இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
68
லால்குடி கோபாலகிருஷ்ணன்
தசாபுக்தி மற்றும் கோட்சார கதியின் பலன்களைக் காணும்போது, பாவத்தொடர்புகளை மட்டும் கொண்டு பலன்களைக் கணித்தால், பலன்கள் தவறாகப்போகும் வாய்ப் புண்டு. உதாரணத்திற்கு, ஒரு ஜாதகத்தில் தசாபுக்தி மற்றும் கோட்சாரத்தில் 6, 8, 12 பாவங்களின் தொடர்பும், அதில் செவ்வாயின் பங்களிப்பும் ஏற்பட் டால், அதன் பலன் ஜாதகருக்கு காயம் ஏற்படுதல், வலி, வேதனை போன்றவையேயாகும். ஒருவரை எதிரி தாக் கினாலும், மருத்துவர் அறுவை சிகிச்சை செய்தாலும் மேற்கூறிய பலன்களே உண்டாகும். ஒரு பாவத் தினால் ஏற்படும் நிகழ்வின் காரணத்தை, அந்த பாவத்தின் மூன்றாம் பாவமே சுட்டிக்காட்டுமென்பதால், எட்டாம் பாவமே பிரதானமானது. நிகழ்வு களை இனங்கண்டு பிரிப்பதற்கு எட்டாம் பாவம், லக்னத்திற்கு சுபம் தரக்கூடிய கிரகங்களுடன் தொடர்பிலுள்ளதா? அசுபம் தரக்கூடிய கிரகங்களுடன் தொடர்பிலுள்ளதா? பாதகாதி பதியுடன் தொடர்பிலுள்ளதா என்பதைக் கண்டறியவேண்டும். எட்டாம் பாவம் பாதகாதி பதியுடன் தொடர்பிலிருந்தால், எதிரிகளால் ஆபத்து என்றறிய வேண்டும். ரிஷப லக்னத்திற்கு சுபனும் பாதகனும் யோகக்காரகனுமாக சனி அமைவதால், ரிஷப லக்னக்காரர்கள் சனிக்கிழமைகளிலும் சனி ஹோரைகளிலும் அறுவை சிகிச்சை
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
68
லால்குடி கோபாலகிருஷ்ணன்
தசாபுக்தி மற்றும் கோட்சார கதியின் பலன்களைக் காணும்போது, பாவத்தொடர்புகளை மட்டும் கொண்டு பலன்களைக் கணித்தால், பலன்கள் தவறாகப்போகும் வாய்ப் புண்டு. உதாரணத்திற்கு, ஒரு ஜாதகத்தில் தசாபுக்தி மற்றும் கோட்சாரத்தில் 6, 8, 12 பாவங்களின் தொடர்பும், அதில் செவ்வாயின் பங்களிப்பும் ஏற்பட் டால், அதன் பலன் ஜாதகருக்கு காயம் ஏற்படுதல், வலி, வேதனை போன்றவையேயாகும். ஒருவரை எதிரி தாக் கினாலும், மருத்துவர் அறுவை சிகிச்சை செய்தாலும் மேற்கூறிய பலன்களே உண்டாகும். ஒரு பாவத் தினால் ஏற்படும் நிகழ்வின் காரணத்தை, அந்த பாவத்தின் மூன்றாம் பாவமே சுட்டிக்காட்டுமென்பதால், எட்டாம் பாவமே பிரதானமானது. நிகழ்வு களை இனங்கண்டு பிரிப்பதற்கு எட்டாம் பாவம், லக்னத்திற்கு சுபம் தரக்கூடிய கிரகங்களுடன் தொடர்பிலுள்ளதா? அசுபம் தரக்கூடிய கிரகங்களுடன் தொடர்பிலுள்ளதா? பாதகாதி பதியுடன் தொடர்பிலுள்ளதா என்பதைக் கண்டறியவேண்டும். எட்டாம் பாவம் பாதகாதி பதியுடன் தொடர்பிலிருந்தால், எதிரிகளால் ஆபத்து என்றறிய வேண்டும். ரிஷப லக்னத்திற்கு சுபனும் பாதகனும் யோகக்காரகனுமாக சனி அமைவதால், ரிஷப லக்னக்காரர்கள் சனிக்கிழமைகளிலும் சனி ஹோரைகளிலும் அறுவை சிகிச்சையைத் தவிர்ப்பது நல்லது. பாவத்தொடர்புகளை சுபன், அசுபன், யோக, பாதக, மாரகர்களைக்கொண்டே ஆராயவேண்டும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""வாமதேவமே! மாயையில் சிக்குண்டு மதிமயங்கும் மனிதர்கள் பிரம்ம தத்துவத்தை எளிதில் உணருமாறு உபதேசிக்க வேண்டுகிறேன்'' என அன்னை சௌந்தராம் பிகை "காரைநகர்' எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு சுந்தரேசுவரரைப் பணிந்துகேட்டாள்.
