ஜோதிடத்தில் காலத்தினை வருடம், அயனம்,ருது, மாதம், வாரம், ஹோரை என்று பல பிரிவுகளாகப் பகுத்துள்ளார்கள். இந்த ஒவ்வொரு பிரிவுக்கும் வெவ்வேறு கிரகங்கள் ஆளுமை பெறுகின்றன. இதில் ஹோரையின் அதிபதியே அதிக வலிமையுள்ளவர். உத்தியோக ஹோரை (சூரியன்), அமுத ஹோரை (சந்திரன்), ஆரோக்கிய ஹோரை (செவ்வாய்), விருத்தி ஹோரை (புதன்), சுபஹோரை (குரு), சுக ஹோரை (சுக்கிரன்), அசுப ஹோரை (சனி). ஹோரைகளின் தன்மையையறிந்து, ஹோராதிபதிகளின் காரகத் துவத்தைக்கருத்திற்கொண்டு செயல்படுவதே நன்மை பயக்கும். வாராதிபதியும், ஹோராதிபதியும் ஒருவருக்கொருவர் நட்புடன் அமையும் காலத்தில் செய்யும் செயல்கள் வெற்றியைத் தேடித்தரும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

Advertisment

""சதுர்வேதியே! அறிவினால் அனைத்தையும் அடைந்திடலாகுமென எண்ணி இறுமாந்திடும் மாந்தர் சத்திய ஞானம் பெற்றுத் தெளிந்திடத் தாங்கள் உபதேசித்தருள வேண்டுகிறேன்'' என அன்னை சௌந்தர நாயகி பூவனநாதரை திருப்பூவனம் (இராமநாதபுரம்) எனும் திருத்தலத்தில் பணிந்துகேட்டாள்.

Advertisment

gg

வேதபுரிஸ்வரர் உரைத்தது-""அறிவென்பது முழுமைபெறாத ஞானம். வைத்தியனின் அறிவு மரணத்தை வெல்லாது. யோகியரின் ஞானமே மரணமில்லாத பெருவாழ்வு தரும். உயிரின் நிலையையும், மனதின் இயக்கத்தையும் கண்ணில் லாத தர்க்க சாத்திரத்தால் உணர்தலாகாது. கேணியில் வாழும் தவளை சமுத்திரம் அறியுமோ? தன் பாதையே தெரியாத யாத்ரிகன் ஊராருக்கு வழிகாட்டுதலாகுமோ? புலனறிவு அகம்பாவத்தை வளர்த்து அழிவைத் தரும். மெய்ஞ்ஞானமே ஆனந் தத்தைத் தரும். மண்பானையைப் பார்த்து அதனைச் செய்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என ஊகிப்பதைப் போல, இச்சடவுலகினைக் கொண்டு அதனைத் தோற்றுவித்தவன் ஒருவன் உளன் என்பதை உய்த்துணர்தலே பரம சத்தியம். நாம, ரூப, குண பேதங்களைக் கடந்துநிற்கும் அறிவே சுத்த ஞானம்.''

""சுந்தரரே! ஸம்ப்ராந்தம் எனும் தாண்டவத்தின் லயமாகிய பூரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், ஆயில்யம் மூன்றாம் பாதத்தில் சுக்கிரனும், மகம் முதல் பாதத்தில் புதனும், மகம் இரண்டாம் பாதத்தில் சூரியனும், சித்திரை முதல் பாதத்தில் சனியும், சித்திரை நான்காம் பாதத்தில் குருவும், அனுஷம் நான்காம் பாதத்தில் சந்திரனும், மூலம் நான்காம் பாதத்தில் செவ்வாயும் அமரும் அமைப்பைப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்''என மதுரையம்பதியில் இம்மையிலும் நன்மை தருபவராய் அருள்புரியும் சொக்கநாதரை அன்னை மத்தியபுரிநாயகி வேண்டிப் பணிந்தாள்.

Advertisment

dd

ஜாதகக்குறிப்பு: தொழுநோய்க்குக் காரக கிரகமாகிய புதனும், ராஜகிரகமான சூரியனும் ஆறாம் பாவத்தில் நிலைகொண்டு, லக்னம் சனியின் பார்வையிலிருந்து, லக்னாதிபதியும் குருவும் அஷ்டம ஸ்தானம் ஏறினால் தொழு நோயால் அங்கஹீனம் உண்டாகும்.

நாகநாதர் உரைத்தது-""விமலையே! இந்த ஜாதகன் மலையூர் என்ற ஊரில் ஒரு அந்தணக் குடும்பத்தில் பிறந்து குருநாதன் என்று பெயரிடப் பட்டான். இளம்பருவத்திலிருந்தே தீய குணங்களின் இருப்பிடமாய்த் திகழ்ந்தான்.

