இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
51
ஒரு ஜாதகத்தில் கிரகங்களின் செயல்திறனை ஆராயும் போது, கிரக அவஸ்தைகளை அறியவேண்டியது அவசியம். கிரகம் நிற்கும் ராசியை ஐந்து பாகங்களாகப் பிரித்து, அந்த கிரகம் எந்த பகுதியிலுள்ளது என்பதைக் குறித்துக்கொள்ள வேண்டும். ஆண் ராசிகளில் (ஒற்றைப்படை) ராசியின் துவக்கம் முதல் பாலவம், குமாரம், யௌவனம், விருத்தம், மாரகம் என்ற வரிசையில், ஒவ்வொரு பகுதியும் ஆறு பாகைகளைக் கொண்டவை யாக அமையும். பெண் ராசிகளில் (இரட்டைப்படை). இந்த அமைப்பு தலைகீழாக அமையும். பாலவத்தில் இருக்கும் கிரகத்தின் செயல்கள் பயன் தராது. குமாரத்தில் இருக்கும் கிரகத்தின் செயல்களில் வேகம் இருந்தாலும் விவேகம் இருக் காது. யௌவனத்தில் இருக்கும் கிரகத்தின் செயல்கள் வேகமும் விவேகமும் சேர்ந்து சிறப்பாக அமையும். விருத்தத்தில் இருக்கும் கிரகம் அனுபவம் அதிகமும், செயல்திறனைக் குறை வாகவும் கொண்டதாக இருக்கும். மாரகத்தில் இருக்கும் கிரகம் செயலற்றுப்போகும். பஞ்சபட்சி சாத்திரத்தின் ஐந்தொழிலுக்கு (ஊண், நடை, அரசு, துயில், சாவு) ஒப்பானது.
இதுபோல, ஒரு ராசியில் பாவங்களும் கிரகங்களும் அமையும் பாகைகளைக்கொண்டே அந்த பாவ, கிரகங்களின் செயல் திறனை வரையறுக்கமுடியும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""அகிலாண்ட நாயகரே! ஆசைகளை விட்டொழித்தால் மட்டுமே முக்தியடையமுடியும் என்பதே உண்மை. பிரேமை என்பதும் ஆசையின் வெளிப்பாடே. ஆனாலும் பிரேம பக்தியு டையவர்கள் மீண்டும் பிறவாத நிலையை அடைகிறார்கள்.
இதன் சூட்சுமத்தை அறிவில் எளியோரும் புரிந்துகொள்ளு மாறு விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை மங்கள நாயகி, திருமண்ணிப்படிக்கரை எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு நீலகண்டேசரைப் பணிந்து கேட்டாள்.
முக்கண்ணன் உரைத்தது- ""கடல் நீரும், அதனருகே யுள்ள ஊற்று நீரும் தோற் றத்தில் ஒன்றாக இருந்தாலும் சுவையில் மாறுபடும்.
அதுபோல அழியும் பொருட் களின்மேல் ஏற்படும் பிரேமை யும், சச்சிதானந்தத்தால் உண்டாகும் பிரேம பக்தியும் ஒன்றல்ல. அறிவால் அறியப் படுபவையெல்லாம் அழியும். அறிவால் அறியப்படாத அறிவே பக்தி. "ஆப்தகாமம் ஆத்மகாமம் ஆகாமம் ரூபம் சோகாந்தரம்' (ஆசை பூர்த்தி யாவதால் திருப்தி யடைவது- பிரேமை; ஆசையே வராமல் திருப்தி யடைவதே பிரேம பக்தி.) தன்னலமற்ற பக்தியில் ஆழ்பவன் உயர்வற உயர் நலம் பெறுவான்.''
""ஜகதீசரே! "புஜங்காஞ் சிதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய ஆயில்ய நட்சத் திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், கேட்டை நான் காம் பாதத்தில் குருவும், பூராடம் முதல் பாதத்தில் செவ்வாயும், திருவோணம் நான்காம் பாதத்தில் சுக்கி ரனும், சதயம் மூன்றாம் பாதத் தில் சூரியனும், சதயம் நான்காம் பாதத்தில் சனியும், ரேவதி மூன்றாம் பாதத்தில் புதனும், திருவாதிரை முதல் பாதத்தில் சந்திரனும் அமையப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று திருவேட்களம் எனும் திருத்தலத்தில் அருள்புரியும் பாசுபதநாதரை அன்னை நல்லநாயகி வினவினாள்.
