இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
83
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஒருவரின் வாழ்க்கையானது- முயற்சிக்கு உட்பட்ட செயல்கள், விருப்பத்திற்கேற்ற தேர்வு, கட்டுப்படாத தன்னிச்சையான நிகழ்வுகள் (ஆன்ற்ர்ய்ர்ம்ர்ன்ள்) எனும் மூன்று பகுதிகளைக் கொண்டது. முயற்சிக்கு உட்பட்ட செயல்களில் எந்த அளவுக்கு வெற்றிபெறுவார் என்பதை, திறமையைத் தீர்மானிக்கும் சூரியனுக்கும், மன ஓட்டத்தைச் சுட்டிக்காட்டும் சந்திரனுக்குமுள்ள தொடர்பினைக்கொண்டே அறியமுடியும். அதாவது, ஜனன காலத்து பட்சம், திதி, யோகம், கரணத் தைக்கொண்டே அறியலாம். வாழ்க்கைத்துணை, நட்பு போன்ற விருப்பத்திற்கேற்ற தேர்வு சரியாக அமையுமா என்பதை, விதியை நிர்ணயிக்கும் லக்னத் திற்கும் சந்திரனுக்குமுள்ள இணக்கத்தைக் கொண்டும், சுவாசித்தல், உடல் உள்ளுறுப்புகளின் தன்னிச்சை யான இயக்கங்களை, லக்னத்திற்கும் சூரியனுக்கும் அமைந்திருக்கும் ஒத்திசைவைக் கொண்டும் அறியலாம் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""சோழீசுவரரே! கல்ப காலம் இறவாமை வேண்டும் யோகிகள் அடையும் காயகற்பத்தை, புறத்தேய
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
83
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஒருவரின் வாழ்க்கையானது- முயற்சிக்கு உட்பட்ட செயல்கள், விருப்பத்திற்கேற்ற தேர்வு, கட்டுப்படாத தன்னிச்சையான நிகழ்வுகள் (ஆன்ற்ர்ய்ர்ம்ர்ன்ள்) எனும் மூன்று பகுதிகளைக் கொண்டது. முயற்சிக்கு உட்பட்ட செயல்களில் எந்த அளவுக்கு வெற்றிபெறுவார் என்பதை, திறமையைத் தீர்மானிக்கும் சூரியனுக்கும், மன ஓட்டத்தைச் சுட்டிக்காட்டும் சந்திரனுக்குமுள்ள தொடர்பினைக்கொண்டே அறியமுடியும். அதாவது, ஜனன காலத்து பட்சம், திதி, யோகம், கரணத் தைக்கொண்டே அறியலாம். வாழ்க்கைத்துணை, நட்பு போன்ற விருப்பத்திற்கேற்ற தேர்வு சரியாக அமையுமா என்பதை, விதியை நிர்ணயிக்கும் லக்னத் திற்கும் சந்திரனுக்குமுள்ள இணக்கத்தைக் கொண்டும், சுவாசித்தல், உடல் உள்ளுறுப்புகளின் தன்னிச்சை யான இயக்கங்களை, லக்னத்திற்கும் சூரியனுக்கும் அமைந்திருக்கும் ஒத்திசைவைக் கொண்டும் அறியலாம் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""சோழீசுவரரே! கல்ப காலம் இறவாமை வேண்டும் யோகிகள் அடையும் காயகற்பத்தை, புறத்தேயுள்ள பொருளென்று எண்ணும் அறிவில் எளியோரும் உணருமாறு தாங்கள் விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை சௌந்தரவல்லி குடிமல்லூர் எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு பூமீஸ்வரரைப் பணிந்து கேட்டாள்.
சந்திரசேகரர் உரைத்தது- ""பற்றியதை விடாது பற்றிடும் உடும்புபோல, மெய்நெறிப் பற்றி வழுவாத யோகியர், நாவினை அண்ணாக்கில் புகுத்தியே நாசியை, நாவினால் தொடர்பறச் செய்வார். கீழ்வீழும் பிராணனை தேக்கிச் சுமந்தால் மனமது ஒடுங்கும். அமுதத்தாரை மெய்யதில் கலக்கும். காயம் (உடல்) முழுவதும் கற்பமாய் மாறும். ஞானம் சுரக்கும் சுரபியும் (காமதேனு) அதுவே.'' ""மார்க்கபந்துவே! "தவஸம்ஸ் போடிதம்' எனும் தாண்ட வத்தின் லயமாகிய அனுஷ நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், ரோகிணி நான்காம் பாதத்தில் செவ்வாயும், புனர்பூசம் மூன்றாம் பாதத்தில் சந்திரனும், உத்திரம் முதல் பாதத்தில் குருவும் சனியும் சேர்ந்திருக்க, ஹஸ்தம் இரண்டாம் பாதத்தில் சூரியனும், சித்திரை இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், ஸ்வாதி நான்காம் பாதத்தில் புதனும் அமரும் அமைப்பைப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று பிரான்மலை எனும் திருத் தலத்தில் அருள் புரியும் கொடுங் குன்றநாதரை அன்னை குயிலமுதநாயகி வேண்டிப் பணிந்தாள்.
