ஒரு ஜாதகர், வாழ்க்கையின் சில காலகட்டங்களில் மட்டும் ஒரு நலம்விரும்பியை அணுகி ஆலோசனை பெறுகிறார். அந்த ஜாதகரின் நடப்பு தசாபுக்தி நாதர், உபய ராசிகளுடன் தொடர்புகொண்டுள்ள காலமாகவே அது அமையும். பொதுவாக, மூன்று, ஆறு, ஒன்பது, பன்னிரண்டாம் பாவங்களின் தொடர்பு, நெருக்கடி நேரத்தில் ஆலோசனை பெறுவதைக் குறிக்கும். மூன்றாம் பாவம் கேள்வி கேட்பவரையும், ஒன்பதாம் பாவம் வழிகாட்டுபவரையும் குறிக்கும். ஆறாம் பாவமும் பன்னிரண்டாம் பாவமும் இழுபறி நிலையைக் குறிக்கும். அதனாலேயே காலபுருஷ லக்னமாகிய மேஷத்திற்கு மூன்று, ஆறு, ஒன்பது, பன்னிரண்டாம் வீடுகள் புத்திக்கதிபதியாகிய புதனுக்கும், வழிகாட்டும் குருவாகிய பிரகஸ்பதிக்கும் ஆட்சி வீடுகளாக அமைகின்றன. ஆலோசனை என்பது பிறர் சொல்லும் உபாயமாகவும், பிறரிடமிருந்து உபயமாகவும் கிடைப்பது. பிறரை அணுகி ஆலோசனை கேட்க ஒருவரைத்
ஒரு ஜாதகர், வாழ்க்கையின் சில காலகட்டங்களில் மட்டும் ஒரு நலம்விரும்பியை அணுகி ஆலோசனை பெறுகிறார். அந்த ஜாதகரின் நடப்பு தசாபுக்தி நாதர், உபய ராசிகளுடன் தொடர்புகொண்டுள்ள காலமாகவே அது அமையும். பொதுவாக, மூன்று, ஆறு, ஒன்பது, பன்னிரண்டாம் பாவங்களின் தொடர்பு, நெருக்கடி நேரத்தில் ஆலோசனை பெறுவதைக் குறிக்கும். மூன்றாம் பாவம் கேள்வி கேட்பவரையும், ஒன்பதாம் பாவம் வழிகாட்டுபவரையும் குறிக்கும். ஆறாம் பாவமும் பன்னிரண்டாம் பாவமும் இழுபறி நிலையைக் குறிக்கும். அதனாலேயே காலபுருஷ லக்னமாகிய மேஷத்திற்கு மூன்று, ஆறு, ஒன்பது, பன்னிரண்டாம் வீடுகள் புத்திக்கதிபதியாகிய புதனுக்கும், வழிகாட்டும் குருவாகிய பிரகஸ்பதிக்கும் ஆட்சி வீடுகளாக அமைகின்றன. ஆலோசனை என்பது பிறர் சொல்லும் உபாயமாகவும், பிறரிடமிருந்து உபயமாகவும் கிடைப்பது. பிறரை அணுகி ஆலோசனை கேட்க ஒருவரைத் தூண்டுவதே உபய ராசிகளோடு தொடர்புடைய கிரகங்கள் தான் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""பரஞ்சோதியே! கிடைத் தற்கரிய மானிடப்பிறவியில், மகான்களின் உபதேச சாரத்தைப்பெற்று உய்யுதல் ஆகாதோ? வேதாந்த முரசின் ஒலிக்கு செவிசாய்க்காத செவிட ராய் வாழ்ந்து, மறையறியாமல் மறைந்திடும் மானிடரின் நிலை பற்றித் தாங்கள் விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை ஞானாம்பிகை, தஞ்சாக்கூர் எனும் திருத்தலத்தில் உறையும் பரஞ் சோதி ஈஸ்வரரைப் பணிந்து கேட்டாள்.
ஞானேஸ்வரர் உரைத்தது- ""இருள் சூழ்ந்த உலகில் சந்திரனின் கிரணங்கள் ஒளி தருமென்றாலும், அவரவர் அகத்தில் (இல்லத்தில்) தீபத்தின் ஒளியில் வாழ்வர். ஞானிகளின் வாக்கு, சத்துவ குணத்தால் புறவுலக வாழ்வையே செம்மைப்படுத்தும். மனிதன் உறங் கும்போதும் விழித்திருக்கும் ஆன்மஜோதியை அகத்தில் தூண்டுவாரே அருளாளர் ஆவார்.
