இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
94
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஒரு ஜாதகத்தில் லக்னம் அல்லது ராசிக்கு ஏழாம் வீட்டோடு புதனின் பலமான சம்பந்தம் ஏற்படுமேயானால், இருதார மணத்திற்கு வாய்ப்புண்டு. குரு வீட்டில் புதன் அமர்ந்தால் இன்னும் வலுசேர்க்கும். இரண்டு மற்றும் பதினோராவது பாவங்களைப் பரிசீலித்து, இருதார மணத்திற்கான யோகத்தை உறுதிசெய்யலாம் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sivan_73.jpg)
""பிறைசூடனே! ஆழிசூழ் உலகில், கலியுகத்தில் அதர்மமே தழைத் தோங்குகிறது. இந்நிலையில், உயிர்கள் பிறவிப்பெருங்கடலைக் கடப்பதற்கான உபாயத்தைத் தாங்களே கூறியருள வேண்டுகிறேன்'' என அன்னை உமாதேவி பங்கனப்பள்ளி எனும் திருத்தலத்தில் உறையும் ஸ்ரீயாகந்தி அர்த்தநாரீஸ்வரரைப் பணிந்து கேட்டாள்.
யோகேஸ்வரன் உரைத்தது- ""உப்புக்காய்களை உண்டவன் நீர் வேட்கையால் ஓடைநோக்கி ஓடுதல்போல, ஞானத்தைப் பெறவேண்டும் என்னும் வேட்கை உயிருக்கு ஏற்படவேண்டும். அந்த வேட்கை பெருகப் பெருக உயிர்கள் அறப் பணிகளில் ஈடுபடும். அத்தகைய ஈடுபாட்டால், உயிருக்கு மும்மலமும், இருவினையும் அழியும். துன்பக்குளத்தில் நீராடித் தூயவனாவான்.
அப்போது உயிருக்கு ஞானம் கிட்டும். மாயத்திரை ஏழும் விலகி, ஏழு ஜென்மத்துச் சட்டையும் அகலும். பொன்னை உருக்கிப் புதுப்பொலிவு சேர்த்தாற்போல, தன்னையுணர்ந்து ஞானம் பெறுவான்.''
""மறைமலையே! "மயூர லலிதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய பூராட நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும், பூசம் மூன்றாம் பாதத்தில் சந்திரனும், ஆயில்யம் நான்காம் பாதத்தில் சனியும், மகம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், உத்திரம் இரண்டாம் பாதத்தில் குருவும், ஸ்வாதி நான்காம் பாதத்தில் புதனும் சுக்கிரனும் சேர்ந்திருக்க, அனுஷம் இரண்டாம் பாதத்தில் சூரியனும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று திருவதிகை எனும் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீவீரட்டானேஸ்வரரை அன்னை பெரியநாயகி வேண்டிப்பணிந்தாள்.
சோமநாதர் உரைத்தது- ""சாமுண்டியே! இந்த ஜாதகன் சிவசாகரம் என்ற ஊரில் கிரிதரன் என்ற பெயரில் வாழ்ந்துவந் தான். அவன் இளவயது முதலே தற்பெருமையும், செருக்கும் கொண்டு, குலமறுக்க வந்த கோடரிக்காம்பாக விளங்கினான். தீய நட்பி னால், அவன் ஊரில் வாழ்ந்த பெரியோரை ஏளனப்படுத்திப் பலவகைகளில் துன்புறுத் தினான். மனமெனும் காட்டைத் திருத்தி கரும்பை நடாமல், கடுகை விதைத்தான். ஒருநாள் அவன் பயணித்த வண்டியின் சக்கரம் முறிந்ததால், கீழே விழுந்து நினைவிழந்தான். அவன் வாழ்க்கைச் சக்கரத்தைக் காலத் தச்சன் காலால் முறித்தான். பேய்போல திரிந்தவன் பிணமாய்க் கிடந்தான். இனமான சுற்றம் மயானத்தில் விடைகொடுத்தது. வாழ்வின் விடையறியாது- விரைந்தது அவனுயிர். அதலபாதாளத்தில் அக்னி ஆறு ஓட, மேலே இரண்டு கூரிய சிகரங்களை இணைத்துக் கட்டப்பட்ட ஒரு மெல்லிய கயிற்றில் ஒரு சிம்மாசனம் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் எமதருமன் அமர்ந்திருந்தான். எமதூதர்களால் கிரிதரனின் உயிர் எமதருமனுக்கு முன்னால் நிறுத்தப்பட்டது. அவன் செய்த பாவ- புண்ணியங்களின் பலன் நிறுக்கப்பட்டது. நீதி வழங்கப்பட்டது. காலசூத்திரம் எனும் நரகத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் துயருற்றான்.