சுந்தரர் உரைத்தது- ""ஒரு செயலின் காரணத்தையும் காரியத்தையும் பிரித்துப் பார்ப்பதாலேயே மாயையெனும் காரிருள் சூழ்கிறது. ஜகத்தின் (சகல அண்டங்கள்) காரணமும் காரியமும் ஒன்றே. பக்தியின் காரணம் பக்தி செய்வதே. அண்டத்திலிருந்து (முட்டை) பிறக்கும் உயிரே அண்டத்தை உருவாக்குகிறது. இதில் எது காரணம், எது காரியம் என்பதைப் பகுத்தறிய முடியாது. பொதி சுமக்கும் காளையால் உப்புப்பொதியை சுமப்பதா? பஞ்சுப்பொதியை சுமப்பதா என்பதைத் தேர்வுசெய்ய இயலாது. அதுபோல கர்மாவைச் சுமந்து செல்லும் உயிர்கள், தங்கள் செயலின் பலனைக் கருதுவதில் பயனில்லை. பலனைக் கருதாது செய்யும் செயலே பவித்திரமானது. அதுவே சுத்த சைதன்யம் எனும் பிரம்ம தத்துவம்.''
""தயாநிதியே! "ஆக்ஷிப்தம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய ஹஸ்த நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், ஸ்வாதி இரண்டாம் பாதத்தில் சனியும், கேட்டை இரண்டாம பாதத்தில் சுக்கிரனும் புதனும் சேர்ந்திருக்க, மூலம் முதல் பாதத்தில் சூரியனும், சதயம் மூன்றாம் பாதத்தில் குருவும், அஸ்வினி முதல் பாதத்தில் சந்திரனும், கிருத்திகை இரண்டாம் பாதத்தில் செவ்வாயும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று கும்பகோணம் திருத்தலத்தில் அருள் புரியும் ஸ்ரீகும்பேஸ்வரரை அன்னை மங்களாம் பிகை வேண்டிப் பணிந்தாள்.
வேங்கீஸ்வரர் உரைத்தது- ""அமிர்த ஸாகரியே! இந்த ஜாதகன், முற்பிறவியில் நந்த கோபன் எனும் பெயருடன், விதர்பா என்ற ஊரில் வாழ்ந்துவந்தான். அவன் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தன் சுயமுயற்சியால் பெரும் செல்வந்தனானான். ஊரே போற்று மாறு வணிகத்தில் சிறந்து விளங்கினான். சொர்ணத்தின் நடுவே கருமணிபோல பொருந் தாக் காமத்தில் இச்சைக் கொண்டான். ஏழை, எளிய பெண்களை அதிகாரத்தால் தன் மிருக இச்சைக்கு அடிபணிய வைத்தான். பிறர் மனையாளைத் தீண்டினான். தனக்கு இணங்காதவரை எமனுலகிற்கு அனுப்பினான். பத்தினிகள் சாபம் மலைபோல் குவிந்தன. பெரியோரின் அறிவுரை அவனுக்கு வேம்பாய்க் கசந்தது. அவன் செல்வமும் செல்வாக்கும் அவனைக் கவசம்போல காத்தன. நீதிதேவதை ஏளனப் புன்னகை புரிந்தாள். சிறைப் பட்டான். நோயுற்றான். கண்ணொளி இழந்தான். காது கேளாமல் போனது. கேளாத காதுடையோன் சங்கும் சேமக் கலமும் ஒலிக்க, இறுதிப்பயணத்திற்குத் தயாரானான். கடமை மறவாத காலதூதுவர் அவன் உயிரைக் கவர்ந்து சென்றனர். "தாமிஸ்ரம்' எனும் நரகத்தில் வீழ்ந்தான். அங்கு ஆடையின்றி வாடையில் வாடினான். கோடையில் கொதித்தான். முள்படுக்கையில் உறங்கினான். முன்ஜென்ம பாவத்தின் வினைப் பயனால், பூவுலகில் புதுவுடல் பெற்றான். பிறக் கும்போதே அஷ்டகோணலுடைய உடலைப் பெற்றான். அவனைக் கண்டவர் அனைவரும் அருவருப்புற்றனர். ஊரார் அவனுக்கு "அஷ்டகோணன்' என்றே பெயரிட்டனர்.
