ஜாதகத்தில், ஒரு பாவகிரக நவாம்சம் எந்த ராசியில் அமைகிறதோ, அதன் காரகப் பலனையே பிரதிபலிக்கும். உதாரணத்திற்கு, களத்திர ஸ்தானமாகிய ஏழாம் பாவமோ, ஏழாம் பாவாதிபதியோ, நவாம்ச சக்கரத்தில் கன்னி ராசியில் அமர்ந்தால், களத்திர சுகம் கெடும். கன்னி ராசி காலபுருஷ லக்னத்திற்கு ஆறாமிடமாக அமைவதால், அந்த ஜாதகருக்குத் திருமணத்தில், தடை, தாமதம், திருமணவாழ்வில் திருப்தியில்லாத நிலை ஏற்படும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

""பிறைசூடரே! ஆன்ம விசாரத்தில் பிரும் மச்சரிய நெறிநின்று யோக சாதனை புரிவதைவிட, இல்லறத்தாரின் பக்தியே சிறந்ததாகக் கருதப் படுவதன் காரணத்தை விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை சுந்தரநாயகி, அக்னீஸ்வரரை நல்லாடை ( நாகை) எனும் திருத்தலத்தில் பணிந்துகேட்டாள்.

gg

Advertisment

வில்வவனநாதர் உரைத்தது- ""யோகம், சாங்கியம், தர்மானுஷ்டானம், வேதாத்யயனம் ஆகியவை இல்லறத் தாரின் பக்தி யோகத்திற்கு ஈடானதல்ல. பிரும்மச்சரியம் கரையில் கட்டப்பட்ட ஓடம்போல் பாதுகாப் பானது என்றாலும், கடலில் பயணிக் காத ஓடம் சிறப்பற்றது. மலரின் இதழ்கள் கனியாவதில்லை யென்றாலும், இதழ்களில்லா மலரை அனுபவ வண்டுகள் நாடுவதில்லை. காய் கனியும்வரை தோல் அவசியமா கிறது. இருப்பதைத் துறப்பதே துறவு.

அதுவே வைராக்கியம். இல்லறத்தில் கட்டுண்டவருக்கே சரணாகதி தத்துவத்தின் அனுபவம் வாய்க்கும். அனுபவமே தெய்வ சங்கமம்.''

""வடமூல நாதரே! உபஸ்ருதம் எனும் தாண்ட வத்தின் லயமாகிய அவிட்ட நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், சதயம் முதல் பாதத்தில் புதனும், அப பரணி முதல் பாதத்தில் குருவும், புனர் பூசம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், உத்திரம் மூன்றாம் பாதத் தில் சனியும் சந்திரனும் சேர்ந்திருக்க, அவிட்டம் முதல் பாதத்தில் சுக்கிரனும் சூரியனும் சேர்ந்திருக்கும் அமைப்பைப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனை தாங்கள் விளக்கவேண்டும்'' என பொன்விளைந்தகளத்தூர் (காஞ்சி) எனும் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீ முன்குடுமீஸ்வரரை அன்னை காமாட்சி வேண்டிப் பணிந்தாள்.

Advertisment

வேதகிரீஸ்வரர் உரைத்தது-"" பார்கவியே! இந்த ஜாதகன் வேதாரண்யம் என்ற ஊரில் பிறந்து, ஜீவானந்தன் என்ற பெயர் பெற்றான்.

அவள் இளம்வயதிலேயே மந்திரப் பிரயோகம் செய்து, கர்ம சித்திகள் கைவரப் பெற்றான்.

அவன் வாழ்ந்த ஊரின் மக்கள் அவனைப் போற்றிப் புகழ்ந்தனர். ஜீவானந்தன் தன்னிலை மறந்து, அகம்பாவத்தின் தத்துப் பிள்ளையானான். அவன் மனம்போனவழியில் வாழத்தொடங்கினான். தன்னை எதிர்த்தவர்களைத் தன் மந்திர வலிமையால் நாசம் செய்தான். பன்னிரண்டு ஆண்டுக்காலம் அவனுக்கு சேவைசெய்த தேவதைகள் விடைபெற்றன. தர்மதேவதை தன் பணியைத் தொடங்கினாள்.

தீராத நோயுற்றான். ஆணவக் காற்றில் அறுந்த இலையாய் ஓசை நின்றது, உயிரும் பிரிந்தது. ஓட்டை உடலை ஒய்யாரமாய் அலங்கரித்து, ஊருக்காக ஓலமிட்ட உறவும் பிரிந்தனர். தெரியெட்டு நிலையின் தரிசனம் காணாத புரியட்ட காயம் புகுந்தது பிணக்குழியில். நெடுங்காலம் மயாக்ர கச்சம் எனும் நரகத்தில் அவதியுற்றபின், எலும்பைப் போர்த்திய தோல் கூடாரத்தைத் தேகமாகக்கொண்டு பூவுலகம் சென்றான். வேள்விக்குடி என்ற ஊரில் பிறந்து விவேகன் என்ற பெயர் பெற்றான். இளம்வயதுமுதலே பல நோய்களால் அவதியுறுகிறான். நோய் தீர்க்கும் கற்பம் கிடைக்காமல் அலைகிறான்.

*சுகப்பிரும்ம மகரிஷிபோல் தற்பெருமை பேசி, தன்னிலை இழந்ததால் அவதியுறு கிறான். இந்த தோஷத்திற்குப் பரிகாரமாக, யாது தான (நிருதி) தேவதையை மோஷீணபரா என்ற மந்திரத்தால் ஷோடசோபசார பூஜைசெய்து வழிபடவேண்டும்''.

* சுகப்பிரும்ம மகரிஷி: சுகர் தற்பெருமையால் தனது ஞானம் அனைத்தையும் இழந்தார். ஜனகரிடம் உபதேசம் பெற்றபின், தன்னிலை உணர்ந்தார். (மகோபநிடதம்).

(வளரும்)

செல்: 63819 58636