பின்பு, தோலால் மூடிய எலும்புடல் பெற்று, பூவுலகம் சென்றான். நன்மங்கலம் எனும் ஊரில் பிறந்து வாமனன் என்று பெயர் பெற்றான். முன்ஜென்ம வினைப்பயனால் அவன் உடல் வளர்ச்சி குன்றியது. ஊரார் அவனைக்கண்டு எள்ளி நகையாடினர்.
அதனால் மனவளர்ச்சியும் குன்றி அவதியுறு கிறான். * ஐராவதம்போல், பெரியோரைப் பழித்ததால் வந்த வினைப்பயனால் அல்லலுறு கிறான். இப்பிறவியில் இதற்குப் பரிகார மில்லை என்று உணர்வாயாக.
* ஐராவதம்- துர்வாச முனிவரை அவம தித்ததால் சபிக்கப்பட்டு, பூவுலகம் வந்த தேவலோகத்து யானை.
(வளரும்)
செல்: 63819 58636
__________________
நாடி ரகசியம்
1. பூராட நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சூரியனும், திருவாதிரை இரண்டாம் பாதத்தில் குருவும் அமையும் ஜாதகர் அதிகார பலமும் மங்காத புகழும் பெறுவார்.
2. பூராட நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் குரு, சனி, சூரியன் சேர்ந்து அமையப்பெற்ற ஜாதகர் இளம்வயதில் தந்தையை இழப்பார்.
3. பூராட நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் செவ்வாய், சந்திரன், சூரியன் இணைந்தால் நிரந்தர நோயாளி.
கேள்வி: வக்ர கிரகங்களின் வலிமை மற்றும் அவை தரும் பலன்களை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?
பதில்: சூரிய சந்திரனைத் தவிர்த்து மற்ற ஐந்து கிரகங்களுக்கும் வக்ரகதி உண்டு. கிரகங்கள் சூரியனைவிட்டு விலகிப்போகும் காலங்களில் வக்ரமடைவார்கள். குரு, சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் சூரியனைவிட்டு ஐந்தாம் ராசியிலிருந்து, எட்டாம் ராசிவரையில் சஞ்சரிக்கும்போது வக்ரமடைவார்கள். புதனுக்கு 24 நாட்களும், சுக்கிரனுக்கு 42 நாட்களும் வக்ரகாலம் அமைகிறது. உச்சம்பெற்ற கிரகங்கள் வக்ரம் பெற்றால் உச்சபலம் குறைந்துவிடும். நீசம்பெற்ற கிரகங்கள் வக்ரம் பெற்றால் பாதகம் குறையும். பொதுவாக, வக்ர கிரகங்கள் எதிர்மறையான பலன்களையே தரும். புதன் வக்ரமானால் தவறான முடிவெடுக்கும் நிலைமை உண்டாகும். சனி வக்ரமானால் பிறருக்கு அடிமைப்படும் நிலை வரும். செவ்வாய் வக்ரமானால் கோபத்தால் இழப்புகளை சந்திக்க நேரிடும். குரு வக்ரத்தால், தக்க நேரத்தில் புத்தி வேலை செய்யாது. சுக்கிரன் வக்ரமானால் திருமணம் மற்றும் உறவு முறைகளில் மரபை மீறி செயல்படக்கூடும். ஒரு ராசியில் வக்ரமாயிருக்கும் கிரகம் தன் முந்தைய ராசியில் சஞ்சரித்தால் என்ன பலனைக் கொடுக்குமோ அதையே கொடுக்கும். வக்ர கிரகங்கள் தங்கள் தசாபுக்திகளில் இழப்புகளைத் தரும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-01/sivan-t_1.jpg)