இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
56
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஒரு ஜாதகருக்கு வாழ்வில் பாக்கிய தசை வராமல் போனலும், பாக்கிய யோக கிரகமாகிய ஒன்பதாம் பாவாதிபதியின் புக்தி- அந்தரங்களில், வலுவில்லாத கிரகங்களுக்கும் பாவங்களுக்கும் பலம் தந்து பாக்கியத்தை விருத்திசெய்வார். பாக்கியாதிபதி அமரும் பாவத்தின் கேந்திர பாவங்களின் முழுப் பலன்களையும் அதிகரிக்கச் செய்வார். பாக்கிய தசை இல்லாதோருக்கு பாக்கியாதிபதி சக்தி தானம் செய்வது, "பிரஸஹ்யகாரம்' எனப்படும். ஜாதகத்தில் பாக்கியாதிபதியின் (ஒன்பதாம் பாவாதிபதி) கோட்சார கதி மற்றும் ஹோரையைக் கருத் தில்கொண்டே பரிகா ரங்கள் செய்யப் படவேண்டும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.
""சோமநாதரே! யோகிக்கு அடையாளம் என்ன? பிரம்மத்தைச் சேர்ந்துவிட்டபிறகும் அவரது மனம் ஆனந்தத்தை அனுபவிக்கமுடியுமா?'' என அன்னை காமாட்சி கச்சியம்பதி ஆத்தூர் எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு வடகலையீஸ்வரரைப் பணிந்து கேட்டாள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gandharvanadhi.jpg)
சிவலோக தியாகேசர் உரைத்தது- ""தண்ணீர் ஒட்டாத தாமரை இலை போல, சுகமும் துக்கமும் தன்னைத் தொடாமல் எவன் ஒருவன் இருக் கிறானோ அவனே யோகி. நீரின் நுரையே குறையாவதுபோல, மனதின் அசுத்தம்தான் ஆசை. காற்று மரங் களை அசைக்கும். ஆனால் மலையை அசைக்கமுடியாது. ஆசையெனும் மாருதம் (காற்று) யோகியிடம் சலனத்தை ஏற்படுத்தாது. உணர்ச் சியே இல்லாத நிலையில் யோகி இருப்பதாகத் தோன்றினாலும், அவனே பூரண உணர்வோடு இருக் கிறவன். சிற்றின்பத்தால் வருவது சுகம். பேரின்பத்தால் வருவதே ஆனந் தம். ரோகிக்கும் (நோயாளி) உறக்கம் ஆனந்தத்தைத் தரும். யோகியோ தூங்காமல் தூங்கி, சதா ஆனந்தமாக இருக்கிறான். ஆதியே அந்தம்; அந்தமே ஆதி என்று உணர்ந்தவனின் ஆனந் தமே அனந்தம். (அளவற்றது). அதுதான் யோகம்.''
""பிரம்மபுரீஸ்வரரே! "சின்னம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய பூர நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும், அனுஷம் முதல் பாதத்தில் குருவும், பூராடம் இரண்டாம் பாதத்தில் சனியும், திருவோணம் முதல் பாதத்தில் சூரியனும், சதயம் நான்காம் பாதத் தில் சுக்கிரனும் புதனும் சேர்ந்திருக்க, அஸ்வினி இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், ரோகிணி மூன்றாம் பாதத்தில் சந்திரனும் அமையப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று திருஈங் கோய்மலை எனும் திருத்தலத்தில் அருள்புரியும் மரகதநாதரை அன்னை மரகதாம்பிகை வினவினாள்.
பசுபதீஸ்வரர் உரைத்தது- ""ஜகத்ரட்சகியே! இந்த ஜாதகி முற்பிறவியில் சுந்தரி எனும் பெயருடன் துறையூரில் வாழ்ந்தாள். இளம்வயதில் மனக்கட்டுப்பாடில்லாமல் பல ஆண்களையும் காமவலையில் வீழ்த்தினாள்.
குணக்கேடான வாழ்க்கை வாழ்ந்ததால், திருமணமும் நடைபெறாமல் போனது. ஊரும் உறவும் விலக்கியதால் தனிமையுற்றாள்.
ஒரு காமுகனால் கொலையுண்டாள். அவள் உடல், ஆளரவமற்ற மலைக்காட்டில் தூக்கி யெறியப்பட்டது. காக்கைக்கும் கழுகுக்கும் அவள் பூதவுடல் விருந்தானது. அவள் பிரேத ரூபம் பலகாலம் மலைக்காட்டில் அலைந்து திரிந்தபின், எமலோகத்தை நோக்கிப் பயண மானது. அங்கு எமகிங்கரர்களின் ஏசலையும் உலக்கை இடியையும் பெற்று, எருமை வாகனனாகிய எமன்முன் நிறுத்தப்பட்டாள். அவள் பாவக்கணக்கை சிரவணர்கள் படித் தனர். சுக்கில சுரோணிதத்தால் உருவாக்கப்பட்டு, அன்ன பானாதிகளால் விருத்தியாகி, சதா காலமும் அசுத்தம் நிறைந்த அற்ப தேகத்தின் சுகத்தினால் அறம் வழுவியதால் "சான்மலி' எனும் நரக தண்டனையைப் பெற்றாள். சிலகாலம் கழித்து விதிவசத்தால் பூவுலகை அடைந்தாள்.
முன்ஜென்மத்தில் செய்த பாவச்செயல்களால், இளம்வயதில் ஏற்பட்ட "நரம்பு சிலந்தி' எனும் நோயால் அவதியுறுகிறாள். கிரந்திப் புண்ணிலிருந்து வெளியேறும் புழுக்களால் பாவத்தைக் கழிக்கிறாள். இதற்குப் பரிகாரமாக, ஜென்ம நட்சத்திரத்தன்று வெள்ளியாலான ஸ்திரீ ரூப பிரதிமையைப் பூஜித்தபின் தானம் செய்தால் சுகம் பெறுவாள்''
(வளரும்)
செல்: 63819 58636
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-05/gandharvanadhi-t.jpg)