இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
81
லால்குடி கோபாலகிருஷ்ணன்
திருமணப் பொருத்தம் பார்க்கும்போது நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால், மணமக்களின் நவாம்சப் பொருத்தமே திருமண வாழ்வை நிர்ணயிக்கும். மணமகளின் நவாம்ச சந்திரனிலிருந்து மணமகனின் நவாம்ச சந்திரன் 88 நவாம்சத்தில் இருந்தால், அது திருமண வாழ்க்கையில் தீமையைத் தரும், (88-ஆவது நவாம்சம் காரக நட்சத்திரத்தில் விழும்). உதாரணத்திற்கு, மணமகளின் நட்சத்திரம் அஸ்வினி முதல் பாதம்; மணமகனின் நட்சத்திரம் திருவோணம் நான்காம் பாதம். பொதுவாக, அஸ்வினி நட்சத்திரத்திற்கும் திருவோண நட்சத்திரத்திற்கும் தினம், கணம், மாகேந்திரம், ஸ்த்ரீ தீர்க்கம், யோனி, ராசி, ராசியதிபதி, ரஜ்ஜு, வேதை, நாடி ஆகிய முக்கியமான பத்துப் பொருத்தங்கள் இருந்தாலும், திருவோணம் நான்காம் பாதம் நவாம்சத்தில் அஸ்வினி முதல் பாதத்திற்கு 88-ஆவது நவாம்சத்தில் அமைவதால் கெடுபலன்களே உண்டாகும். மணமகனின் நவாம்ச சந்திரனிலிருந்து மணமகளின் நவாம்ச சந்திரன் 108-ஆவதாக வந்தாலும் விலக்கப்படவேண்டும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""கங்காதரரே! யோகி,

""கங்காதரரே! யோகி, ஆறு ஆதாரங்களைக் கடந்து, ஏழாவது நிலையாகிய சஹஸ்ராரத்தை அடையும்போது பிரம்மத்தோடு லயிக்கிறான். என்றாலும், சாதகன் எந்த நிலையில் பிரம்மத்தை உணர்ந்து பேரின்பம் கொள்கிறான் என்பதைத் தாங்கள் விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை உமாபரமேசுவரி "திருநெய்ப்பேறு' எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு வன்மீகநாதரைப் பணிந்து கேட்டாள்.
வாலீஸ்வரர் உரைத்தது- ""சூட்சும உடலில் தாமரை போன்ற இதயக் கமலம் எனும் மாளிகை உள்ளது.
அதனுள் தமர் எனும் அகவெளி உண்டு. அதை தகாரம், உகாரம், ரேபம், ககாரம், அகாரம் என்ற ஐந்து வித்தை களால் (காயத்ரி) கண் அகத்தே நின்று காதலித்தாலே பேரின்பம் தோன்றுமே. வானுலகும் பூவுலகும் அதிலடங்கும். அக்னி, வாயு, சந்திரன், சூரியன், மின்னல், விண்மீன்கள் போன்ற சகல வஸ்துகளும் அதில் ஒடுங்கும். சாதகர், சப்த பிரும்மத்தின் நாதமான அனாஹதத் தில் பிரம்மத்தை உணர்வார்.''
""வேங்கீஸ்வரரே! "கஜக்ரீடிதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய விசாக நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், அஸ்வினி இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், கார்த்திகை முதல் பாதத்தில் சனியும், திருவாதிரை இரண்டாம் பாதத்தில் சந்திரனும், பூசம் நான்காம் பாதத்தில் சூரியனும் புதனும் சேர்ந் திருக்க, மகம் முதல் பாதத்தில் சுக்கிரனும், உத்திரம் முதல் பாதத்தில் குருவும் அமரும் அமைப்பைப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று காலேசுவரம் எனும் திருத்தலத்தில் அருள் புரியும் ஸ்ரீமுக்தேஸ்வரரை அன்னை சுபானந்ததேவி வேண்டிப் பணிந்தாள்.
மல்லிகார்ஜுனர் உரைத்தது- ""நிரந்தரியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் திருவேட்டை எனும் பெயருடன், தொழுதூர் என்ற ஊரில் வாழந்துவந்தான். அவன் கல்வியில் தேர்ச்சிபெறாததால், களவுத்தொழிலில் களம் கண்டான். பல ஊர்களுக்கும் சென்று ஆநிரை களைக் (பசுக்கள்) கவர்ந்தான். திருவேட்டை, அறம்மீறிய வேட் டையால் செல்வந்தனானான்.
