லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஒரு ஜாதகத்தில் சுகஸ்தான திபதியும் (நான்காம் பாவாதிபதி) லக்னாதிபதியும் வலிமையிழந்து, ரோக ஸ்தான திபதி (ஆறாம் பாவாதிபதி) வலிமை பெற்றால், அந்த ஜாதகருக்கு ஆரோக்கியக்குறைபாடுகள் ஏற்படக்கூடும். ஆறு மற்றும் எட்டுக்குரிய கிரகங்களின் தசாபுக்திக் காலங்களில் நோய் ஏற்படும். மகர லக்னக்காரர்களுக்கு நான்காம் பாவா திபதியாகிய செவ்வாயே லக்ன பாதகாதிபதியாகவும் அமைவ தால், செவ்வாய் தசாபுக்திக் காலங்களில், ஜாதகருக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""பிந்துநாதஸ்வரூபமே! ஜனனமும் மரணமும் இயற்கையானது என்பதையறியாது பிறப்பதை இன்பமாகவும், இறப்பைத் துன்பமாகவும் எண்ணி, சிருஷ்டியின் ரகசியத்தையறியாது மயக்க முறும் மானுடர் நல்லறிவுபெற தாங்கள் உபதேசித்தருள வேண்டுகிறேன்'' என அன்னை தர்மசம் வர்த்தினி அரிபிரசாதீஸ்வரரை கரிவேடு (வேலூர்) எனும் திருத் தலத்தில் பணிந்துகேட்டாள்.
பிரணவலிங்கேஸ்வரர் உரைத்தது-""மண்ணை உண்டு தானியம் வளர்ந்தது. தானியத்தை உண்டு பறவைத் தன்னுயிரைக் காத்துக்கொண்டது. பறவையை உண்டு வேடன் மகிழ்ந்தான். முடிவில் வேடனை உண்டு மண் தன் பசியைத் தீர்த்துக்கொண்டது. மண்ணில் மலர்வது, மண்ணில் மறைவதே இயற்கை. ஜனனமு
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஒரு ஜாதகத்தில் சுகஸ்தான திபதியும் (நான்காம் பாவாதிபதி) லக்னாதிபதியும் வலிமையிழந்து, ரோக ஸ்தான திபதி (ஆறாம் பாவாதிபதி) வலிமை பெற்றால், அந்த ஜாதகருக்கு ஆரோக்கியக்குறைபாடுகள் ஏற்படக்கூடும். ஆறு மற்றும் எட்டுக்குரிய கிரகங்களின் தசாபுக்திக் காலங்களில் நோய் ஏற்படும். மகர லக்னக்காரர்களுக்கு நான்காம் பாவா திபதியாகிய செவ்வாயே லக்ன பாதகாதிபதியாகவும் அமைவ தால், செவ்வாய் தசாபுக்திக் காலங்களில், ஜாதகருக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""பிந்துநாதஸ்வரூபமே! ஜனனமும் மரணமும் இயற்கையானது என்பதையறியாது பிறப்பதை இன்பமாகவும், இறப்பைத் துன்பமாகவும் எண்ணி, சிருஷ்டியின் ரகசியத்தையறியாது மயக்க முறும் மானுடர் நல்லறிவுபெற தாங்கள் உபதேசித்தருள வேண்டுகிறேன்'' என அன்னை தர்மசம் வர்த்தினி அரிபிரசாதீஸ்வரரை கரிவேடு (வேலூர்) எனும் திருத் தலத்தில் பணிந்துகேட்டாள்.
பிரணவலிங்கேஸ்வரர் உரைத்தது-""மண்ணை உண்டு தானியம் வளர்ந்தது. தானியத்தை உண்டு பறவைத் தன்னுயிரைக் காத்துக்கொண்டது. பறவையை உண்டு வேடன் மகிழ்ந்தான். முடிவில் வேடனை உண்டு மண் தன் பசியைத் தீர்த்துக்கொண்டது. மண்ணில் மலர்வது, மண்ணில் மறைவதே இயற்கை. ஜனனமும் மரணமும் காலச்சுழற்சி. திட்டுக் களை உருவாக்கும் காலவெள்ளம், அந்த மண் குதிரை கரைத்து உருத்தெரியாமலாக்கும். இதைப் படைத்தலென்றும், அழித்த லென்றும் எண்ணுதல் அறிவுடமையாகாது. கலாப மயில் தன் தோகையை விரிப்பதும், தன்னுள் ஒடுக்கிக்கொள்வதும் போன்றதே பிரும்மத்தின் சிருஷ்டியும் நித்தியப் பிரளயமும். பூவுலகிற்கு வந்தவழியை அறியாதவன், போகும்வழியை எண்ணிப் புலம்புதல் பேதமையன்றோ? தனக்கு உயிர் மூச்சைத்தந்து, மண்ணுலகில் காற்றுவெளியை யும் படைத்தது யாரென்று வினவினால் மட்டுமே பிறப்பின் சூட்சுமத்தை உணர்வான்.'' ""திருக்கண்டீஸ்வரரே! ஏலகாக்ரீடிதம் எனும் தாண்டவத்தின் லயமாகிய சதய நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், அஸ்வினி முதல் பாதத்தில் சனியும், மகம் நான்காம் பாதத்தில் சுக்கிரனும், பூரம் மூன்றாம் பாதத்தில் புதனும், உத்திரம் இரண்டாம் பாதத்தில் சூரியனும், சித்திரை இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், கேட்டை இரண்டாம் பாதத்தில் குருவும், உத்திராடம் நான்காம் பாதத்தில் சந்திரனும் அமரும் அமைப்பைப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்''என மோகனூர் (நாமக்கல்) எனும் திருத்தலத்தில் அருள்புரியும் பஞ்சலிங்கேஸ்வரரை அன்னை விசாலாட்சி வேண்டிப்பணிந்தாள்.
