இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
50
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஒரு ஜாதகத்தில் லக்னம் அமையும் நட்சத்திரத்தின் பாதமே மிகவும் முக்கியமானது.
லக்ன பாகை இருக்கும் நட்சத் திர பாதம் நவாம்சத்தில் எந்த ராசியில் விழுகிறது என்றும், அந்த ராசி- லக்னம் நின்ற ராசிக்கு சாதகமா அல்லது பாதகமா என்றும் அறியவேண்டும். உதாரணத்திற்கு கிருத்திகை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் ரிஷப ராசியில் அமையும்.
அதன் நவாம்சம் மகர ராசியில் பொருந்தும். ஸ்திர ராசியாகிய ரிஷப ராசிக்கு ஒன்பதாம் வீடா கிய மகர ராசி பாதக ஸ்தானமாகும். லக்னம் சார்ந்திருக்கும் நட்சத்திர பாதம், நவாம்சத்தில் பாதக ஸ்தானத்தை அடைவது சிறப்பானதல்ல. மாறாக, அந்த ஜாதகருக்கு வாழ்வில் துன்பத்தை மட்டுமே தரும். ராசி அமைப் பையும், நவாம்ச சக்கரத்தை
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
50
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஒரு ஜாதகத்தில் லக்னம் அமையும் நட்சத்திரத்தின் பாதமே மிகவும் முக்கியமானது.
லக்ன பாகை இருக்கும் நட்சத் திர பாதம் நவாம்சத்தில் எந்த ராசியில் விழுகிறது என்றும், அந்த ராசி- லக்னம் நின்ற ராசிக்கு சாதகமா அல்லது பாதகமா என்றும் அறியவேண்டும். உதாரணத்திற்கு கிருத்திகை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் ரிஷப ராசியில் அமையும்.
அதன் நவாம்சம் மகர ராசியில் பொருந்தும். ஸ்திர ராசியாகிய ரிஷப ராசிக்கு ஒன்பதாம் வீடா கிய மகர ராசி பாதக ஸ்தானமாகும். லக்னம் சார்ந்திருக்கும் நட்சத்திர பாதம், நவாம்சத்தில் பாதக ஸ்தானத்தை அடைவது சிறப்பானதல்ல. மாறாக, அந்த ஜாதகருக்கு வாழ்வில் துன்பத்தை மட்டுமே தரும். ராசி அமைப் பையும், நவாம்ச சக்கரத்தை யும் ஒப்பிட்டு நோக்கி, ஜாதகரின் பிறவிப்பயனை அறியும் உபாயத்தை "கந்தர்வ நாடி' விளக்குகிறது.
""ஆதி சித்தரே! யோகிகளும், சாமானிய மனிதர்களாகவே பிறந்து, உலக அனுபவங்களைப் பெற்றே அனுபூதியடை கிறார்கள். அறிவில் எளியோரும் தங்கள் முயற்சியால் யோக மார்க் கத்தில் பயணிக்க முடியுமா?'' என அன்னை சௌந்தர நாயகி, திருவிசநல்லூர் எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு சிவயோக நாதரைப் பணிந்துகேட்டாள்.
யோகீஸ்வரர் உரைத்தது- ""ரசவாதத்தால் செம்பு சொர்ணமா வதைப்போல, யோகமார்க்கத்தின் பாதையை உணர்ந்தால் எவரும் யோகியாகலாம். யோக மார்க்கத்தில் பயணிக்க மனமெனும் குதிரையைக் கட்டுப்படுத்துவதே முதல் நிலையாகும். மண் குதிரை ஓடாது. மனக் குதிரை நில்லாது. குதிரைக்குக் கடிவாளம்போல அமைவது சரயோகமே. அதுவே மனதை ஒருநிலைப்படுத்தும் உபாயம். உயிரெனும் அக்னியை வளர்க்கும் காற்றே சரம். (மூச்சு). சாமானியன் ஊதுகுழலாகப் பயன்படுத்துவதை, யோகியோ நவ துவாரங்களை மூடித்திறந்து வேணுகானத்தை (புல்லாங்குழலின் இசை) இசைக்கிறான்.
சரமே ஸ்வரமாகிறது. "ஓம்' எனும் பிரணவத்தை நாபிக்கமலத் திலிருந்து இசைக்கும்போது, மூலக்கனல் மூண்டெழும். யோகி, பிரபஞ்சத்தின் சக்திப் பிரளயத்தில் தன்னை இணைத்துக்கொண்டு சகலமும் தானாகிறான். பின்னர் தானும் கரைந்து கடுவெளியில் வானாகிறான்.''
""கனகசபாபதியே! "சதுரம்' எனும் தாண்ட வத்தின் லயமாகிய ஆயில்ய நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், உத்திரம் முதல் பாதத்தில் குருவும், உத்திரம் இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், சதயம் முதல் பாதத்தில் சந்திரனும், ரேவதி நான்காம் பாதத்தில் சனியும், ரோகிணி மூன்றாம் பாதத்தில் புதனும், மிருகசீரிடத்தின் மூன்றாம் பாதத்தில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்திருக்க அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று திருமணஞ்சேரி எனும் திருத்தலத்தில் அருள்புரியும் அருள்வள்ள நாதரை அன்னை கோகிலாம்பிகை வினவினாள்.
ஊர்த்துவ தாண்டவர் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில் நிதிவேந்தன் எனும் பெயருடன் கேசவபுரம் என்ற ஊரில் வாழ்ந்தான். இளம்வயதில் கல்வியில் நாட்டம் குறைந்து, தீயோரின் நட்பு வளர்ந்தது. சில நாட்களிலேயே ஒரு சூதாட்டக் கழகத்தின் தலை வனானான். அவன் விரித்த பேராசை வலையில் பல இளைஞர்களும் அகப்பட்டு அறிவும், கைப் பொருளும் இழந்தனர். "ஒன்றெய்தி நூறிழக்கும்' சூதில், விளக்கில் வீழ்ந்த அந்துப்பூச்சிகளாய் பலரும் வாழ்விழந்தனர். நிதிவேந்தன் நிதியால் வேந்தனானான். ஒரு நாள், சூதாட்டக் கழகத் தில் ஏற்பட்ட கலகத்தில் தலையிழந்து உடல் சரிந்தான். பின் எமபுரியில் எழுந்தான். மூன்று எமதூதர்களின் கசையடியால் துவண்டான். முட்கள் நிறைந்த புதர்க்காடுகளில் இழுத்துச் செல்லப்பட்டு "ரௌரவம்' எனும் நரகத்தில் வதைபட்டான். சிறை மாற்றத்தால் பூலோகம் புகுந்தான். ஜெயபுரி என்ற ஊரில் பிறந்து, வசுதேவன் என்ற பெயரில் ஓவியனாய் வாழ்ந்து வந்தான். இளம்வயதில் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டான். முற்பிறவியில் இளைஞர் களை "கண்ணைக்கட்டிக் காட்டில்விட்டது போல்' சூதாட்டக்களத்தில் புகுத்தி பலரின் வாழ்வைக் கெடுத்ததால், அவனுடைய இனிய மாலை நேரங்கள், காட்சிகள் தெரியாத காரிருளாய் மாறின. விதியின் கைகளில் பகடைக் காயானான். வசதியற்றவர்களுக்கு கல்வி கிடைக்க வழிசெய்தால் நோயின் கடுமை குறையும்.''
(வளரும்)
செல்: 63819 58636