வீண் சொற்களின் கூட்டம் ஒரு பெரிய காடாகிய மதிகெட்டான் சோலை. செவிடராய் இருத்தல் அஞ்ஞானம். சொல்லறுத்து சும்மா இருத்தலே சுகப் பிரும்மம்.''
""கந்தரேஸ்வரரே! "ஹரிணப்லு தம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய உத்திராட நட்சத் திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும், உத்திரட்டாதி நான்காம் பாதத்தில் சந்திரனும், கார்த்திகை இரண்டாம் பாதத்தில் குருவும், மிருகசீரிடம் இரண்டாம் பாதத் தில் சுக்கிரனும், திருவாதிரை இரண்டாம் பாதத்தில் சூரியனும் புதனும் சேர்ந்திருக்க, புனர் பூசம் நான்காம் பாதத்தில் செவ் வாயும், ஆயில்யம் நான்காம் பாதத்தில் சனியும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று திருக்கோகர்ணம் எனும் திருத்தலத்தில் அருள்புரியும் மகாப லேஸ்வரரை அன்னை தாம்ரகௌரி வேண்டிப் பணிந்தாள்.
குறுங்காலீஸ்வரர் உரைத்தது- ""கௌமாரியே! இந்த ஜாதகன் முகவூர் எனும் ஊரில் பிறந்து, செங்கோடன் என்ற பெயர் பெற்றான். இளம்வயதில் துர்மந்திரங்களைக் கற்று, துஷ்ட தேவதைகளை உபாசித்து வந்தான்.
மிருகங்களை பலியிட்டு, தன் இச்சைகளைத் தீர்த்துக்கொண்டான். அபாயத்திலிருந்த உயிர்களின் அபயக்குரல் அன்னையை அழைத்தன. மறைக்கும் மேகங்களை விலக்கி ஆதவன் வெளிப்படுதல்போல, வெள்ளிடை மலையாய் தர்மதேவதை வெளிப்பட்டாள். காலமகள் அவன் செய்த அடாத செயலைக் கண்ணுற்றாள். காலம் கனியும்வரை காத் திருந்தாள். "ஆடு போதாது; ஆட்டு இடையனும் இரையாக வேண்டும்' என்று கேட்ட புலி போல, துர்தேவதைகள் அவன் உடலுக்கும் உலை வைத்தன. கிடக்கப்படுத்துக் கிடந்தொழிந்தான். உயிர், உடலின் உறவை வெறுத்து எமனின் வசிப்பிடத்திற்குச் சென்றது. "கும்பீபாகம்' எனும் நரகத்தில் கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் வாட்டி வதைக்கப்பட்டபின் ஐந்து கோசங்களைப் பெற்று அகிலம் புகுந்தான்.
"கண்டிகை மேடு' என்ற ஊரில் ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தான். விரும்பிய மங்கையை மணம்முடித்து மணவாளன் ஆனான். புத்திரனைக்காண ஆவலுற்றான்.
அவன் ஆசைகள் கருவிலேயே அழிந்துபோயின.
புத்திரபாக்கியமின்றி, புத்தி பேதலித்த வனாய் அலைகிறான். உயிர்களைக் கொல்லு தலானது, பாவச் செயல்கள் யாவற்றையும் ஒருங்கே தரும். * விதுர நீதியை அறிந்து கொள்ளாமையால், கொல்லாமை எனும் விரதத்தைக் கடைப்பிடிக்க மறந்தான். முற்பிறவி யில், உயிர்க்கொலை செய்யாமல் இருந் திருந்தால், இந்த துன்பியல் நிகழ்வுகள் நேர்ந் திருக்க மாட்டா. கோபத்ம பூஜையும் புத்ரகா மேஷ்டி யாகமும் செய்தால் குறை நீங்கும்.
* விதுர நீதி- உயிரினங்கள் அனைத்திற்கும் தீங்கிழையாமையை உறுதி செய்வதால் ஒருவன் அடையும் கனியை, ஆயிரம் வேள்விகளாலோ நோன்புகளாலோ அடைய முடியாது. -மகாபாரதம்.
(வளரும்)
செல்: 63819 58636