Advertisment

கந்தர்வ நாடி! 62

/idhalgal/balajothidam/gandharva-nadhi-62

இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

62

லால்குடி கோபாலகிருஷ்ணன்

ssரு ஜாதகத்தில் பலவித சுப மற்றும் அசுப யோகங்கள் இருந்தாலும், அவற்றில் முதன்மையாக ஆராயப்பட வேண்டியது குருவுக்கும், சூரியனுக்கும் உள்ள தொடர்பே யாகும். பொதுவாக, குருவின் ஆட்சி வீடுகளில் சூரியன் சஞ்சரிக்கும் மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் சுபகாரியங்கள் விலக்கப்படுகின்றன. அதேபோல் சூரியனு டைய வீடாகிய சிம்மத்தில் குரு சஞ்சரிக்கும் மகாமக வருடத்திலும், விந்தியமலைக்குத் தெற்கேயுள்ள பிரதேசங்களில் சுபகாரி யங்கள் தவிர்க்கப்படுகின்றன. தன் ஆட்சி வீட்டில் தன்னுடைய நட்சத் திர பாதத்தைக்கொண்ட இரண்டு கிரகங்கள் குருவும் சூரியனும் ஆகும். அதனா லேயே சிம்ம ராசியில் அமையும் சூரியனின் உத்திர நட்சத்திரத்து முதல் பாதமும், மீன ராசியில் அமையும் குருவின் பூரட்டாதி நட்சத்திரத்து நான்காம் பாதமும் முக்கியத்துவம் பெறுகின்றன. உத்திர நட்சத்திரத்து முதல் பாதத்தில் குரு இருந்தாலும், பூரட்டாதி நட்சத்திரத்து நான்காம் பாதத்தில் சூரியன் இருந்தலும் சுப பலன்களைத் தருவதில்லை என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று ""சதாசிவமே! சதா மௌனத்தில் மூழ்கி பரமானந் தத்தில் திளைக்கும் ஞானகுருவாகிய தாங்கள், தியானம் செய்யும் முறைதனை அறிவில்எளியோரும் அறியும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டுகிறேன்'' என அன்னை திரிபுரசுந்தரி, திருவிற்கோலம் எனும் திருத்தல

இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

62

லால்குடி கோபாலகிருஷ்ணன்

ssரு ஜாதகத்தில் பலவித சுப மற்றும் அசுப யோகங்கள் இருந்தாலும், அவற்றில் முதன்மையாக ஆராயப்பட வேண்டியது குருவுக்கும், சூரியனுக்கும் உள்ள தொடர்பே யாகும். பொதுவாக, குருவின் ஆட்சி வீடுகளில் சூரியன் சஞ்சரிக்கும் மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் சுபகாரியங்கள் விலக்கப்படுகின்றன. அதேபோல் சூரியனு டைய வீடாகிய சிம்மத்தில் குரு சஞ்சரிக்கும் மகாமக வருடத்திலும், விந்தியமலைக்குத் தெற்கேயுள்ள பிரதேசங்களில் சுபகாரி யங்கள் தவிர்க்கப்படுகின்றன. தன் ஆட்சி வீட்டில் தன்னுடைய நட்சத் திர பாதத்தைக்கொண்ட இரண்டு கிரகங்கள் குருவும் சூரியனும் ஆகும். அதனா லேயே சிம்ம ராசியில் அமையும் சூரியனின் உத்திர நட்சத்திரத்து முதல் பாதமும், மீன ராசியில் அமையும் குருவின் பூரட்டாதி நட்சத்திரத்து நான்காம் பாதமும் முக்கியத்துவம் பெறுகின்றன. உத்திர நட்சத்திரத்து முதல் பாதத்தில் குரு இருந்தாலும், பூரட்டாதி நட்சத்திரத்து நான்காம் பாதத்தில் சூரியன் இருந்தலும் சுப பலன்களைத் தருவதில்லை என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று ""சதாசிவமே! சதா மௌனத்தில் மூழ்கி பரமானந் தத்தில் திளைக்கும் ஞானகுருவாகிய தாங்கள், தியானம் செய்யும் முறைதனை அறிவில்எளியோரும் அறியும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டுகிறேன்'' என அன்னை திரிபுரசுந்தரி, திருவிற்கோலம் எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு தீண்டாத் திருமேனிநாதரைப் பணிந்துகேட்டாள்.

