இதுவரை ஜோதிட உலகிற்கு
அறிமுகமாகாத புதிய தொடர்!
பொதுவாக, ஜாதகத்தின் பத்தாம் பாவத்தில் நான்கு கிரகங்கள் கூடியிருக்குமா னால் அது சந்நியாச யோகத் தைத் தரும். சந்நியாச யோகத் தைக் கொடுக்கும் கிரகங்கள் சூரியனோடு நெருக்கமாக இருந்து அஸ்தமனமாகி யிருந்தால், சந்நியாசியாக வாழ விருப்பம் கொண்டு, ஆனால் சந்நியாசியாக தீட்சை அடையாதவர்களாக இருப்பர். சந்நியாச யோகத் தைக் கொடுக்கும் கிரகங்கள் யுத்தத்தில் வெற்றி பெற்றும், வேறு கிரகங்களால் பார்க்கப் பட்டும் இருந்தால் சந்நியாசி யாக மாறி வாழ ஆசை மட்டும் இருக்கும். ஆனால், அவர்கள் சந்நியாசியாவதில்லை என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""வேதஸ்வரூபமே! முன்வினைப்பயனால் எல்லா உயிர்களும் இன்பதுன்பங்களை அனுபவிக்கின்றன என்றாலும், மானுடனே எப்போதும் நிறைவில்லாத மனநிலையில் வாழ்ந்து கவலையில் சிக்கித் தவிக்கிறான். இதற்கான காரணத்தைத் தாங்களே விளக் கியருள வேண்டுகிறேன்'' என அன்னை கருந் தடங்கண்ணி சிவக்கொழுந்தீசரை தீர்த்தன கிரி (கடலூர்) எனும் திருத்தலத்தில் பணிந்து கேட்டாள்.
கபாலீஸ்வரர் உரைத்தது- ""எந்த விலங்கும் தனக்குத்தானே விலங்கிட்டுக்கொள்வ தில்லை. மனிதன் மட்டுமே தன்னைத்தானே ஆசையால் சிறைப்படுத்திக்கொள்கிறான்.

தன் வாழ்க்கைக்குப்பின் உதவாத பொருட் செல்வத்தைத்தேடி வாழ்வை வீணாக்கிக் கொள்கிறான். ஆறடியில் அடங்குபவன் அகிலத்தையே ஆள நினைக் கிறான். பல காததூரம் பறந்து சேர்க்கும் தேனால், தேனீக்கு பயனென்ன? கூட்டில் சேர்த்த தேனை தீயர், கள்வர் கொள்வார். தேனியோ தீயில் கருகி சாகும். தன்னை யாரென அறியாது தீயிலிடும் உடலை நெய்யிட்டு வளர்ப்போர் போரிட்டு பொருள் தேடி சேர்ப்பார். அருள் சேர்க்க மாட்டார். உயிர் விட்டுப் போனபின், மாண்டவர் உடலைத் தீயிலிடும் உறவுகள் அவர் உடமை யைத் தீயிலிடுவாரோ? சக மனிதனையே வேட்டையாடு பவன் ஒருபோதும் மன அமைதி பெறமுடியாது.''
""அருள்மறையோனே! மதக்ஷலிதம் எனும் தாண்டவத்தின் லயமாகிய பூரட்டாதி நட்சத்திரத் தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், அப பரணி நான்காம் பாதத்தில் சந்திரனும், புனர்பூசம் நான்காம் பாதத்தில் புதனும், பூசம் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், பூசம் மூன்றாம் பாதத்தில் சூரியனும், மகம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், சித்திரை இரண்டாம் பாதத்தில் சனியும் குருவும் சேர்ந் திருக்கும் அமைப்பைப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என கஞ்சனூர் (தஞ்சை) எனும் திருத்தலத்தில் அருள்புரியும் அக்னீஸ்வரரை அன்னை கற்பகாம்பிகை வேண்டிப்பணிந்தாள்.
கச்சபேஸ்வரர் உரைத்தது- ""மலைமகளே! இந்த ஜாதகன் வரகூர் எனும் ஊரில் ஒரு செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்து தருமன் என்ற பெயர் பெற்றான். இளம்வயதில் ஏற்பட்ட கூடா நட்பால் தீய பழக்கங்களில் கட்டுண்டான்.
செல்வத்தால் செல்வாக்கு பெற்று ஊர்த்தலை வனானான். சடலத்தை உண்ணும் புழுபோல், நெறியற்ற காமத்தில் நெளிந்தான். அவன் வாழ்ந்த ஊரின் புறத்தே ஒரு பெண் சந்நியாசினி பரண் அமைத்து வசித்துவந்தார்.
