நெடுநேரம் நிலைக்கவில்லை. கருக்குழியை விட்ட புத்திரன் புதைகுழிக்குப் போனான். சூல்கொண்டமேகத்தை சூறைக்காற்று கலைத்த தாக அவன் கனவுகள் கருவழிந்துபோயின. *தர்ம சாத்திரம் கூறும் நெறிமுறை நின்று, முன்னோர் களுக்கு ஈமச்சடங்குகளைச் செய்திருந்தால் இந்த கதி நேர்ந்திருக்காது. புரட்டாசி மகாளயப் பட்சப் புண்ணிய காலத்தில் மகாபரணி நட்சத் திரத்தில் திருப்புல்லாணி எனும் திருத்தலத் தில் திதிகொடுத்தால், பித்ரு சாபம் நீங்கி, வசு, ருத்ர, ஆதிதியர்களின் ஆசிகளைப் பெறலாம்.''
*தர்மசாத்திரம்: மறைந்த முன்னோர்களுக்கு ஈமச்சடங்குகளைச் செய்யாவிடில், விச்வே தேவர்கள் சாபம் கொடுப்பார்கள். அதனால் மறு பிறவியில் புத்திர பாக்கியத்தில் தடை உண்டாகும்.
செல்: 63819 58636
_____________
நாடி ரகசியம்
1. பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் புதனும், உத்திரட்டாதி மூன்றில் குருவும் அமைந்த ஜாதகருக்கு நீதித்துறையில் வானளாவிய அதிகாரம் கிடைக்கும்.
2. பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சனியும், பூரம் மூன்றாம் பாதத்தில் புதனும் அமைந்த ஜாதகர் அளவற்ற செவத்தையும், செல்வாக்கையும் பெறுவார்.
3. பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் செவ்வாய், சூரியன், சந்திரன் இணைந்து, லக்னமும் திருவோணம் இரண்டாம் பாதத்தில் அமைந்த ஜாதகருக்கு இளம்வயதில் மாரகத்திற்கு ஒப்பான கண்டம் உண்டாகும்.
கேள்வி: ஜோதிடத்தில்‘திக்குகளின்’வலிமையையும் முக்கியத்துவத்தையும் "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?
பதில்: ஜோதிடத்தில் கூறப்படும் ஷட்பலங்களுள் (ஆறுவிதமான பலங்கள்) முதன்மையான திக்பலம் என்பது ஒரு கிரகம் நிற்கும் திசையைக் குறிக்கிறது. லக்ன கேந்திரம் தொடங்கி, கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்னும் வரிசையில் அடங்குவதே கேந்திரஸ்தானம். கேந்திரத்தில் திக்பலத்தினை அடைந்த கிரகம் ஆட்சிவலுவில் நிற்பதற்கு ஒப்பான பலன்களைத் தரும். லக்னத்தில் குரு, புதனும், நான்கில் சந்திரன், சுக்கிரனும், ஏழில் சனியும், பத்தில் சூரியன், செவ்வாயும் திக்பலம் பெறுவார்கள். இதுதவிர, தோஷப் பரிகாரங்களில் அஷ்டதிக் பாலகர்களையும் வழிபட்டபின்தான் பிரதான பூஜையைச் செய்யவேண்டும் என்பதே விதி. யாகங்களில் அஷ்டதிக் பாலகர்களை வணங்கியபின்னரே யாகத்தைத் தொடங்குவதே மரபு. இன்ப வாழ்வைத் தரும் இந்திரன் (கிழக்கு), தேகபலம், மன அமைதி தரும் அக்னி (தென்கிழக்கு), ஆபத்துகளை நீக்கி நல்வழியருளும் எமன் (தெற்கு திசை), மழை கொடுத்து உணவுப்பஞ்சம் நீக்கும் வருணன் (மேற்கு), எதிரிகளின் பயம் நீக்கி வீரம் தரும் நிருதி (தென்மேற்கு), சகலசெல்வங்களுடன் சுகவாழ்வு தரும் குபேரன் (வடக்கு), ஆன்மிக ஞானத்தைத் தரும் ஈசானன் (வடகிழக்கு) ஆகிய அஷ்டதிக் பாலகர்களைப் பரிகாரத்திற்கேற்ப வழிபட்டுப் பலன்பெறலாம் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.