இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
84
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஒரே நாளில் ஒரே நட்சத்திரத்தில் பிறக்கும் இருவருக்கு, தசாபுக்திப் பலன்களில் மாற்றம் ஏற்படும். உதாரணத்திற்கு, பூச நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எல்லா தசைகளிலும் வரும் செவ்வாய் புக்தியும், இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு குரு புக்தியும், மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் களுக்கு சூரிய புக்தியும், நான்காம் பாதத் தில் பிறந்தவர்களுக்கு சந்திர புக்தியும் பாதகமான பலன்களையே தரும். இதே போல, ஒரே நட்சத்திரத்தில் இரவில் பிறந்த வருக்கும், பகலில் பிறந்தவருக்கும் தசாபுக்திப் பலன்கள் மாறுபடும். நவாம் சத்தில் சந்திரன் அமையும் நிலையைக் கொண்டே தசாபுக்திப் பலன்களை அறியலாம் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""விடையேறிய விமலரே! இன்ப மென்பது ஒன்றுதான் என்றாலும் சிற்றின்பம், பேரின்பம் என்று பிரித்துக்காண்பதன் காரணத்தை எளியோரும் உணருமாறு தாங்கள் விளக்கியருள வேண்டு கிறேன்'' என அன்னை ஒப்பிலா நாயகி, திருத்திணை எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மி
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
84
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஒரே நாளில் ஒரே நட்சத்திரத்தில் பிறக்கும் இருவருக்கு, தசாபுக்திப் பலன்களில் மாற்றம் ஏற்படும். உதாரணத்திற்கு, பூச நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எல்லா தசைகளிலும் வரும் செவ்வாய் புக்தியும், இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு குரு புக்தியும், மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் களுக்கு சூரிய புக்தியும், நான்காம் பாதத் தில் பிறந்தவர்களுக்கு சந்திர புக்தியும் பாதகமான பலன்களையே தரும். இதே போல, ஒரே நட்சத்திரத்தில் இரவில் பிறந்த வருக்கும், பகலில் பிறந்தவருக்கும் தசாபுக்திப் பலன்கள் மாறுபடும். நவாம் சத்தில் சந்திரன் அமையும் நிலையைக் கொண்டே தசாபுக்திப் பலன்களை அறியலாம் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""விடையேறிய விமலரே! இன்ப மென்பது ஒன்றுதான் என்றாலும் சிற்றின்பம், பேரின்பம் என்று பிரித்துக்காண்பதன் காரணத்தை எளியோரும் உணருமாறு தாங்கள் விளக்கியருள வேண்டு கிறேன்'' என அன்னை ஒப்பிலா நாயகி, திருத்திணை எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரரைப் பணிந்து கேட்டாள்.
சங்கரன் உரைத்தது- ""விருட்சம் (மரம்) நிழலில் இருந் தாலும், சூரியனை நோக்கியே கிளைகளைப் பரப்புதல்போல, பூமிக்குள்ளும் பயணித்து வேர்களை விஸ்தரிக்கும். மனமெனும் விருட்சத்தில் மேலான எண்ணங்களும், கீழ்மை குணங் களுமுண்டு. எல்லா உயிர்களும் எப்போதும் இன்பமெனும் சுகப்பிரம்மத்தை அடையவே விரும்புகின்றன. தன்னையறிதலும் இன்பம்; தன்னை மறத் தலும் இன்பம்தான். இன்ப மென்பது உயிரின் தாகம். ஞானி, ஆற்று நீரைப் பருகி தாகம் தணிபவர்போல தன்னையறிந்து பேரின்பம் கொள்கிறார்.
கள்ளுண்பவனும் காமுகனும் கடல்நீரைப் பருகி தாகம் மிகுத் தவர்போல தன்னை மறந்து சிற்றின் பத்தை சுகிக்கிறார்.
எதிலும் கட்டுப் படுதல் துன்பம்; விடுபடுதலே இன்பம்.''
""மகாதேவரே! "கருடப்லுதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய அனுஷ நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், ரேவதி இரண்டாம் பாதத்தில் குருவும், அபபரணி இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், அபபரணி மூன்றாம் பாதத்தில் சூரியனும், கிருத்திகை நான்காம் பாதத்தில் புதனும், மிருகசீரிடம் நான்காம் பாதத்தில் சந்திரனும் சனியும் சேர்ந்திருக்க, புனர்பூசம் நான்காம் பாதத்தில் செவ்வாய் அமரும் அமைப்பைப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று திருவல்லிக்கேணி திருத்தலத்தில் அருள் புரியும் ஸ்ரீதீர்த்தபாலீஸ்வரரை அன்னை மகாதிரிபுரசுந்தரி வேண்டிப் பணிந்தாள்.