Advertisment

மௌன குரு உரைத்தது- ""தியானத்தை எவராலும் செய்ய இயலாது. எதுவும்செய்யாமலிருப்பதே தியானம். எவராலும் எதையும் செய்யாமல் ஒரு கணமும் இருக்கமுடியாது. ஜனனம், மரணம், உறக்கம், விழிப்பு, பசி, தாகம்போல் தியானமும் ஒரு நிகழ்வு. தியானம் என்பது இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய மூன்றையும் கடந்த நான்காவது காலம். ஓடி ஒடுங்குதல் நீரின் அழகு; ஆடி அடங்குதல் தியானத்தின் சிறப்பு.

ஓடும் மனதை ஓடாது நிறுத்தும் அசைவறு நிலையே ஆனந்தம். சும்மா இருத்தலே சுகம். ஓய்வில் ஓய்வில்லாது ஓடையில் கல்லெறிந்தார், நினை வலையால் சலனமுற்று தன் முகம் காணமாட்டார்.

மனமெனும் மதயானைதனை அடக்கியோரே மாவீரராவார். முந்தி உடல் ஒடுக்கி கருக்குழியில் தவமிருந்தோருக்கு, எருக்குழி அடைத்தல் ஆகாதோ. தன்னையறிவதே தியானம். தன்னையறி யாதவன், தன்னைப் பிறருக்கு அறிவிக்க இயலாது.

Advertisment

அனைத்தும் தனக்குத் தெரியும் என்பது தெரிந்தும், தெளியாதவனே தியானத்திற்கு ஏற்றவன்.''

""அநந்தரே! "லலாட திலகம்' எனும் தாண்ட வத்தின் லயமாகிய உத்திர நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், விசாகம் முதல் பாதத்தில் குருவும், அனுஷம் முதல் பாதத்தில் செவ்வாயும், திருவோணம் நான்காம் பாதத்தில் சனியும், அவிட்டம் முதல் பாதத்தில் சூரியனும், சதயம் மூன்றாம் பாதத்தில் புதனும், சதயம் நான் காம் பாதத்தில் சுக்கிரனும், அஸ்வினிஇரண்டாம் பாதத்தில் சந்திரனும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று திருவாலங்காடு திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீஊர்த்துவ தாண்டவரை அன்னை வண்டார்குழலி வினவினாள்.

ஞானகுரு உரைத்தது- ""காலபைரவியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் சுயோதனன் எனும் பெயருடன், பஞ்சமுகி என்ற ஊரில் வாழ்ந்து வந்தான். இளம்வயதில் தந்தையை இழந்ததால் தன் மூத்த சகோதரரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தான். திருமணத்திற்குப் பிறகு மனம் மாறினான். மனைவியின் துர்போதனையால் தந்தைவழி சொத்தைத் தானே முழுவதுமாக அபகரிக்கும் எண்ணம் கொண்டான். தீயோர் துணைகொண்டு தன் மூத்த சகோதரரை நயவஞ்சகமாகக் கொலை செய்தான். பிணம் உண்ணும் நரிபோல, அபகரித்த சொத்தை ஆண்டு முதுமையால் மாண்டான். ஆயிரம் வேலி நிலத்தின் சொந்தக்காரன் ஆறடி நிலத்தில் அடக்கமானான்.

அவனை வரவேற்று நரகத்தின் கதவுகள் திறந்தன. நரக தண்டனை முடிந்ததும் பூவுலகிற்கு உந்தித் தள்ளப்பட்டான்.

சங்ககிரி எனும் ஊரில், ஒரு நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தான்.

காலம் அவன் வாழ்க்கைக் கோலத்தை வடிவமைத்தது. வாலிபமும், வளமான வாழ்க்கையும், பருவ காலத்தே நடந்த திருமணமும் அவனை சந்தோஷத்தின் உச்சத் திற்கே கொண்டு சென்றன. முன்ஜென்ம வினைப் பயனால் தீய ஒழுக்கமுள்ள புத்திரருக்குத் தந்தையானான். பூவை அணைத்தவனை பூநாகம் தீண்டியதுபோல், பாசமுடன் வளர்த்த புத்திரர்கள் பகையானார்கள். அவன் சொத்து புத்திரரால் அபகரிக்கப்பட்டது.தனிமைப் படுத்தப்பட்டான். வருந்துகிறான். முற்பிறவியில் தன் மூத்த சகோதரரை வஞ்சித்ததால் வருந்து கிறான். ✶ பரதன்போல அண்ணனிடம் மாறாத பற்றும் பாசமும் வைத்திருந்தால், இந்த கதி நேர்ந் திருக்காது. இந்த பாவத்திற்குப் பரிகாரமே கிடை யாது என்பதை அனைவரும் அறிவார்களாக.''