பெரியோர் சொல்லைப் புக்கணித்தலும், ஊராரைத் துன்புறுத்தலுமாக பொல்லாக் குணங்களைக் கொண்டி ருந்தான். அவன் செயல்களைத் தட்டிக்கேட்டதால் தன் தந்தையைக் கொன்றான். காலமாற்றத்தால் முதுமையை நோயும் மரணமும் முந்திக் கொண்டன. பூவுலகின் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு நரகம் சென்றான். காலசூத்திரம் எனும் நரகத்தில் ஆயிரமாண்டுகள் துன்புற்றபின், ஊணுடல் பெற்று பூவுலகம் புகுந்தான். பாகாயம் என்ற ஊரில் பிறந்தான். இளம் வயதிலேயே தொழுநோய் அவனைத் தொழு தேற்றது. உடலுறுப்புகளை இழந்து, உறவினா ரால் புறந்தள்ளப்பட்டான். *அவந்தி நகரத்து அந்தணன்போல் அவதியுறுகிறான். இந்த பாவத்திற்குப் பரிகாரமே இல்லை.''

(வளரும்)

செல்: 63819 58636

_______________

நாடி ரகசியம்

1. பூரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சனியும், உத்திரம் இரண்டாம் பாதத்தில் குருவும் அமர்ந்திருந்தால், ஜாதகருக்கு பிரபல்ய யோகத்தால் செல்வமும், செல்வாக்கும் குறைவின்றிக் கிடைக்கும்.

2. பூரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சந்திரனும், ரேவதி நான்காம் பாதத்தில் சுக்கிரனும் அமைந்தால் சுகபோக வாழ்வு உண்டாகும்

3. பூரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் புதனும், சதயம் மூன்றாம் பாதத்தில் சூரியனும் அமைந்து, சனியும் செவ்வாயும் இணைந்த "கங்கண அவயோக'மும் பெற்றால், அரசுக்கு விரோதியாகி சிறைசெல்வான்.

கேள்வி: ஜனன ஜாதகத்தைப் பரிசீலிப்பதற்கும், பிரசன்ன ஆரூடத்தில் பலன் காண்பதற்குமுள்ள வேறுபாட்டை "கந்தர்வ நாடி'யின் மூலம் விளக்கமுடியுமா?

பதில்: ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் வெற்றி- தோல்விகளை அறிய உதவும் ஜோதிடமுறையே பிரசன்ன ஆரூடம். ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் பிரச்சினைகளை, அவர்கள் கேள்வி கேட்கும் நேரத்தில் உதயமாகும் லக்னத்தின் அடிப்படையில் நவாம்ச லக்னம் கணித்து, கிரக நிலைகளைக் குறித்து பலன்கூறும் முறையே நஷ்ட ஜாதகப் பிரசன்னம். இதுதவிர, சோழிப் பிரசன்னம், தாம்பூலப் பிரசன்னம், ஜாமக்கோள் பிரசன்னம் என்று பலவிதமான பிரசன்ன ஜோதிட அணுகுமுறைகள் உள்ளன. பொதுவாக, ஓரா லக்னம், கடிகா லக்னம், ஆரூட லக்னம் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டே பிரசன்னஆரூடத்தின் கணக்கீடுகள் அமையும். காணாமல்போன பொருட்கள், நோய் மற்றும் கடன் தீரும் காலம், குற்றச் சம்பவங்கள் போன்றவற்றின் உண்மை நிலையை எளிதாக அறிய உதவுவதே பிரசன்ன ஆரூடத்தின் சிறப்பு. ஆனால், ஜனன ஜாதகத்தை ஆராயும்முறை சற்று மாறுபடும். ஜனன ஜாதகத்தைப் பரிசீலிக்கும்போது, ஜென்ம லக்னம், பாவ லக்னம், காரக லக்னம், ஆதர்சன லக்னம், ஆயுர் லக்னம், திரேக்காண லக்கினம், இந்து லக்னம் போன்ற பதினாறுவகையான லக்னங் களை ஆதாரமாகக்கொள்ள வேண்டும். ஜனன ஜாதக சோதனையிலும், பிரசன்ன ஆரூடத்திலும் அடிப்படையான ஜோதிட விதிகள் ஒன்றுதான் என்றாலும், அணுகுமுறை வேறுபடும். ஜென்ம லக்னம், ஐந்தாம் பாவம், ஒன்பதாம் பாவம் ஆகியவற்றின் அறுபத்து நான்கு மற்றும் எண்பத்தெட்டாவது நவாம்சத்தைக்கொண்டு கண்டறியும் கர்மவினையின் ஆணிவேரை ஜனன ஜாதகத்தின் துணைகொண்டு மட்டுமே அறியமுடியும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.