கபாலிகர் உரைத்தது- ""கமலாம்பிகையே! இந்த ஜாதகி, முற்பிறவியில் யுக்தேஸ்வரி எனும் பெயருடன், தொண்டீஸ்வரம் என்ற ஊரில் வாழ்ந்துவந்தாள். அவள் இளம்வயது முதலே கபட எண்ணமும், கொடூர குணமும் கொண்டவளாய் விளங்கினாள். திருமண நாளில் மங்கள நாண் ஏற்றாள். புத்திரபாக்கியம் சுமந்தாள். சிலகாலம் கழித்து வாழ்க்கைத்துணைவரின் வற்புறுத்தலால், ஒரு ஆதரவற்ற குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கவேண்டிய கட்டாயத் திற்கு ஆளானாள். தீயில் மறைந்திருக்கும் புகைபோல் அவள் தீய எண்ணம் வெளிப்பட்டது. பெற்ற மகனுக்கு ஈடாக தத்துப்பிள்ளை சுகமாய் வளர்வது பொறுக்காமல், மாற்றான் தாய் மனப்பான்மை கொண்டாள். ஒருநாள் தந்திரமாய் தத்துப்பிள்ளையை விஷமிட்டுக் கொன்றாள். கால ஓட்டத்தில் கைம்பெண் ஆனாள். பெற்ற மகனையும் பிரிந்து தனிமரமானாள். கவலையின் இடிபாடுகளில் சிக்கிய அவள் மனம் மரணத்தை வரவேற்றது. கர்மவினைப் பயனால், "வைதரணி' எனும் நரகத்தில் அவள் உயிர் கருமார் கையில் அகப் பட்ட இரும்பினைப்போல் உருகி அடிபட்டது.
நரக தண்டனை முடிந்தபின், புதிய வார்ப்பில் பூலோகம் சென்றாள். நந்தினி என்று பெயரிடப் பட்டு, மதுரா நகரில் வளர்ந்தாள். இளமையில் உண்டான நோயால் தாயாகும் தகுதியை இழந்தாள். வாழ்வில் துன்பம் மட்டுமே துணையானது. ✶ பூதனிபோல் குழந்தையின் உணவில் விஷம் வைத்ததால் அவதியுறு கிறாள். இதற்குப் பரிகாரமே கிடையாது என்றுணர்வாயாக.''
✶ பூதனி- பகவான் கிருஷ்ணரின் செவிலித் தாய். கிருஷ்ணரை விஷம் வைத்துக் கொல்ல முயன்றதால் வடிவிழந்து வாழ்விழந்தாள்.
-பாகவதம்.
(வளரும்)
செல்: 63819 58636
_____________
நாடி ரகசியம்
1. அனுஷ நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் செவ்வாயும், ரோகிணி முதல் பாதத்தில் குருவும் அமையும் ஜாதகர் சகல இன்பங்களையும் பெறுவார்.
2. அனுஷ நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் குருவும், ரோகிணி முதல் பாதத்தில் சுக்கிரனும் அமையப்பெற்ற ஜாதகர் கணிதமேதை.
3. அனுஷ நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் புதனும், ரோகிணி முதல் பாதத்தில் லக்னமும் அமைந்தால், ஜாதகிக்கு திருமணத்தினால் செல்வமும், செல்வாக்கும் கிடைத்தாலும், தாம்பத்திய சுகம் குறையும்.
கேள்வி: ஆன்மிக சாதனைகளில் வெற்றிபெறுவதற்கான ஜாதக அமைப்பினை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?
பதில்: காலபுருஷனின் கர்ம ஸ்தானாதிபதியாகிய சனியும், பாக்கிய ஸ்தானாதிபதியான குருவும் ஒரு ஜாதகத்தில் சாதகமாக இருந்தால் மட்டுமே ஆன்மிக சாதனைகளில் வெற்றி பெறமுடியும். பொருள் சார்ந்த வாழ்க்கைக்கு புதனும், அருள் சார்ந்த வாழ்க்கைக்கு குருவும் முதன்மையானவர்கள். ஐந்தாம் பாவமும், ஒன்பதாம் பாவமும் வலுத்திருந்தால், ஆன்ம விசாரத்தில் ஈடுபடுதல் பயன் தரும். செவ்வாய், சுக்கிரன் வலுத்தால், ஆன்மிக சாதனையில் தடைகள் உண்டாகும். மோட்ச ஸ்தானமாகிய பன்னிரண்டாம் பாவம் சுபர்களின் பார்வை பெறுவதால், குருவின் தரிசனம் கைகூடும். சூரியன், சந்திரன், லக்னம் மீன ராசியுடன் தொடர்புகொண்டால் ஆன்மிகத்தால் சிறப்புண்டாகும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.