✶ பரதன்- ஸ்ரீராமரின் இளைய சகோதரர். அண்ணனின் பாதுகையை வணங்கி அரசாண்டதால் "ஆயிரம் ராமர்கள் சேர்ந் தாலும் உன் ஒருவனுக்கு ஈடாக மாட்டார்கள்' என்று குகனால் புகழப்பட்டவர்.

(வளரும்)

செல்: 63819 58636

____________

நாடி ரகசியம்

1. உத்திர நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் புதனும், உத்திரட்டாதி நான்காம் பாதத்தில் செவ்வாயும் அமையும் ஜாதக அமைப்பைப் பெற்றவர், கட்டடக்கலை நிபுணராவார்.

2. உத்திர நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னம், புதன், குரு கூடியிருக்கப் பிறந்த ஜாதகி செல்வந்தரை மணப்பாள்.

3. உத்திர நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும் செவ்வாயும் கூடியிருந்து, புதன் ரேவதி நான்கில் அமையும் ஜாதக அமைப்பைப் பெற்றவர், வாழ்வில் வெற்றி காண்பது அரிது.

கேள்வி: நவாம்சத்தின் முக்கியத்துவத்தை "கந்தர்வ நாடி' மூலம் விளக்க முடியுமா?

பதில்: ஒரு ஜாதகத்தில் ராசி சக்கரத்தைவிட, நவாம்ச சக்கரமே துல்லியமான பலன்களைக் காட்டும். முக்கியமாக லக்னத்திற்கு அறுபத்து நான்காவது நவாம்சம் மிகவும் முக்கியமானது. அறுபத்து நான்காவது நவாம்சத்தின் அதிபதியும், அதில் நிற்கும் கிரகமுமே விதியை நிர்ணயிக்கும். உதாரணத்திற்கு ரேவதி நான்காவது பாதத்தில் லக்னம் அமைந்தால், அதன் அறுபத்து நான்காவது நவாம்சம் துலா ராசியின் 26.40-30.00 பாகைக் கலையில் அமையும். இந்த பாகையில் 6, 8, 12-ஆம் அதிபதிகள் அமர்ந்தால் அந்த கிரகத்தின் காரகம் பாதிக்கப்படும். இதேபோல் அறுபத்து நான்காவது நவாம்சத்தில் லக்னாதிபதி அமர்ந்தால், அது நிதானம்சம் எனப்படும். அஸ்வினி முதல் பாதத்தில் லக்னம் அமைந்து, சகோதர காரகனாகிய செவ்வாய் விருச்சிகத்தில் 00-03.20 பாகைக் கலையில் அமர்ந்தால், இளைய சகோதரர்களுக்கு பாதகம் ஏற்படும். பொதுவாக அஷ்டகாம்சத்தில் இருக்கும் கிரகம் அதன் தசாபுக்திகளில் நன்மை தருவதில்லை. "குற்றப்புலனாய்வு' ஜோதிடத்தில், சம்பவம் நடந்த லக்னத்தின் அறுபத்து நான்காவது நவாம்ச அதிபதியின் நிலையைக்கொண்டே கூட்டுசதியினை (ஸ்ரீர்ய்ள்ல்ண்ழ்ஹஸ்ரீஹ்) அறியமுடியும். புஷ்கர நவாம்சத்தில் அமையும் கிரகங்கள் அபரிமிதமான வலிமையுடன் நன்மை தரும். முகூர்த்த நிர்ணயத்தில் புஷ்கர நவாம்சம் முக்கிய பங்கு வகிக்கிறது. நடப்பு தசா- புக்தி அதிபதிகள், கோட்சாரத்தில் சாதகமான நவாம்சத்தில் சஞ்சரிக்கும்போது மட்டுமே நல்ல பலன்களைத் தருவார்கள் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.

bala210619
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe