இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
98
ஜனன ஜாதகத்தில் எந்த கிரகம் சுபகேந்திரத்தில் உள்ளதோ (1, 5, 9/3, 7, 11) அந்த கிரகம் கோட்சாரத்தில் வலிமை பெறும்போது ஜாதகருக்கு நல்ல பலன்களை அள்ளித் தரும். அதேபோல் தங்கள் தசாபுக்திகளிலும் சுப யோகப் பலன்களைத் தரும். சுபகேந்திர அதிபதி களும் நன்மையே செய்வார்கள். சுப கேந்திரத் திலுள்ள கிரகங்களும் அதிபதிகளும் கோட்சாரத் திலும், தசாபுக்திகளிலும் மாரகத்திற்கு ஒப்பான கண்டங்களைத் தருவார்கள் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""சங்கமேஸ்வரரே! நன்கு மார்க்கங்களிலும் சிறந்ததான ஞான யோகத் திலும், பக்தி யோகத்தைக் கடைப்பிடிக்க வேண்டி யதன் அவசியத்தைத் தாங்கள் விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை பூங்கோதை, ஒத்தக்கால் மண்டபம் எனும் திருத்தலத்தில் உறையும் புற்றிடம் கொண்டீஸ்வரரைப் பணிந்துகேட்டாள்.
விஜயநாதேஸ்வரர் உரைத்தது- ""எல்லா மார்க்கங்களிலும் கடைப்பிடிக்க வேண்டியது. குருபக்தியே அன்றி வேறொன்று மில்லை. குருபக்தியே யோகத்தின் ஜீவநாடி. பக்தி என்பது பூரண சரணாகதி. குருநாதரை வணங்குதல், குருவின் திருப்பெயரை தியானித்தல், குருவின் அருளுரைகளைக் கேட்பதுவுமே குரு பக்தி. உலோபியின் கருமித்தனத்தால் தானம் நாசமாவதுபோல, பிரம்மா
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
98
ஜனன ஜாதகத்தில் எந்த கிரகம் சுபகேந்திரத்தில் உள்ளதோ (1, 5, 9/3, 7, 11) அந்த கிரகம் கோட்சாரத்தில் வலிமை பெறும்போது ஜாதகருக்கு நல்ல பலன்களை அள்ளித் தரும். அதேபோல் தங்கள் தசாபுக்திகளிலும் சுப யோகப் பலன்களைத் தரும். சுபகேந்திர அதிபதி களும் நன்மையே செய்வார்கள். சுப கேந்திரத் திலுள்ள கிரகங்களும் அதிபதிகளும் கோட்சாரத் திலும், தசாபுக்திகளிலும் மாரகத்திற்கு ஒப்பான கண்டங்களைத் தருவார்கள் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""சங்கமேஸ்வரரே! நன்கு மார்க்கங்களிலும் சிறந்ததான ஞான யோகத் திலும், பக்தி யோகத்தைக் கடைப்பிடிக்க வேண்டி யதன் அவசியத்தைத் தாங்கள் விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை பூங்கோதை, ஒத்தக்கால் மண்டபம் எனும் திருத்தலத்தில் உறையும் புற்றிடம் கொண்டீஸ்வரரைப் பணிந்துகேட்டாள்.
விஜயநாதேஸ்வரர் உரைத்தது- ""எல்லா மார்க்கங்களிலும் கடைப்பிடிக்க வேண்டியது. குருபக்தியே அன்றி வேறொன்று மில்லை. குருபக்தியே யோகத்தின் ஜீவநாடி. பக்தி என்பது பூரண சரணாகதி. குருநாதரை வணங்குதல், குருவின் திருப்பெயரை தியானித்தல், குருவின் அருளுரைகளைக் கேட்பதுவுமே குரு பக்தி. உலோபியின் கருமித்தனத்தால் தானம் நாசமாவதுபோல, பிரம்மாணம் இல்லாத ஞானத் தால் வித்தை பாழாகும். குருவின் ஆப்தவாக்கியமே பிரம்மாணம். கருட மந்திரத்தை ஜெபித்தால் பாம்பின் விஷயம் விலகுதல்போல, குருவை நினைக்க, அறியாமை மறையும். மும்மல அழுக்கு நீங்கத் துவைப்பவன் ஆசான்; துணியே சீடன்; மனத்திட்பமே கல்லாம். நாவாயைப் (ஓடம்) பற்றியவன் நீந்தாமல் கரை சேர்வதுபோல, குருவின் அருளைப் பெற்றவன் உறுதியாய் வெற்றியடைவான்.''
""இராமநாதீஸ்வரரே! "பிரேங்கோலிதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய உத்திராட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், திருவாதிரை நான்காம் பாதத்தில் சந்திரனும், மகம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், சித்திரை இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், ஸ்வாதி நான்காம் பாதத்தில் சூரியனும் புதனும் சேர்ந்திருக்க, விசாகம் நான்காம் பாதத்தில் சனியும், அனுஷம் இரண்டாம் பாதத்தில் குருவும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று இடிகரை எனும் திருத்தலத்தில் அருள் புரியும் வில்லீஸ்வரரை அன்னை வேதநாயகி வேண்டிப் பணிந்தாள்.
அதிதீஸ்வரர் உரைத்தது- ""இந்திராட் சியே! இந்த ஜாதகன் சேவூர் எனும் ஊரில் பிறந்து, மருதன் என்று பெயர் பெற்றான்.
இளம்வயதில் தன்னுடன் ஒருசாலை மாணக் கனாய்க் கல்வி கற்ற தருமன் என்ப வனிடம் அதீத அன்பு கொண்டு, நட்பு பாராட்டி வந்தான். தன்மேல் பலகாலமாக மையல் கொண்டிருந்த ஒரு தையலை மணம் முடிக்க விரும்பினான். ஆனால், விதியின் சுழற்காற்றில் விருப்பங்கள் இடம் மாறின. மருதன் இலவு காத்த கிளியானான்.
அவன் விரும்பிய பெண் தருமனின் மனைவியானாள்.
அகத்தே புகைபோல பகை வைத்து, புறத்தே புன்னகையொளி தவழ தருமனுடன் நட்பெனும் நாடகமாடினான். எவரும் அறியா வண்ணம் நயவஞ்சகமாய் நஞ்சிட்டுக் கொன்றான். தன் மனதின் உறுத்தலால் புத்தி பேதலித்துத் தன்னுயிரைத் தானே மாய்த்துக்கொண்டான். பலகாலம் பிரேத ரூபமாய் அலைந்தபின் வன்னிமரத்தில் தொங்கி, நரகம் சென்றான். பன்றி முகம் என்ற நரகத்தில் பலகாலம் துன்புற்று, தன் கர்மவினை தீர ஊனுடல் பெற்று உலகில் உழன்றான். வீடூர் என்ற ஊரில். ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இளமையில் துன்பத்தைத் துணைக்கொண்டான்.
தீராத கடனும் பகையும் உண்டாகி, நிம்மதியின்றி தீராத வறுமையில் வாடுகிறான்.
முற்பிறவியில், * அர்ஜுனன்போல வஞ்சகமாய் உயிர்க்கொலை செய்ததால், பிரம்மஹத்தி தோஷத்தின் பிடியில் துன்புறுகிறான். நயவஞ்சக மாய்க் கொலை செய்தவருக்குப் பரிகாரமே கிடையாது என்பதே நான்மறையின் தீர்ப்பு.
* அர்ஜுனன்- பீஷ்மரை நயவஞ்சமாகக் கொன்ற பாவத்துக்காக அர்ஜுனன் தன் மகனால் கொல்லப்பட்டான். -மகாபாரதம்
(வளரும்)
செல்: 63819 58636
__________
நாடி ரகசியம்
1. உத்திராட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் செவ்வாயும் குருவும் சேர்ந்து அமரும் அமைப்பைப் பெற்ற ஜாதகர், முன்னோர் சொத்தில் ஜீவனம் செய்வார்.
2. உத்திராட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சனி, திருவாதிரை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சூரியன், சுக்கிரன், சந்திரன் சேர்ந்திருக்க, ஜாதகரின் கல்வியும் தொழிலும் கெடும்.
3. உத்திராட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சூரியனும், மூல நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் செவ்வாயும் அமைந்து, லக்னம், குருவின் பார்வையைப் பெறாவிடில், ஜாதகர் மனநோயாளி ஆவார்.
கேள்வி: கிரகங்களின் ஆரோகண- அவரோகண கதிகளையும், அவற்றின் பலன்களையும் "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?
பதில்: சப்த பேதமே மொழியாவதுபோல, கிரகங்களின் குண வேறுபாடுகளே பிரபஞ்ச இயக்கத்திற்குக் காரணமாக அமைகின்றன. தமிழின் பன்னிரண்டு உயிர் எழுத்துகளை, ராசி மண்டலத்திலுள்ள பன்னிரண்டு ராசி வீடுகளுடன் உருவகப்படுத்திக்கொண்டால் ஆரோகண- அவரோகண கதிகளை எளிதாக அறியலாம். உயிர் எழுத்துகளில் ஐந்து எழுத்துகளுக்கு மட்டுமே ஆரோகண- அவரோகண கதி உண்டு. ஆரோகணம்- ஆ, ஈ, ஊ, ஏ, ஓ; அவரோகணம்- அ, இ, உ, எ, ஒ. இதேபோல புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய ஐந்து கிரகங்களுக்கு மட்டும், ஒவ்வொரு கிரகத்திற்கும் இரண்டு வீடுகள் அமைகின்றன. சூரியனுக்கும் (ஐ) சந்திரனுக்கும் (ஔ) ஒரு வீடு மட்டுமே உண்டு. ஜோதிடத்தைப்போல, வேதத்தின் அங்கமாகிய இசையிலும் ஏழு ஸ்வரங்களும், பன்னிரண்டு ஸ்வர ஸ்தானங்களும் அமைந்து, அதில் ஷட்ஜமம், பஞ்சமம் தவிர்த்து மற்ற ஐந்து ஸ்வரங்களிலும் கோமளம், தீவிரம் எனும் இரண்டு நிலைகள் உள்ளதைக் காணலாம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒரு வீடே உள்ளதால் ஆரோகண- அவரோகண ஆட்சி வீடுகள் கிடையாது. ஒரு கிரகத்தின் உச்சகதிக்கு அருகிலுள்ள வீடு ஆரோகண ஆட்சி வீடு; நீசகதிக்கு அருகிலுள்ள வீடு அவரோகண ஆட்சி வீடு. ஒரு ஜாதகத்தில் ஆரோகண- அவரோகண கதியிலுள்ள கிரகங்களைக்கொண்டு கிரகங்களின் வலிமையைக் கணக்கிடலாம். ஒரு ராசியின் ஒன்று, ஐந்து மற்றும் ஒன்பதாம் வீடுகள் ஆரோகண ஆட்சி வீடாக அமைந்தால், அந்த வீட்டின் அதிபதியால் நன்மை பெருகும். உதாரணத்திற்கு- கடக ராசிக்கு ஐந்தாம் வீடு விருச்சிகம், செவ்வாயின் ஆரோகண ஆட்சி வீடு. ஒன்பதாம் வீடாகிய மீனம், குருவின் ஆரோகண ஆட்சி வீடு, அதனால் கடக ராசிக்கு குருவும் செவ்வாயும் சுபயோகம் தருவார்கள் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.