தன்னைத்தானே வெறுத்து வாழ்கிறான். முற்பி றவியில், * பஸ்மாசுரன்போல் பெண்ணை போகப் பொருளாய் நினைத்து துன்புறுத்தியதால் இந்த கதி நேர்ந்தது. பத்தினியின் சாபம் பல நாள் தொடர்ந்து வரும். இனிவரும் மூன்று பிறவிகளிலும் அவனுக்கு சாப விமோசனமே கிடையாது.
* பஸ்மாசுரன்- சிவனை வேண்டித் தவமிருந்து, எவரையும் அழிக்கும் சக்தி பெற்றான். முடிவில் மோகினிமீது தகாத இச்சை கொண்டதால், தன்னைத்தானே எரித்துக்கொண்டு சாம்பலானான்.
(வளரும்)
செல்: 63819 58636
_______________
நாடி ரகசியம்
1. ஹஸ்த நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சந்திரனும் குருவும் கூடி, புதன் புனர்பூசம் மூன்றில் அமர்ந்தால் பிரபல எழுத்தாளராகும் யோகமுண்டு.
2. ஹஸ்த நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் செவ்வாயும், மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் சுக்கிரனும் அமைந்தால் ஜாதகர் நிதிநிறுவனத்தில் மேலாளர் ஆவார்.
3. ஹஸ்த நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சுக்கிரனும், கிருத்திகை முதல் பாதத்தில் செவ்வாயும் அமையும் ஜாதக அமைப்பைப் பெற்றவர் மதுவுக்கு அடிமையாவார்.
கேள்வி: கோட்சாரத்தில் கிரக சஞ்சாரப் பலன்களைத் துல்லியமாகக் காணும் முறையை "கந்தர்வ நாடி'யின் மூலம் விளக்கமுடியுமா?
பதில்: கோட்சாரத்தில் சந்திரன் இருக்கும் ராசியை அடிப்படையாகக் கொண்டே பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஒரு கிரகத்தின் பெயர்ச்சியன்று கோட்சாரச் சந்திரன் அவரவர் ஜென்ம ராசிக்கு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை எண்ண வேண்டும். அவ்வாறு எண்ணிவந்த தொகை 1, 6, 11 எனில், பெயர்ச்சியாகும் கிரகத்திற்குப் பெயர் ஸ்வர்ணமூர்த்தி. (தங்கம்). 100 சதவிகித நற்பலன்களைத் தருவார்; எண்ணிவந்த தொகை 2, 5, 9 எனில் ரஜத மூர்த்தி. (வெள்ளி). 75 சதவிகித நற்பலன்களைத் தருவார். எண்ணி வந்த தொகை 3, 7, 10 எனில் தாமிரமூர்த்தி. (செம்பு). 50 சதவிகித மத்திமப் பலன்களைத் தருவார்; எண்ணிவந்த தொகை 4, 8, 12 எனில் உலோக மூர்த்தி. (இரும்பு). 25 சதவிகித குறைந்த நற்பலன்களையே தருவார் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.