அர்த்தநாரீஸ்வரர் உரைத்தது- ""ஞானாம் பிகையே! இந்த ஜாதகன் முற்பிறவியில் பிரகாசன் எனும் பெயருடன் வள்ளியூர் என்ற ஊரில் வாழ்ந்து வந்தான். அவன் வணிகம் செய்வதில் சிறந்து விளங் கினான். செல்வம் தேடிவந்து அவன் இல்லம் புகுந்தது. வறியவர் வரிசையில் நின்று தானம் பெற்றனர். ஊரும் உறவும் பணிந்ததால், அவன் அகந்தை அம்பாரி ஏறியது. ஆணவமும் ஆரவாரமும் அவனைவிட்டு அகலாத தோழர்களாயின. ஒரு நாள், அவனுக்கு எழுத்தறிவித்தவர் (ஆசிரியர்) அவனிடம் பொருள்கேட்டு வந்தார். சிறுவயதில் அவர் தன்னைக் கடிந்து கொண்ட நிகழ்வு அவன் நினைவில் நிழலாடியது. அவன் பணிவு விடைபெற்றதால், குருவுக்குப் பணிவிடை செய் தானில்லை. மாறாக, அவரை ஏளனம் செய்தான். ஏவலர்களைக் கொண்டு அவரை இடமகற்றினான். குருவுக்கு குற்றேவல் புரியவேண்டியவன் குற்றம் புரிந்தான். முதிர்ந்த இலை உதிர்வதுபோல, முதுமையில் நோயால் கல்லறைத் தோட்டத்தில் அடைக்கலம் ஆனான்.
குருவை நிந்தித்ததால் அசிபத்திரம் எனும் நரகத்தில் துன்புற்றான். பின் பூமியில் விழுந்து மனிதனாய் முளைத்தான். இளம்வயதில் ஞாபகமறதி நோயில் சிக்குண்டான். கல்வியில் தேர்ச்சி கேள்விக்குறியானது.
✶ இந்திரத்யும்னன்போல தன் குருவை அவமதித்ததால், ஞாபகமறதி நோயால் அவதியுறுகிறான். ஞானிகளின் அதிஷ்டாங் களில் மனமுருக பூஜை செய்தால் நலம்பெறுவான்.
✶ இந்திரத்யும்னன்- தெய்வ பக்தியில் முதன்மையானவனாக இருந்தவன். தன் குருவாகிய துர்வாசரை அவமானப்படுத் தியதால் சாபம் பெற்று, கஜேந்திரனாகப் பிறந்தான். முதலையின் வாயில் அகப் பட்டுத் துன்புற்று, முடிவில் மோட்சத்தை அடைந்தான்.
-பாகவதம்.
(வளரும்)
செல்: 63819 58636
________________
நாடி ரகசியம்
1. அனுஷ நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சந்திரனும், உத்திரம் முதல் பாதத்தில் சுக்கிரனும் அமையும் ஜாதகர் அரசு அதிகாரியாகப் புகழ்பெறுவார்.
2. அனுஷ நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சந்திரனும் செவ்வாயும் சூரியனும் கூடிய அமைப்பைப்பெற்ற ஜாதகருக்கு ஒன்பது வயதுவரை பாலாரிஷ்ட தோஷமுண்டு.
3. அனுஷ நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சனியும், ரேவதி மூன்றாம் பாதத்தில் சூரியனும், ரேவதி நான்காம் பாதத்தில் புதனும் அமைந்தால் ஜாதகருக்கு சிறைத் தண்டனை உறுதியாகும்.
கேள்வி: "சித்திரை அப்பன் நடுத்தெருவிலே' என்று பழமொழியில் கூறப்படுவதுபோல, புத்திரர்களின் ஜாதக அமைப்பினால் தந்தைக்கு பாதிப்பு உண்டாகுமா என்பதை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?
பதில்: அப்பன்- பிதாகாரகன் சூரியனின் தேர்ப்பாதை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மாறும் உத்தராயன வீதியின் நடுவில், உச்சியில், உச்சத்தில் பிரவேசிக்கும் மாதம் சித்திரை என்பதே அதன் பொருள். சித்திரை நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தையின் தந்தை துன்பப்படுவார் என்று கூறுவது சரியானதல்ல. "காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது'போல, ஒரே நேரத்தில் நிகழும் இரு வேறு நிகழ்வுகள். (ஈர்ண்ய்ஸ்ரீண்க்ங்ய்ஸ்ரீங்). வாழ்க்கைப் பயணத்தில் வெவ்வேறு மனிதர்கள் வந்துபோனாலும், முன்வினைப்பயனால் வரும் பாதிப்பு அவரவரை மட்டுமே சேரும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.