வள்ளல் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில் மேகநாதன் எனும் பெயருடன், விருஞ்சிபுரம் என்ற ஊரில் வாழ்ந்தான். இளம் வயதில் காமத்தில் நாட்டம் மிகுந்து, மனதில் தள்ளாட்டமுற்றான். பல பெண்டிரையும் ஏமாற்றி மணமுடித்தான். மேகநாதன் அதிகாமத்தால் மோகநாதனாக மாறி பல பெண்களின் வாழ்வையும் சீரழித்தான். இத னால், இவனை நம்பி வாழ்விழந்த பெண்கள் மனநோயாளிகளானார்கள். தவறான பெண்டிரையும் தீண்டினான். முடிவில் மேக நாதன் மேக நோயால் பெரு நாடி வீக்கமுற்று மாண்டான். எமதூதர்களின் பாசக்கயிற்றில் கட்டுண்டு, விலங்கினைப்போல் இழுத்துச்செல்லப்பட்டான். வழியெங்கும் முட்களாலான கதையினால் தாக்குண்டு, உடலில் சீழும் குருதியும் நிணமும் ஒழுகித் துன்புற்றான். அழுதாலும் தொழு தாலும் மனமிரங்காத கிங்கரர்கள், அந்த ஜீவனை எமனிடம் கொண்டு சேர்த்தனர். ஜீவனின் பாவத்தைக் கணக்கிட்டு, "அந்த தாமிஸ்ரம்' எனும் நரகத்தின் இருளில் அந்த கனாயத் தவித்தான்.
சிலகாலம் கழித்து, பாவப்பொதி சுமந்து மண்ணுலகில் பிறந்தான். மகிபாலன் என்று பெயரிடப்பட்டு, செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தான். மக்கட் செல்வமும் பெறவேண்டி ஒரு குணவதியை மணமுடித்தான். நாலாறு மாதத்தில் மனைவியை இழந்தான். பின்னர் அடுத்தடுத்து பல பெண்களையும் மணந்தான். இவன் மணமுடித்த எல்லா பெண்டிருக்கும் மங்கள நாண் பாசக்கயி றானது. ஊர் பழித்தது. புத்திர பாக்கியம் இல்லாமல் சந்ததியும் அழிந்தது. முற்பிறவி யில் வாழ்க்கைத் துணையை வஞ்சித்ததால் இப்பிறவியில் வாழ்க்கைத் துணையில்லாமல் தனிமரமாய் நிற்கிறான். இதற்குப் பரிகாரமே கிடையாது. பத்தினியின் சாபம் பல பிறவிகளிலும் தொடரும்.''
(வளரும்)
செல்: 63819 58636
_________
நாடி ரகசியம்
1. கடக லக்னக்காரர்களுக்கு, புனர்பூசம் நான்காம் பாதத்தில் குருவும், ரேவதி நான்காம் பாதத்தில் சனியும் இருக்க, மணவாழ்வில் அளவில்லாத மகிழ்ச்சி உண்டாகும்.
2. கடக லக்னமும், சதயம் மூன்றாம் பாதத்தில் சனியும், புனர்பூசம் மூன்றாம் பாதத்தில் சுக்கிரனும் அமையும் ஜாதகர்களுக்கு கடுமையான களத்திர தோஷம் உண்டாகும்.
3. கடக லக்னக்காரர்களுக்கு, அனுஷம் மூன்றாம் பாதத்தில் சனியும், திருவாதிரை மூன்றாம் பாதத்தில் சூரியனும் அமைந்தால் ஜாதகருக்கு திருமணவாழ்க்கை இனிக்காது.
கேள்வி: தசாபுக்திகளில், தசாநாதனும் புக்திநாதனும் எந்தெந்த பாவப் பலன்களைத் தருவார்கள்? இதைப்பற்றிய விளக்கம் "கந்தர்வ நாடி'யில் உள்ளதா?
பதில்: மனித உடலில் மிருகத்தின் மனதுடன் இருக்கும் ஒருவரின் செயல்பாடு, மிருகத்தைப்போன்றே இருக்கும். அதுபோல ஒரு பாவத்தின் அதிபதி அமரும் நட்சத்திரத்தின் அதிபதியே அந்த பாவத்தின் ஜீவகோள். அந்த ஜீவகோள் அமர்ந்த நட்சத்திர அதிபதியே அந்த பாவத்தின் சரீர கோள். சுயசாரம் பெற்ற கிரகத்திற்கு அவரே ஜீவகோள். அவர் அமையும் ராசியின் அதிபதியே சரீர கோள். உத்திர நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் அமரும் சூரியனுக்கும், பூரட்டாதியிலிருக்கும் குருவுக்கும், அவர்களே ஜீவனும் சரீரமும் ஆவார்கள். ஒரு கிரகம் தசை மற்றும் புக்தியை நடத்தும்போது, அந்த கிரகத்தின் ஜீவ, சரீர அதிபதிகள் எந்த பாவத்தையும் குணத்தையும் சார்ந்தவர்களோ, அந்த பாவத்தையும் குணத்தையுமே குறியிட்டுக் காட்டுவார்கள். உதாரணத்திற்கு, ஒரு ஜாதகத்தில் குரு உத்திரத்தில் அமர்ந்து, சூரியன், பரணியில் இருக்க, அந்த ஜாதகருக்கு குரு தசை நல்ல பலன்களைத் தராது. குருவின் குணம் சாத்வீகம். அவரின் ஜீவகிரகமாகிய சூரியனோ ராட்சசம்; சரீர கிரகமாகிய சுக்கிரனும் ராட்சசம் என்பதே இதன் காரணம். இதுவே "கந்தர்வ நாடி'யின் சூட்சுமம்.