பிறர் பொருள் கவர்ந்த பாவத் திற்கும், ஊராரின் சாபத்திற்கும் ஆளானான். முதுமையில் மூன்றாம் காலாய் ஊன்று கோல் பிடித்து, நோயால் துவண்டு, நால்வர் சுமக்க, மரணத்தின் வாயிலை அடைந் தான். வெந்து தணிந்தது உடல். நொந்து எமலோகம் சென்றது அவன் உயிர். "கிருமி போஜனம்' எனும் நரகத்தில் துன்புற்றபின், செய்த பாவத்தை நேர்செய்ய பூவுலகம் வந்தான். தேரெழுந்தார் என்ற ஊரில் பிறந்து, இளமையில் சூளை நோயால் அவதிப்படு கிறான். முற்பிறவியில் செய்த தவறால் இந்தப் பிறவியில் நோயுற்று வருந்துகிறான்.
* பீஷ்மர்போல் முன்ஜென்ம வினைப் பயனால் தாழ்வுற்றான். ஆனி மாதம் வளர் பிறையில் கோபத்ம விரதம் அனுசரிக்கப் படும் நாளில், கோபூஜை நடத்தி, குலகுருவுக்கு சொர்ணத்தாலான பசுவின் பிரதிமனை தானம் தந்தால் நோய் நீங்கி சுகம் பெறலாம்.
* பீஷ்மர்- தேவலோகத்தில் அஷ்ட வசுக்களில் ஒருவராயிருந்தவர். வசிட்டரின் நந்தினிப் பசுவைக் களவாடிப் பெற்ற சாபத்தால் மண்ணுலகில் துன்புற்றவர். v -மகாபாரதம்.
(வளரும்)
செல்: 63819 58636
நாடி ரகசியம்
1. விசாக நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சுக்கிரனும், பூரம் நான்காம் பாதத்தில் சந்திரனும் அமையும் ஜாதகர் எழுத்தாற்றலால் புகழ்பெறுவார்.
2. விசாக நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் பௌர்ணமிச் சந்திரனும் லக்னமும் அமைந்த ஜாதகர், 22 வயதிற்குப்பிறகு திரண்ட செல்வமும், அகண்ட சாம்ராஜ்ஜியமும் பெறுவார்.
3. விசாக நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சூரியனும் லக்னமும், கார்த்திகை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் செவ்வாயும் அமையும் ஜாதகருக்கு இதயத்தில் பழுதுண்டாகும்.
கேள்வி: உலகில் சிலர் மட்டும் ஜனவசியத்தால் காந்தம்போல் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் ஆற்றல் பெற்றிருக்கும் காரணத்தை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?
பதில்: பாலின வேறுபாடு மட்டுமே சிருஷ்டியை உருவாக்கும். சிருஷ்டியே வெற்றி. பெண் தன்மையுடைய ஆண்களும், ஆண் தன்மையுடைய பெண்களுமே ஜனவசியத்தால் வெற்றிபெறுவார்கள். அர்த்தநாரியின் (பாதியுடல் பெண் வடிவான சிவன்) ஸ்வரூப தத்துவமும் அதுவே. எதிர்பாராத விளைவுகளுக்குக் காரகர்களாகக் கருதப்படுபவர்கள் சனியும் செவ்வாயும். ஆண் கிரகமாகிய செவ்வாய் பெண் ராசியாகிய மகரத்திலும், பெண் கிரகமாகிய சனி ஆண் ராசியாகிய துலாத்திலும் உச்சமடைவதைக் கருத்தில் கொள்ளவேண்டும். ஆண் தெய்வங்களை பிரேமித்த பெண்களும் (ஆண்டாள், ஔவையார்.) பெண் தெய்வங்களுக்கு அடிபணிந்த ஆண்களும் (காளிதாசர், அபிராமிபட்டர்) நீங்காப் புகழ்பெற்றனர் என்பதே உண்மை. பெண் கல்லில் அமைந்த ஆண் தெய்வ சிலா ரூபங்களுக்கு ஜனவசியம் அதிகம் என்பதே ரகசியம். (திருமலையப்பன்). பெண் ராசியில் அமையும் பெண் நட்சத்திரங்களில் பிறக்கும் ஆண்களும், ஆண் ராசியில் அமையும் ஆண் நட்சத்திரங்களில் பிறக்கும் பெண்களுமே மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.