சோமநாதேஸ்வரர் உரைத்தது- ""நீல மேனியளே! இந்த ஜாதகி வானூர் எனும் ஊரில் ஒரு பெருநிலக்கிழார் குடும்பத்தில் பிறந்து யாமினி என்ற பெயர் பெற்றாள். நன்செய் நிலத்தில் நச்சுப்பயிர் வளர்ந்ததுபோல், தீயகுணங்கள் குடிகொண்டன. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கு குணங்களும் அவளிடம் நாணித் தலைகுனிந்தன. செல்வத் தால் செருக்கு வந்தது. அழகால் அடக்கம் போனது. உரிய பருவத்தில் மலர்ந்து மணமாலை சுமந்தாள். வண்டி எருது வயலுக்கு உதவாத தாக, அடக்கமின்மையால் இல்வாழ்வை இழந்தாள். பின்னிரவில் பூத்து, விடியலில் உதிர்ந்திடும் சேடல் மலர் (பவழமல்லி)போல, அவள் வாழ்க்கை இரவில் மலர்ந்து பகலில் இருண்டது. தன் மனம் போன போக்கில் வாழத் தொடங்கினாள். கணவனைப் பிரிந்த யாமினி, காமம் மிகுந்த காமினியானாள். சேற்றைப் பூசிக்கொண்டவள் ஆற்றைக் கெடுத்ததுபோல், தானும் கெட்டு பல குடும்பங்களையும் கெடுத்தாள். தீரா நோயுற்றாள். முடிவில் மரணத்தை மணந்தாள். லாலாபக்ஷம் என்ற நரகத்தில் பலகாலம் துயறுற்றபின், புது உடல் பெற்று பூவுலகில் வீழ்ந்தாள். செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்து நர்மதா என்ற பெயர் பெற்றாள். பருவமடைந்து மணநாளை வரவேற்கக் காத்திருந்தாள். ஒவ்வொரு முறையும் மணநாள் உறுதியானபோதே, மணமகனின் வாழ்க்கை இறுதியானது. நதியின் பெயரால் பிறந்தவளின் வாழ்வில் விதி சதிசெய்ததால், பதி கிடைத்து, சதியாகும் (மனைவி)ஆசை நிறைவேறாமல் துன்புறு கிறாள். * திவ்யதேவியைப்போல், முற்பிறவியில் கற்பு தவறியதால் அவதியுறுகிறாள். மார்க்க சீரிஷ மாதத்தில் (மார்கழி) பாவை நோண் பிருந்தால் தீவினை அகலும்.''
*திவ்யதேவி (சித்திரசேனன் என்ற மன்னனின் மகள்) முன்ஜென்மத்தில் கணவனை மதிக்காமல் பிரிந்து, மனம் போனபடி வாழ்ந்தது மட்டு மல்லாமல், அநேகக் குடும்பங்களைப் பிரித்த தால், அடுத்த பிறப்பில் இருபத்தோரு முறை திருமண ஏற்பாடுகளில் தடை ஏற்பட்டது.
(பத்ம புராணம்)
செல்: 63819 58636
__________
நாடி ரகசியம்
1. சதய நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சுக்கிரனும் புதனும் சேர்ந்து அமைந்தால், ஜாதகருக்கு அதிகாரப் பதவி வாய்க்கும்.
2. சதய நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் புதன், சூரியன், சந்திரன் இணைந்தால், ஜாதகருக்கு தனநாசம் உண்டகும்.
3. சதய நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சந்திரனும், உத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சூரியனும் செவ்வாயும் அமைந்தால், நித்ய கண்டம் பூரண ஆயுள். அடிக்கடி ஆபத்து ஏற்பட்டாலும், ஆயுள் அதிகம்.
கேள்வி : ராசிச் சக்கரத்தில் சனி கிரகத்தின் ஆட்சி வீடுகள் மட்டும் அடுத்தடுத்த வீடுகளாக அமையும் காரணத்தை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா? பதில்: ராசிச் சக்கரத்தில் கடத்திலிருந்து (சந்திர கலை) புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி கிரகங்கள் ஆட்சி வீடுகளைப் பெறுவதுபோல், சிம்மத்திலிருந்தும் (சூரிய கலை) அதே வரிசைக்கிரமமாக அமையும்போது, சனி பகவானின் ஆட்சிவீடே இறுதியில் வருவதைக் காணலாம். சனி பகவானின் ஆட்சிவீடே துத்துவாதிசயமாக அமைகிறது. மகரம் எனும் இரவு வீடு, கும்பமெனும் பகல் வீட்டிற்கு விரய ஸ்தானமாகிறது. இதன் பொருள், சனி பகவானே ஆக்கவும் அழிக்கவும் வல்லான் என்பதே. "கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை' என்பதற்கிணங்க, கருமேகத்தின் காரகனாகவும் விளங்குவது சனி பகவானே. தண்டனை மற்றும் அழிவு ஸ்தான மாகிய மகரமும், புனராவர்த்த (மறுவாழ்வு) ஸ்தானமாகிய கும்பமும் அவருடைய ஆட்சி வீடுகளே. எட்டு என்ற எண்ணில் சுட்டிக் காட்டப்படும் இருவேறுலகிற்கும் வழிவகைசெய்யும் கலிபுருஷனும் அவரேயாகும். இவ்வுலகில் பொருளும், மேலுலகில் அருளும் கிடைக்க அவரருள் தேவை என்பதாலும், அவரால் ஏற்படும் தோஷத்தை அவர் மட்டுமே மாற்றியமைக்கமுடியுமென்பதாலுமே, அவருடைய ஆட்சி வீடுகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.