மதிகெட்டு அந்த சந்நியா சினிமீது காம இச்சைக் கொண்ட தருமன், அதர்மன் ஆனான். தன் தீய நட்பின் துணைகொண்டு அந்தப் பெண் சந்நியா சியை மானபங்கப்படுத்தினான். புலிக்கூட்டத் தில் சிக்கிய புள்ளிமான்போல அந்த சந்நியாசினி மருண்டு செய்வதறியாது திகைத்தாள். முடிவில் தீயில் புகுந்து தூய்மையானாள். அவளது இறுதிமூச்சால் தர்மதேவதை வெகுண்டாள்.
தருமன் தீரா நோய்களுக்குத் தோழனானான்.
உயிர் அவன் உடலை வெறுத்து ஒதுக்கியது.
எமதூதரின் பிடியில் சிக்கி வஜ்ரகண்டகம் எனும் நரகத்தில் பலகாலம் துன்புற்றபின், வானுலகை விட்டு வையகம் புகுந்தான். இளமைப் பருவத் தில் கண்களை இழந்து இருள் உலகில் வாழ்ந்து துன்புறுகிறான்.
*திருமந்திரம் கூறும் நெறியை உணர்ந் திருந்தால் இந்த கதி நேர்ந்திருக்காது. இந்த சாபத் திற்கு ஏழு பிறவிகளில் விமோசனமே இல்லை.''
* திருமந்திரம்- "பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்க சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாய்ந்திடும்
சத்தியம் ஈது சதா நந்தி ஆணையே'
செல்: 63819 58636
_________
நாடி ரகசியம்
1.. பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், ரோகிணி இரண்டாம் பாதத்தில் சந்திரனும் அமையும் ஜாதகருக்குக் கலைத்துறையில் பெருமை சேரும்.
2.. பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் புதனும், ஹஸ்தம் முதல் பாதத்தில் லக்னமும் அமைந்தால் பாலாரிஷ்ட தோஷம் உண்டாகும்.
3. பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் செவ்வாயும் லக்னமும் சேர்ந்திருந்தால், செவ்வாய் தசை மாரகத்திற்கு ஒப்பான கண்டத்தைத் தரும்.
கேள்வி: போட்டிகளில் வெற்றி- தோல்வியை முன்கூட்டியே அறிவதற்கு பார்க்கப்படும் பிரசன்ன ஆரூட முறையை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?
பதில்: விளையாட்டுப் போட்டிகள், தொழில் போட்டிகள், போட்டித் தேர்வுகள், இராஜ்ஜியத்தைக் கைப்பற்றுவது போன்ற கேள்விகளுக்குப் பார்க்கப்படும் பிரசன்னங்கள் யுத்தப்பிரசன்னம்’என்னும் முறையில் கணிக்கப்படும். விவாகப் பிரசன்னம், ரோகப் பிரசன்னம், நஷ்டப் பிரசன்னம் முதலிய பதினெட்டுவிதமான பிரசன்னங்களிலும் வெவ்வேறுவிதமான அம்ச சக்கரங்கள் உபயோகப்படுத்தப்படு கின்றன.‘யுத்தப் பிரசன்னத்தில்’கோட்டசக்கரமே‘பிரதானமானது. அக்னி புராணத்தில் கூறப்படும் கோட்டை சக்கரமே பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகிறது. எதிரிக்கோட்டையை ஜெயிக்க நினைக்கும் அரசன், அந்தக் கோட்டை அரணின் பாதுகாப்பை மனதில்கொண்டே தன் போர் வியூகங்களை வகுத்துக்கொள்வான். அதேபோல் கோட்ட சக்கரத்தின் வழிகாட்டுதலை அறிந்து செயல்பட்டால் வெற்றிச்செல்வியின் அருளைப் பெறலாம். அபிஜித் உள்பட 28 நட்சத்திரங்களை மூன்று சதுரங்கள் மற்றும் எட்டுத் திக்கில் அமைத்து, நடப்பு கிரக நிலைகளை அந்த நட்சத்திரங்களில் அடக்கி, எந்த சதுரம் மற்றும் திக்கு வலுவாக உள்ளதென காணலாம். உதாரணமாக, உள்ளிருக்கும் மூன்றாம் சதுரம் வலுவாக இருந்து, வெளியிலிருந்து உள்வரும் பகை தோற்றுப் போகும், அதேபோல், வெளியிலிருந்து உள்வரும் திசை நட்சத்திரம் நாள், திதி போன்றவற்றை சரியாகத் தேர்ந்தெடுக்கும்பொழுது வெற்றி நிச்சயமாகும். கோட்டை சக்கரத்தையும், சங்கட சக்கரத்தையும் ஆராய்ந்தே ஒரு நிகழ்வில் வெற்றி- தோல்விகளைக் கணிக்கமுடியும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.